Saturday, August 2, 2008

தொழிலாளர்களின் PF பணம் தனியாரிடம் ஒப்படைப்பு! கள்ளனிடமே சாவியைத் தந்த அயோக்கியத்தனம்! ஆகஸ்ட் 6ந் தேதி கண்டன ஆர்பாட்டம்!!

தொழிலாளர்களின் PF பணம் தனியாரிடம் ஒப்படைப்பு!
கள்ளனிடமே சாவியைத் தந்த அயோக்கியத்தனம்!
கண்டன ஆர்பாட்டம்!!
6.8.2008
காலை 10.00 மணி
மெம்மோரியல் ஹால், சென்னை
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தொடர்புக்கு
9444834519
9444442374

பெட்ரோல் டீசல் விலை உயர்வு - கொள்ளையடிப்பவர்கள் யார்?



Saturday, July 19, 2008

1...2...3...பாராளுமன்ற & சட்டமன்ற பன்னிகளை பிடியுங்கள்!


அடிமைசாசனமான 123 ஒப்பந்தத்தை தங்களது எஜமானன் அமெரிக்காவின் ஆணைப்படி இந்திய ஓட்டுப்பொறுக்கிகள் நிறைவேற்றி தற்போது அமுலுக்கு வரவிருக்கிறது.

நீங்கள் கேட்கலாம், ஒப்பந்தத்தை காங்கிரஸ்-திமுக-ராஷ்ரிய சனதா-பாமக போன்றவர்கள் தானே ஆதரிக்கின்றனர். சி.பி.எம், சி.பி.ஐ தான் அதனை எதிர்த்து தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறி வந்துட்டாங்க. பாசகாவும் அதன் அணிகளும் கூட எதிர்த்து வருகின்றனர். அப்பறம் எப்படி இந்திய ஓட்டுப்பொறுக்கிகள் அனைவரையும் அமெரிக்காவின் அடிமைகள் என்று சொல்ல முடியும் என்று.

இதனை விளக்க விவரங்களை கொடுக்கும் முன் ஒரே ஒரு கேள்வியினை போட்டு பதிலை தேடினாலே போதும்.

அந்த கேள்வி:

இந்திய-அமெரிக்க ராணுவ ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக வரும் இந்த 123 ஒப்பந்தம் 2005ம் ஆண்டு மத்திய அரசு கையெழுத்துயிட்டது. அப்போது இதனை எதிர்த்து மக்களிடம் பிரச்சாரமோ, கூட்டணி விலகலோ எந்த ஓட்டுப்பொறுக்கிக் கட்சி செய்தது?

இதற்கு பதிலை தேடினால் வருவது 'இல்லை'

இன்று எல்லா வேலைகளும் முடிந்து 123 ஒப்பந்தம் அமுலுக்கு வர வேண்டிய காலத்தில் இருக்கின்றோம்.

இப்ப 123 ஒப்பந்தம் மூலம் நம் நாடு அடையப்போவதை முதலில் பார்த்துவிட்டு ஓட்டுப்பொறுக்கிகளின் முகத்திரைகளை கிழிப்பது சரியாக இருக்கும்.

தற்போது மொத்த மின்சக்தி தேவையில் 3% ஆக உள்ள அணுமின்சார உற்பத்தியினை இன்னும் 15 ஆண்டுகளுக்கு பிறகு தேவையான மின்சக்தி தேவையில் 7% ஆக மாற்ற 3 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அணு உலைகளை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து வாங்குவது.

உலகம் முழுவதும் விற்காத இந்த அணு உலைகளை வெறும் 4% அளவு மின்சாரத்தை அதிகரிப்பதற்காக 3 லட்சம் கோடியினை கொடுத்து எந்த மடையனாவது வாங்குவானா...உலகிலேயே தோரியம் அதிகமாக இருக்கும் இரண்டாவது நாடான இந்தியாவில் தோரியத்தை விடுத்து யுரேனித்தை இப்படி வாங்குவானா... இதல மின்சாரத்தேவை அதிகரிக்கும் என்று மக்கள் வரிப்பணத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்வானா... என இந்திய ஓட்டுப்பொறுக்கிகளை சட்டையினை பிடிக்க வேண்டிய அளவிற்கு மேலே உள்ள பொருளாதார ரீதியான காரணம் ஒன்றே போதும்.

ஆனால் 123 ஒப்பந்தத்தின் - தாய் ஒப்பந்தமான இந்திய-அமெரிக்க ராணுவ ஒப்பந்தம் என்பது இந்தியாவை அமெரிக்காவின் அரசியல் ரீதியில் நிரந்தர அடிமையாக மாற்றும் பல்வேறு சரத்துகளுடன் அமுலுக்கு வருகிறது.

1. அமெரிக்காவிற்கு எவன் எதிரியோ அவன் இந்தியாவிற்கும் எதிரி, எவனெல்லாம் அமெரிக்காவின் நண்பனோ அவனெல்லாம் இந்தியாவின் நண்பன்.
இதனடிப்படையில் தான் ஈரானுக்கு எதிராக 2 முறை இந்தியா வாக்களித்தது.
2. நிமிட்ஸ் போன்ற அணுசக்தி கப்பல்களை இந்திய கடலோரத்தில் அனுமதிக்க வேண்டும்.
3. அவன் படைகள் தங்கும் இடமாக பேட்டை ரவுடியாக இந்தியா இருக்க வேண்டும்.
4. அவனுடன் ராணுவ ரீதியில் உதவிக்கு இந்திய படைகளை அனுப்ப வேண்டும்.


இப்படி பல சரத்துகளை கொண்டது.... சொல்லி மாளாது என்பதால் இத்துடன் முடிக்கலாம். இப்ப சொல்லுங்க, இவ்வளவு அடிமைத்தனங்களை கொண்டு உள்ள ஒப்பந்தத்தை நிறைவேற்றிய ஓட்டுப்பொறுக்கிகளை சட்டையினை மட்டும் பிடித்தால் போதுமா?

கல்வி கிடைக்கலை, வேலைவாய்ப்பு கிடைக்கலை, மருத்துவம் கிடைக்கலை, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு - பெட்ரோல் டீசல் விலையில் பாதி அளவு வரி - வீட்டுவாடகை உயர்வு இவை அனைத்தையும் மனதில் ஓட்டுவிட்டு மேலே உள்ள கேள்வியினை மனதில் எழுப்பி பாருங்கள்.... மானம் உள்ள ஒவ்வொருவரின் ரத்தமும் கொதிக்காமல் இருக்காது.

சரி ஓட்டுப்பொறுக்கிகளின் முகத்திரை இதோ..

பாஜக

இவன் தான் 123 ஒப்பந்ததின் ஆரம்ப கட்ட வேலைகளை பார்த்தவன். தற்போது கூட நாங்கள் ஆட்சிக்கு வந்தா இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற மாட்டோம் என்றா சொல்லுகிறான். கிடையாது, தற்போது உள்ள வடிவத்தில் நிறைவேற்றமாட்டோம் என்று தான் சொல்கிறான். அதிமுகவின் நிலைப்பாடும் இதுதான்.

போலிக்கம்யூனிஸ்டுகள்

4 ஆண்டுகளாக ஒப்பந்தத்தின் வேலைகள் அனைத்தும் நிறைவேறுவதற்கும், தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கும் ஆட்சியினை ஆதரித்து துணை புரிந்த கட்சி. தற்போது கூட ஒப்பந்தத்தை விளக்கும் இவன், இவையெல்லாம் மறுகாலனியாக்கத்தின் வெளிப்பாடு தான் என்பதை மட்டும் சொல்ல மாட்டான். மேலும் தான் ஆளும் மாநிலங்களில் இந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்தி மக்களை நேரிடையாக கொலை செய்தும் வருகிறான்.

திமுக,பாமக,ராஷ்ரிய ஜனதாதளம்:

இவைகள் பலமுறை ஆட்சிக்கு வந்து கொள்ளையடித்த பணத்தை விட மறுகாலனியாக்கத்திலேயே உச்சகட்ட ஒப்பந்தமான 123 ஆதரிப்பதன் மூலம் கொள்ளையடிக்க முடியும் என்பதால் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் நிரந்தர அடிமைகள்.

இதனாலதான் இன்று

சமாஜ்வாதி கட்சி- பணமும், அம்பானிக்கு சில சலுகைகளும் கொடுத்ததும் 'கோமாளி' கலாம் ஆதரிக்கும் ஒப்பந்தம் என தனது முந்தைய முடிவை மாற்றுகொண்டனர்.

தரகு முதலாளி அம்பானி எம்பிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் தருகிறான்.

கொலைகாரன் சிபு சோரன் அமைச்சர் பதவி கொடுத்ததும் ஆதரிக்கிறான்.

வானுர்தி நிலையத்திற்கு சரண்சிங் பெயரை வைத்தது அஜித் சிங் ஆதரிக்கிறார்.

இப்ப கூட எவனும் ஒப்பந்தத்தினை எதற்கு எதிர்க்கின்றோம் என்றோ, எதற்கு ஆதரிக்கிறோம் என்றோம் சொல்ல மாட்டேன் என்கிறானுங்க. காங்கிரசை நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கிறோம், எதிர்க்கிறோம் என சுருக்கி அடக்கி வாசித்து மக்களை ஏமாற்றும் தங்கள் மோசடிகளை தொடர்கின்றனர்.

இதுல கூடுதல் சேதி இது போன்ற ஒப்பந்தங்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டிய தேவையில்லை என்பது.

இப்போது சொல்லுங்கள் இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதையினை. பாராளுமன்றம் என்பது பன்றி தொழுவம் தான் என்பதற்கு இதைவிட ஆதாரம் வேண்டுமா?

ஒன்று மட்டும் உறுதி:

ஓட்டுப்பொறுக்கிகள் இன்று தப்பித்து கொள்ளலாம், ஆனால் இந்த நாட்டையும் மக்களையும் நேசிக்கும் கைகள் வசம், அன்று பாரிசிலிருந்து இன்று காத்மாண்டு வரை உயர்ந்து நிற்கும் கைகள் வசம் இந்திய நாடு வரும் போது ஏற்படுத்தப்படும் மக்கள் சர்வாதிகார மன்றங்கள் முன் தப்பிக்க முடியாது.

அப்போது பிறப்பிக்கப்படும் ஆணைதான் :

1....2.....3..... பாராளுமன்ற & சட்டமன்ற பன்னிகளை பிடியுங்கள்!

நன்றி: www.123-agreement.blogspot.com

Tuesday, July 15, 2008

அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்க தாசர்கள் அடம் பிடிப்பது ஏன்?


விவசாயப் பொருளாதார நெருக்கடியும் உணவு நெருக்கடியும் முற்றி, அவற்றின் விளைவாக விவசாயிகளின் எழுச்சியும் உணவுக் கலகங்களும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அடுத்தடுத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் நாடாளுமன்ற இடைத் தேர்தல்களிலும் படுதோல்விகளைக் கண்டு வருகிறது. இன்னும் பத்து மாதங்களில் கிரமமான கால முறைப்படியே தேர்தல்கள் வந்தால் கூட, மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பும் அருகிப் போய்விட்டது.


அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமலாக்குவதை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் கூட, மன்மோகன் சிங் தலைமையிலான மைய அரசுக்கு தாங்கள் அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம்; ஆட்சி கவிழ்ந்து விடும் என்று "இடதுசாரி'க் கூட்டணிக் கட்சிகள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளன. இருந்தபோதும், ""என்ன ஆனாலும் சரிதான்; பிரதமர் பதவியிலிருந்து விலக நேர்ந்தாலும், ஆட்சியே கவிழும் நிலை ஏற்பட்டாலும் அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டை அமலாக்கியே தீரவேண்டும்'' என்பதில் உறுதியாக இருக்கிறார், மன்மோகன் சிங். முதுகெலும்பே இல்லாத இந்த மண் புழுவுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு துணிச்சல்? உலகையே கட்டி ஆளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர் ஆணவத்தோடு அது கொடுக்கும் நிர்பந்தம், அதனிடம் இந்த அடிமை காட்டும் விசுவாசம் இவற்றின் வெளிப்பாடுதான் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எப்பõடுபட்டாவது நிறைவேற்றியே தீருவோம் என்று மன்மோகன் சிங் சோனியா கும்பல் அடம்பிடிப்பதன் இரகசியம். இதற்காக அந்தக் கும்பல் அடைந்த ஆதாயம் பற்றிய உண்மை பின்னொரு காலத்தில் அம்பலமாகும். அல்லது அணுசக்தி ஒப்பந்தத்தினால் போர்வெறி பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பீரங்கி வண்டிச் சக்கரத்தில் பிணைக்கப்பட்டு இந்த நாடு இழுபடும்போது பல உண்மைகள் தெரிய வரும்.


அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நலன்களுக்கு மிகமிக இன்றியமையாதது என்றும், இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலாக்கப்படாவிட்டால் இந்தியா ஒரு உலகப் பொருளாதார வல்லரசாக பாய்ந்து முன்னேறுவது தடைப்பட்டுப் போகும் என்றும் மன்மோகன் சோனியா கும்பல் மட்டுமல்ல, அதற்கு எதிர்த்தரப்பில் நிற்கும் அரசியல் எதிரிகளான அத்வானி மோடி கும்பல் கூட வாதிடுகிறது. ஆனால் உண்மையோ வேறுவிதமாக உள்ளது. ""இந்தியா தற்போது மொத்தம் 1,27,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு நிகர உற்பத்தி வளர்ச்சி விகிதப்படி 201617 ஆம் ஆண்டு 3,37,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையை எட்டிவிட வேண்டும். இந்த அளவு மின் உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை என்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி (யாருடைய நலனுக்கான பொருளாதார வளர்ச்சி என்பது ஒருபுறம் இருந்த போதிலும்) கடுமையாக பாதிக்கப்படும். கடுமையான எரிசக்தி (மின்சார) பற்றாக்குறை நெருக்கடி ஏற்படும்; அந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அதாவது நாட்டின் எதிர்கால எரிசக்தித் தேவையை நிறைவேற்றுவதற்கான அவசியத்துக்காகத்தான் அமெரிக்காவுடனான இந்த அணுசக்தி ஒப்பந்தம். இது முழுக்க முழுக்க பொருளாதார ரீதியிலான சிவிலியன் தேவைக்கான ஒப்பந்தம்தான். இராணுவ ரீதியிலானதோ, அரசு தந்திர ரீதியிலானதோ பிற பொருளாதார ரீதியிலானதோ இல்லை. அணுஆயுதத் தயாரிப்புக்கான சோதனை உட்பட இந்தியாவின் உள்நாட்டுவெளிநாட்டுக் கொள்கைகளைக் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடியதோ அல்ல'' என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.


இவர்கள் வாதிடுவதைப் போல அமெரிக்காவுடனான இந்திய அணுசக்தி ஒப்பந்தம் இந்திய நாட்டு நலன்களுக்கானது தான் என்றால், அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்போ, பின்போ நாட்டு மக்கள் முன் பகிரங்கமாக வைத்து, நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் திறந்த, விரிவான வாதங்கள் நடத்துவதற்கு பதில் முற்றிலும் இரகசியமாக சதித்தனமாக ஒப்பந்தம் போட்டுக் கொண்டது ஏன்? ஜூன் 25க்குள் சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு, பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டே தீரவேண்டும் என்று துடித்த மன்மோகன் சோனியா கும்பல், அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குக் கூட காட்ட மறுப்பது ஏன்? அந்நிய ஏகாதிபத்திய நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியும் அந்த இரகசிய ஒப்பந்த விவரம் இவர்களுக்கு தெரியக் கூடாதா? ""தேசிய நலன்களுக்கான இரகசிய உடன்பாடுகள் நிறைந்த'' தாகக் கூறப்படும் அந்த ஒப்பந்தம், உண்மையில் ஒரு தேசத் துரோக ஒப்பந்தம்தான். அதனால் மன்மோகன் சோனியா கும்பல் அதை இரகசியமாக வைப்பதிலும் அமலாக்குவதிலும் இவ்வளவு அக்கறை காட்டுகிறது.


இந்த உண்மை இந்து மதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் தெரியும். ஆனால், ""இந்திய தேசிய நலன்களுக்கான''தென்று ஏகபோக உரிமை கொண்டாடும் இந்த கும்பல், உண்மையில் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கவில்லை. இதைப் பகிரங்கமாகவே ஒப்புக் கொள்ளும் அக்கும்பல் அந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் ஆதாயத்தில் தனக்கும் ஒரு பங்கு வேண்டும் என்பதில்தான் குறியாக இருக்கிறது. ஒப்பந்தத்துக்குத் தாங்கள் எதிரானவர்கள் அல்ல; தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அணுஆயுதப் பரிசோதனைக்கான இந்தியாவின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் மறுபரிசீலனைக்குப் பிறகு ஒப்பந்தத்தை முடிப்போம் என்கிறது.


இதைப் போலத்தான், நாட்டின் மின் உற்பத்தித் தேவைக்கு மிகவும் இன்றியமையாதது என்று கூறி அமெரிக்காவின் ""என்ரான்'' நிறுவனத்துடன் (ஜனநாயக முற்போக்கு சக்திகளின்) கடும் எதிர்ப்பையும் மீறி ஒரு துரோகத்தனமான ஒப்பந்தம் போட்டுக் கொண்டது, மகாராட்டிராவிலும் மத்தியிலும் ஆட்சியில் இருந்த காங்கிரசு அரசு. அந்த ஒப்பந்தம் இலஞ்சஊழல் நிறைந்த தேச துரோகமென்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கும்பல் என்ரானுடன் மறுபேரம் பேசி மறுஒப்பந்தம் போட்டுக் கொண்டது. பின்னர் அந்தத் திட்டமே, இந்திய நாட்டை அமெரிக்க மின்நிறுவனம் பகற்கொள்ளையடிப்பது என்று நிரூபணமாகியது. இதைப்போன்றே துரோகமிழைத்து அமெரிக்காவுடனான மறுபேரம், மறுஒப்பந்தம் போட்டு ஆதாயம் அடையவே இந்து பாசிச ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கும்பல் துடிக்கிறது. அதனால், தற்போதைய ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக நாடகமாடிக் கொண்டே, ஒப்பந்தத்தை அமலாக்காமல் போனால் மன்மோகன் சிங்கின் நம்பகத்தன்மையும் அதிகாரமும் ஆளுமையும் பறிபோய் விடும் என்று உசுப்பேற்றி வருகிறது.


நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பராமரிப்பதற்கு மின் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்க வேண்டும் என்பது உண்மைதான் என்றபோதும், அதற்கு அணுசக்தி மின்உற்பத்திதான் ஒரே வழி, சிறந்த வழி என்பதும், அதையும் அமெரிக்காவுடனான ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அந்நாட்டிலிருந்து அணு உலைகளையும் அணுசக்திக்கான மூலப் பொருட்களை இறக்குமதி செய்துதான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதும் உண்மையல்ல.


2006ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி நாட்டின் மொத்த மின்உற்பத்தியில் 3 சதவீதம். அதாவது 3,900 மெகாவாட் மட்டுமே அணு மின்சக்தி ஆகும். இந்தியஅமெரிக்க அணுமின்சக்தி ஒப்பந்தம் முழுமையாகவும் சரியாகவும் அமலானால் கூட, 2016ஆம் ஆண்டில் மொத்த மின் உற்பத்தியான 3,36,000 மெகாவாட் என்ற அளவில் 6 சதவீதம் மட்டுமே — அதாவது 20,000 மெகாவாட் தான் அணு மின்சக்தியாக இருக்கும். இதுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகவும் இன்றியமையாததாகவும் இருக்கும் என்று அமெரிக்க தாசர்கள் புளுகித் தள்ளுகிறார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய அணு உலைகள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும். இதனால் அமெரிக்க ஏகபோக முதலாளிகளும் அவர்களின் கூட்டாளிகளான இந்தியத் தரகு முதலாளிகளும் கொழுப்பதற்கான வழிவகை செய்யப்படும்.


அதுமட்டுமல்ல, அணு மின் உற்பத்தி அமெரிக்காவிலேயே இலாபகரமானதாயில்லை என்பதால், கடந்த 30 ஆண்டுகளில் புதிய அணுமின் திட்டங்கள் எதுவும் அங்கு நிறுவப்படவேயில்லை. அங்கேயே காலாவதியாகிப்போன தொழில்நுட்ப அடிப்படையிலான கழித்துக் கட்டப்பட்ட அணுமின் உலைகளை நமது நாட்டின் தலையில் கட்டுவதற்கு அமெரிக்கா எத்தணிக்கிறது. அதோடு, இந்தியாவின் அணுமின் உற்பத்தி, மற்றும் அணுஆயுதச் சோதனை மற்றும் தயாரிப்புக்கான மூலப்பொருளான செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தி ஆகிய அனைத்தையும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, உலகப் போர் வெறியனான அமெரிக்காவின் உலக மேலாதிக்க யுத்ததந்திரத்தின் சேவகனாக இந்தியாவை மாற்றிக் கொள்வது ஆகிய உள்நோக்கங்களுக்காகவும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈடேற்றிக் கொள்ள முயலுகிறது.


இதற்கு நேர்மாறாக ஒப்பீட்டு ரீதியில் மலிவான செலவில், நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையானவாறு நீர்மின் சக்தி, அனல் மின்சக்தி மற்றும் சொந்த தொழில்நுட்ப அடிப்படையிலான அணு மின்சக்தி ஆகியவற்றை நமது நாடு சுயசார்பாகவே வளர்த்துக் கொள்ள முடியும் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அனல்மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி ஆதாரம் நமது நாட்டிலேயே இருக்கும் அதேசமயம், மொத்தம் 1,50,000 மெகாவாட் அளவு நீர்மின் உற்பத்திக்கான வாய்ப்பிருந்த போதும் 33,000 மெகாவாட் அளவே நீர்மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. நேபாளம், பூட்டானுடன் தகுந்த ஒப்பந்தங்கள் அடிப்படையில் 55,000 மெகாவாட் நீர்மின் சக்தியை இறக்குமதி செய்து கொள்ளவும் முடியும். ஈரானுடனான குழாய் வழி பெட்ரோலிய எரிவாயு இறக்குமதி திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதன் மூலம் நாட்டின் எரிசக்தித் தேவையை முற்றிலுமாகச் சமாளித்துவிட முடியும்.


இவ்வளவு இருந்தபோதும், அமெரிக்காவுடனான அடிமைத்தனமான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவது என்று மன்மோகன் சோனியா மட்டுமல்ல. அத்வானி மோடி முதலிய துரோகிகளும் உறுதியாக இருக்கின்றனர். யார் அமெரிக்க எஜமானனுடன் விசுவாசமாக நடந்து கொண்டு பேரங்கள் பேசி அதிக ஆதாயம் அடைவது என்பதில்தான் இவ்விரு கும்பல்களுக்கிடையில் வேறுபாடு உள்ளது. ஆனால் மதவாத சக்திகளை எதிர்ப்பதுதான் முதன்மையானது என்று கூறிக் கொண்டு போலி சோசலிச, போலி கம்யூனிச, போலி மார்க்சிச இடதுசாரிக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுடன் ஊடலும் கூடலுமான உறவு வைத்துக் கொண்டு, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கும் அதேசமயம், இந்த அரசு கவிழ்ந்து போகவும் விடமாட்டோம் என்று சந்தர்ப்பவாத நாடகமாடுகிறது. ஆரம்பத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகத் தொடங்கிய இடதுசாரி கூட்டணி, பிறகு அதன் அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், ஒப்பந்தம் குறித்த தமது கவலைகளை சந்தேகங்களைப் போக்க வேண்டும் என்றும் இறங்கி, இதற்காக ஒப்பந்தத்தையும், அமெரிக்காவின் ""ஹைட்'' சட்டத்தையும் ஆராய்வதற்கான கூட்டுக் கமிட்டி அமைப்பது என்பதை ஏற்றுக் கொண்டது. சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் நிபந்தனைகளை ஏற்கும் ஒப்பந்த நகல் தயாரிப்பதையும் ஏற்றுக் கொண்டது. இப்போது இந்த நகலை இறுதியாக்கி இந்தியா கையொப்பமிட்டு விட்டால் போதும்; அமெரிக்க நாடாளுமன்றம் இந்தியாவுடனான தனது அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றி விடும். அப்புறம் அது அமலுக்கு வந்துவிடும். இப்போது இந்த இறுதி நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவிடத்தான் இடதுசாரிக் கூட்டணி எத்தணிக்கிறது.


நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் எரிசக்தித் தேவையை எப்படி உத்தரவாதப்படுத்துவது என்ற அமெரிக்கத் தாசர்களின் வாதத்துக்குள் அரசியல் நிர்பந்தம் காரணமாக சிக்கிக் கொண்டு விட்ட இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளுக்கு இந்த விவகாரத்திலும் சமசரசரணடைவு தவிர வேறு வழி கிடையாது. ஆனால், நாட்டுக்குத் தேவையானது எரிசக்தித் தேவையை உத்தரவாதப்படுத்துவதல்ல; எரிசக்தித் துறையின் சுயசார்பும் இறையாண்மையும், மறுகாலனியாதிக்கத்திலிருந்து விடுதலையும்தான்.
· ஆர்.கே.
புதிய ஜனநாயகம் july 2008

அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!





1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டு வீசி 70,000 மக்களைக் கொன்று குவித்ததுடன் இன்றுவரை அங்கே பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றவர்களாகப் பிறக்கும் அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியது அமெரிக்கா. அதற்கு 3 நாட்களுக்குப் பிறகு இன்னொரு ஜப்பானிய நகரமான நாகசாகியில் தனது கொலைவெறியை அரங்கேற்றி 74,000 மக்களைக் கொன்று குவித்தது.

மனித குலத்தையே வேரறுக்கக் கூடிய இந்த அணு ஆயுதத்தை முதன்முதலில் மனிதன் மீது பிரயோகித்த பெருமையைத் தன்னுடைய தாக்கிக் கொண்டாலும், அந்த அணுசக்தியிலிருந்து பலன் பெற்று மின்சாரம் தயாரிக்கும் வழிமுறை அமெரிக்காவிடம் இல்லை. சோவியத் ரஷ்யாவில்தான் 1954 ஆம் ஆண்டு முதன் முதலில் அணுசக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 1951 ல் இருந்தே இந்தியாவில் அணுசக்தி குறித்த ஆராய்ச்சிகளையும், அணு உலைகளை அமைத்து அணுசக்தியை மக்கள் நலனுக்குப் பயன்படுத்துவது பற்றியும் இந்திய அணுசக்தித் துறையின் தந்தை என அழைக்கப்படும் ஹோமி பாபா திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளார்.

அப்போதிருந்தே உலக அளவில் அணுசக்தித் துறையில் மற்ற நாடுகளுடன் இந்தியா போட்டி போட்டு வளர்ந்து வருகிறது. இன்றளவும் அதிவேக ஈனுலைகள் என்ற அணுசக்தித் தொழில்நுட்பத்தில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. தோரியம் எனும் தனிமத்தைக் கொண்டு இயங்கக் கூடிய இந்த "அதிவேக ஈனுலைகள்" யுரேனியம் கொண்டு இயங்கும் மற்ற நாட்டு அணு உலைகளை விட 600 மடங்கு அதிக சக்தியைக் கொண்டது என்று முன்னாள் இந்திய அணுசக்தித்துறைத் தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி வேறெந்த நாட்டின் உதவியுமின்றி சொந்தநாட்டிலேயே தயாரித்து, இதுவரை இரண்டு முறை அணு குண்டு வெடித்துச் சோதனை நடத்தியுள்ளது இந்தியா.இவ்வாறு மின்சாரத் தேவைக்கான அணுசக்தி ஆராய்ச்சி தொடங்கி, பக்கத்து நாடுகளை மிரட்டி அணுகுண்டு வெடிப்பது வரை இந்தத் துறையில் சொந்தத் தொழில்நுட்பத்தையே இந்தியா பயன்படுத்தி வந்துள்ளது.

ரஷ்யாவின் உதவியுடன் கல்பாக்கத்திலும், அமெரிக்காவின் உதவியுடன் தாராப்பூரிலும் அணுமின் நிலையங்களை நிறுவினாலும் அவை முற்றிலும் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையாகவே இருந்துள்ளன.

..ஆனால் இப்போது '123 ஒப்பந்தம்' என்ற பெயரில் அமெரிக்காவுடன் இந்தியா செய்துள்ள அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆப்பறையும் விதத்தில் வந்துள்ளது.

இந்த ஒப்பந்ததின்படி அடுத்த 40 ஆண்டுகளுக்குத் இந்தியா அமெரிக்காவிடமிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்ளும். அப்படி இறக்குமதி செய்யும் யுரேனியத்தைக் கொண்டு மின்சாரம் மட்டுமே தயாரிக்க வேண்டும், அணுகுண்டு தயாரிக்கக் கூடாது. மீறி அணுகுண்டு தயாரித்தால் அமெரிக்கா கொடுத்த யுரேனியத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும். இந்த யுரேனியத்தை நம்பி இந்தியா பல லட்சம் கோடி செலவில் அணு உலைகளை உருவாக்கியிருந்தாலும் அது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அணுகுண்டு வெடிக்காவிட்டாலும் அமெரிக்காவின் அனைத்து ராணுவ நடவடிக்கைகளுக்கும், வெளிநாட்டுக் கொள்கைகளுக்கும் இந்தியா ஒத்துழைப்புத் தரவேண்டும்.

ஏற்கனவே இரண்டு முறை ஈரான் -க்கு எதிராக ஐ.நா வில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா வாக்களித்து உள்ளது.

இப்போது ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அவ்வாறு தாக்குதல் தொடுக்குமானால் அப்போது இந்தியா கூலிப்படை அனுப்பி உதவ வேண்டும்.

அதேபோல மற்ற நாடுகள் அனுமதிக்காத 'நிமிட்ஸ்' போர்க் கப்பலை இந்தியக் கடலோரத்தில் இந்தியா அனுமதித்து உள்ளது. அந்த கப்பல் போர்க்கழிவுகளை கொட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதேபோல எதிர்காலத்திலும் இதுபோன்ற கப்பல்களை தங்கு தடையின்றி வந்து போக அனுமதிக்க அமெரிக்கா நிர்பந்திக்கிறது.

அணு ஆராய்ச்சியை இந்திய விஞ்ஞானிகளைக் கொண்டு, குறைந்த விலைக்கு நடத்தித் தர அமெரிக்கா கோருகிறது.அணு உலைகளை கண்காணிக்க நிபுணர்குழுவினை இந்தியாவுக்குள் வந்து போக அணுமதிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறது..

இப்படிப்பட்ட நாசகார, மோசடியான ஒப்பந்தத்தை தாய்நாட்டின் மீது பற்றுக் கொண்ட யாரும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

ஆனால் அமெரிக்க அடிமை நாயாய் சேவகம் செய்யும் மன்மோகன் சிங் இதனை ஏற்று கொண்டுவிட்டார். மக்களையே சந்திக்காமல், தேர்தலிலேயே நிற்காமல் இந்த நாட்டின் பிரதம மந்திரியாய் உட்கார்ந்து கொண்டு இப்படி தாய்நாட்டை அமெரிக்காவுக்கு விலை பேசியுள்ளார்.

"நீ என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள், உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள். ஆனால் ஒப்பந்தத்தை திரும்ப பெற முடியாது. குறைந்த பட்சம் இது குறித்து விவாதம் செய்ய முடியாது." என்று மன்மோகன் சிங் கூறிகிறார்.

அமெரிக்க எஜமானன் போட்ட உத்தரவை இந்திய அடிமைகள் பரிசீலிப்பதா என்று இவர் விடும் அறிக்கைகளைப் படிக்கும் போது சிறிதளவேனும் தேசப்பற்றுடைய எவருக்கும் ரத்தம் கொதித்துப் போகும்.

இதையெல்லாம் விட்டுவிட்டு அணு குண்டு வெடிக்க முடியாது என்று கூறி இதனை எதிர்க்கிறது பா.ஜ.க. இந்த தேசவிரோத ஒப்பந்தம் நிறைவேறனுமா, வேண்டாமா என்று இவர்கள் கூறுவதில்லை. என்ன செய்ய முடியும், காங்கிரஸ் அல்சேஷன் என்றால் பா.ஜ.க டாபர்மேன் இல்லையா?

இந்த ஒப்பந்தத்தை குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவைத்ததே வாஜ்பாயிதான் என்று குட்டை உடைத்துவிட்டார் எம்.கே.நாராயணன் (இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) அத்தோடு இவர்களின் குலைக்கும் சத்தம் ஓய்ந்துவிட்டது.

"ஒப்பந்ததை ரத்து செய்யாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டிய போலிக் கம்யூனிஸ்டுகளைப் பார்த்து" மன்மோகன் சிங் "உங்களால் என்ன செய்ய முடியும், ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்வீர்கள்; வாங்கிக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார்.

எனது எஜமானனுக்குச் சேவை செய்ய முடியாத ஆட்சி இருந்தாலென்ன போனால் என்ன கருதுகிறார் போலும்.

இந்தப் பிரதமர் பதவி அமெரிக்கா எனக்குப் போட்ட பிச்சை, 123 ஒப்பந்தத்திற்காக அதனை இழக்கவும் நான் தயங்கமாட்டேன் என்று கூறிய உடன் போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு பா.ஜ.க வின் மதவெறி நினைவுக்கு வர ஆட்சியையெல்லாம் கவிழ்க்க மாட்டோம் சும்மா இது பற்றி விவாதம் மட்டும் பண்ணினால் போதும், ஓட்டெடுப்பு கூட வேண்டாம் என்று இறங்கிவந்தார்கள்.

ஆனால் மன்மோகன் சிங்கோ தான் பிடித்த அமெரிக்க உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டு சிறிது கூட இறங்காமல் உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே என விவாதம்கூட செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.

உடனே 'தோழர்கள்' கடுமையான விளைவுகள் நேரிடும் என்று திரும்பவும் லாவணிபாட ஆரம்பித்து விட்டனர்.

கடந்த 100 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட போர்களில் ஈடுபட்டு, உலகம் முழுவதிலும் பல லட்சம் மக்களைக் கொன்று குவித்த ஒரு ரத்தவெறி பிடித்த ஏகாதிபத்திய மிருகம் அமெரிக்கா. அதன் காலடியில் நமது நாட்டை,அதன் இறையாண்மையை, நமது எதிர்காலத்தை, மற்ற நாடுகளுடன் நமது உறவை அடமானம் வைக்கும் அடிமைச்சாசனம்தான் 123 ஒப்பந்தம்.

இந்த உண்மை எல்லா அரசியல்வாதிக்கும் தெரியும்.

நன்றி:கோபா

அமெரிக்க விசுவாசமே அடிமையின் சுவாசம்!

அக்டோபர் 9ஆம் நாள், ஹவதேரி என்ற இடத்தில் வடகொரியா வெற்றிகரமாக அணுசக்தி சோதனையை நடத்தியது. அச்செயல் கிழக்கு ஆசியாவின் அமைதிக்கும் உறுதிப்பாட்டுக்கும் பேராபத்தானது என்றும் கடும் கண்டனத்துக்குரிய இரகசியமான அணு ஆயுதப் பரவல் என்றும் முதன்முதலாகக் குரலெழுப்பிய நாடு இந்தியாதான். அதைத் தொடர்ந்து வடகொரியாவின் அண்டை நாடுகளும், உலகின் அணு ஆயுத வல்லரசுகளும் அதை அப்பட்டமான, மிக மோசமான ஆத்திரமூட்டும் செயல் என்று வன்மையாகச் சாடின. உடனடியாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு வடகொரியாவுக்கு எதிராக பல தடைகளை விதித்து, உலக வல்லரசுகளின் முன்பு மண்டியிடும்படி உத்திரவு போட்டது. வடகொரியா அதை ஏற்கவில்லை என்பது வேறு விசயம்.
..
ஆனால், இப்போது அணுசக்தி சோதனை நடத்தியதற்காக வடகொரியாவிற்கு எதிராக முதலில் தனது கடும் எதிர்ப்பைக் காட்டியது இந்தியாதான்; 1974இல் முதன்முறையாகவும் 1998இல் மீண்டும் அணுசக்தி சோதனை நடத்தியதன் மூலம் நீண்ட காலத்துக்குப் பிறகு அணு ஆயுதப் பரவலுக்குக் காரணமாக இருந்தது இந்தியாதான்; ஆனால், ""இந்தியாவோடு வடகொரியாவை ஒப்பிடவே கூடாது, இரண்டும் வேறு வேறு வகையான செய்கைகள்'' என்று மூர்க்கமாக வாதிடும் இந்தியா,
""இரகசியமான அணு ஆயுதப்பரவல்'' என்று சாடுகிறது. அதாவது, வடகொரியா தனது அணுசக்தி சோதனை முழுக்க முழுக்க தனது சொந்தத் தொழில்நுட்ப அடிப்படையிலானது என்று கூறியபோதிலும், அது பாகிஸ்தானுடன் கூட்டுச் சேர்ந்து நடத்தியது என்று சாதிக்கிறது, இந்தியா.
..
பாகிஸ்தானைவிட எல்லா இராணுவத் துறைகளிலும் வலிமையான நாடு இந்தியா என்று மூன்று போர்களில் இந்தியாவின் மேலாண்மை நிரூபிக்கப்பட்டு விட்டது. இருந்தபோதும் பாகிஸ்தானை உருட்டி மிரட்டிப் பணிய வைக்கவும், தெற்காசியாவில் தனது பிராந்தியத் துணை வல்லரசு மேலாதிக்க விரிவாக்க நலன்களுக்காகவும் இந்தியா மீண்டும் மீண்டும் அணுசக்தி சோதனைகளை நடத்தியது. ஆனால், இந்தியாவின் இந்தச் செயல், உடனடியாகவே பாகிஸ்தானையும் அணுசக்திச் சோதனையிலும் இரண்டு நாடுகளும் மேலும் மேலும் ஆயுதக் குவிப்பு போட்டியிலும் ஈடுபடவே வழிவகுத்தன.
..
இப்போது இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுமே அணு ஆயுத முனைகளைக் கொண்ட ஏவுகணை சோதனைகளும் உற்பத்திகளும் செய்வதில் ஒருவரை ஒருவர் விஞ்சுவதற்கான போட்டியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தெற்கு ஆசிய அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளின் அணு ஆயுதஏவுகணை சோதனைகளுக்கும் உற்பத்திக்கும் எவ்வித நியாயமான காரணங்களும் இல்லாத அதேசமயம், இவ்விரு நாடுகளின் எஜமானனாகவும் அணு ஆயுத மேல்நிலை வல்லரசாகவும் உள்ள அமெரிக்காவின் மேலாதிக்கப் போர்வெறிதான், வடகொரியாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனை மற்றும் உற்பத்தி முயற்சிகளுக்கு மூலகாரணமாகவும் தூண்டுதலாகவும் இருக்கிறது.
..
கம்யூனிச சீனா மற்றும் ரசிய சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் அணு ஆயுதக் கவசத்தின் கீழ் இருந்தவரை வடகொரியா அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகளில் இறங்கவில்லை. சீனாவில் முதலாளியம் நிலைநாட்டப்பட்ட பிறகு, அமெரிக்காவுடனான பனிப்போரில் சோவியத் ஒன்றியம் தோற்றுப்போன பிறகு, அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொண்ட வடகொரியா, 1985இல் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. 1992இல் சர்வதேச அணுசக்தி முகமையோடு ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டது. இதற்குக் காரணம் ஜப்பானிலும், கொரிய வளைகுடாவிலும் அமெரிக்கா குவித்து வைத்திருக்கும் அணு ஆயுதங்களை விலக்கிக் கொள்வதாக வாக்களித்தது. ஆனால் அமெரிக்கா அவ்வாறு செய்யாததோடு, வடகொரியாவில் உள்ள அணு ஆயுதம் அல்லாத வசதிகளையும் மேற்பார்வையிட வேண்டும் என்று நிர்பந்தித்து, ஆப்ஃகான், ஈராக்கோடு வடகொரியாவையும் சேர்த்து ""சாத்தான்களின் அச்சு நாடுகள்'' என்று அறிவித்தது. அமெரிக்காவின் ஆட்சி மாற்றத் திட்டத்துக்கான இலக்குகளில் ஒன்றாக வடகொரியாவை வைத்தது.
..
கொசாவோ, ஆப்ஃகான், ஈராக் என்று அடுத்தடுத்து பாசிச ஆக்கிரமிப்புப் போர்களை அமெரிக்கா தொடுத்ததோடு, வடகொரியாவும் அதன் தாக்குதலுக்கு இலக்காகும் என்று அச்சுறுத்தப்பட்டது. இந்த நிலையில் 2003ஆம் ஆண்டே அணு ஆயுதப்பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய வடகொரியா, அணு ஆயுத சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி வெற்றியும் கண்டுள்ளது.
..
""அணு ஆயுதப் போரில் வெல்லும் ஆற்றல் பெற்றிராத எந்தவொரு நாட்டு மக்களும் ஒரு சோகமான சாவையே எதிர்கொள்ள வேண்டி வரும்; அந்த நாட்டின் இறையாண்மை வெட்டிச் சிதைக்கப்படும். இது உலகின் பல்வேறு நாடுகளுக்கும், அமெரிக்காவின் காட்டாட்சி இரத்தம் சிந்தி புகட்டியுள்ள கசப்பான அனுபவம்'' என்று தமது அணு ஆயுதச் சோதனையை ஆறு நாட்களுக்கு முன்பே அறிவித்த வடகொரிய அயலுறவுத்துறை அமைச்சர் கூறினார். இது அமெரிக்க விசுவாசிகளான மன்மோகன் சிங்குகள் மறுக்க முடியாத அப்பட்டமான உண்மை நிலையாகும்.
..
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின்படியே கூட, ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் மோசமான அச்சுறுத்தல் வரும்போது, அந்த நாடு அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுவதற்குத் தடையில்லை. அதன் 10வது பிரிவின்படி, ""தனது நாட்டின் அதீத நலன்களுக்குக் குந்தகம் ஏற்படும் எனில், இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தோடு தொடர்புடைய மிகமிக முக்கியமான நிகழ்வுகள் நடந்துவிட்டதாக கருதினால், எந்தவொரு நாடும் தனது தேசிய இறையாண்மையைப் பயன்படுத்தி இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம். ஒப்பந்த நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சிலுக்கும் மூன்று மாதங்கள் முன்னதாக அந்த நாடு தனது விலகலைக் குறித்துத் தெரிவிக்க வேண்டும்.'' இங்கே குறிப்பிடப்படும் வகையிலான பேராபத்தை எதிர் கொண்டுள்ள வடகொரியா, மூன்றாண்டுகளுக்கு முன்னதாகவே அறிவித்து, அந்த தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகி விட்டது.
..
ஆனால், வடகொரியாவைப் போன்றதொரு ஆபத்து எதுவும் இல்லாத இந்தியா, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தையே ஏற்காத இந்தியா, 30 ஆண்டுகளுக்கு முன்பே அணு ஆயுதப் பரவலுக்குக் காரணமாக இருந்த இந்தியா, வடகொரியாவின் மிகவும் அவசியமான தற்காப்பு முயற்சியை கடுமையாகக் கண்டிக்கிறது. வடகொரியாவைப் போலவே, அமெரிக்க பாசிச ஆக்கிரமிப்புப் போர் அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ள ஈரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி முகாமையில் இந்தியா ஓட்டளித்திருக்கிறது. அதன்மூலம் அமெரிக்கா, ஈரானை உருட்டி மிரட்டவும் ஆக்கிரமிப்புப் போர்தொடுக்க சாக்குப் போக்குச் சொல்வதற்கும் துணை புரிந்திருக்கிறது. இதன் விளைவாக, ஈரானுடனான இந்தியாவுக்கான தரை வழி எண்ணெய்க் குழாய் திட்டம் முறிந்து போனபோதும், அமெரிக்க விசுவாசமே முக்கியமானது என்று கருதி அதன் நிர்பந்தத்துக்குப் பணிந்து போயுள்ளது.
..
அக்.9 அணு ஆயுத சோதனையின் மூலம், உலகின் அணு ஆயுத "வல்லரசு' நாடாகியிருக்கும் வடகொரியா, அந்த வரிசையில் எட்டாவது நாடுதான். ஏற்கெனவே, ஏழு நாடுகள் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் செய்து குவித்து வைத்திருக்கின்றன. இவை தவிர இருபது நாடுகளில் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் அமெரிக்கா நிறுத்தி வைத்திருக்கிறது. உலகின் பெருங்கடல்வழித் தடங்களில் கூட அமெரிக்கப் போர்க் கப்பல்கள் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் ஏராளமாகச் சுமந்து திரிகின்றன. அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் முற்றாக ஒழிப்பதற்கான வழிவகையின்றி, அணு ஆயுதப் பரவலுக்கு எதிராக வெறுங்கூச்சல் போடுவது, சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றது; பாசிசப் போர் வெறிபிடித்த அமெரிக்காவுக்குத் துணை போவதுதான்.
..
எண்பதற்கும் மேலான அமெரிக்க சி.ஐ.ஏ.வின் படுகொலை முயற்சிகளைக் கண்டும் அஞ்சாத, எண்பது வயதுக்கும் மேலான கிழவன் ஃபிடல் கேஸ்ட்ரோவும், அமெரிக்காவின் வாசலில் நின்று கொண்டு அதன் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷûக்கு சவால் விடும் வெனிசுலா அதிபர் சாவேசிடம் தெரியும் நெஞ்சுரம் கண்டு உலகமே வியக்கிறது.
..
ஆனால், இந்தியப் பிரதமர் மன்மோகனின் கோழைத்தனமும் துரோகத்தனமும் கண்டு உலகமே கைகொட்டிச் சிரிக்கிறது. ஈரானுக்கு எதிராக வாக்களிக்கும்படி அமெரிக்க அயலுறவுச் செயலர் கண்டலிசா ரைஸ் உத்தரவு போடுகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு உறுப்பினர் தேர்தலில் வெனிசுலாவுக்கு எதிராக வாக்களிக்கும்படி அதிபர் புஷ் தொலைபேசியில் கூப்பிட்டு மிரட்டுகிறார். மன்மோகன் சிங்கோ தண்டனிட்டு தலைமேற்கொண்டு செய்து முடிக்கிறார். மும்பை குண்டு வெடிப்பில் பாகிஸ்தான் உளவு நிறுவனத்தின் பங்கு குறித்த ஆதாரங்களை அமெரிக்க அதிகாரிகளின் காலடியில் சமர்ப்பிக்கிறது, இந்தியா ஏதோ அமெரிக்க சி.ஐ.ஏ.வுக்குத் தெரியாத இரகசியம் போல!
..
எல்லாம் அமெரிக்காவுடனான இந்தியாவின் இராணுவ ஆயுத ஒப்பந்தங்களை குறிப்பாக, அணுசக்தி ஒப்பந்தத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் என்று மன்மோகன் சிங்கும் அவரது கோயபல்சுகளும் பிரச்சாரம் செய்கின்றனர். இந்தியாவின் இந்த ஒப்பந்தமே எவ்வளவு துரோகத்தனமானதென்று இந்திய அணுசக்தி அறிஞர்களே கடும் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்; அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் திருத்தங்களே அதை பறைசாற்றுகின்றன (பார்க்க ஆக. 2006 புதிய ஜனநாயகம் தலையங்கம்). சரியாகச் சொல்வதானால், செத்துப் பிறந்த குழந்தையான இந்திய இறையாண்மைக்கு ""திவசம்'' கொடுக்கும் புரோகிதர் வேலையைத்தான் மன்மோகன் சிங் செய்து கொண்டிருக்கிறார்.
..
puthiyajananayagam 2006 Nov

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்- அம்பலமாகிறது அடிமைச் சாசனம்!

இந்தியாவின் எதிர்கால மின்சாரத் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யவிருக்கும் கற்பக விருட்சமாகவும் "இந்தியாவும் ஒரு அணுஆயுத வல்லரசுதான்' என்பதற்கு அமெரிக்காவின் வாயிலிருந்து கிடைத்த பிரம்மரிஷிப் பட்டமாகவும் மன்மோகன் சிங் கும்பலால் சித்தரிக்கப்பட்ட இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் உண்மை முகம் நான்கே மாதங்களில் அம்பலமாகியிருக்கிறது. தானாக அம்பலமாகவில்லை. 27 ஜூலை 2006 அன்று அமெரிக்க நாடாளுமன்றம் இந்த ஒப்பந்தத்தைச் சட்டமாக்குவதற்காக நிறைவேற்றியுள்ள திருத்தங்கள் இவற்றை அம்பலமாக்கியிருக்கின்றன. அவை பின்வரும் நிபந்தனைகளை விதிக்கின்றன:

""1. இந்தியா இனி அணுஆயுதங்கள் தயாரிக்கக் கூடாது; கைவசம் இருக்கின்ற அணுஆயுதங்களை மெல்ல மெல்ல அழிப்பதையும் இறுதியில் அணுஆயுதங்களே இல்லாமல் செய்வதையும் உத்திரவாதப்டுத்த வேண்டும். இது எந்த அளவுக்கு நிறைவேறியிருக்கிறது என்பது குறித்து அமெரிக்க அதிபர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

2. அணுஆயுதம் தயாரிப்பதற்குத் தேவையான மூலக்கூறுகளின் உற்பத்தியை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும். இந்தியா குறிப்பிட்ட கால இலக்கிற்குள் இந்த உற்பத்தியை நிறுத்துவதை அமெரிக்க அதிபர் உத்திரவாதப்படுத்த வேண்டும் என்பதுடன் இது குறித்தும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ஆண்டுதோறும் அதிபர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

3. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரவேண்டுமானால் அதற்கு முன் இந்தியாவின் அணு உலைகளை ஆய்வுக்கு உட்படுத்துவது தொடர்பாக சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடன் இந்தியா உடன்பாடு செய்து கொள்ள வேண்டும்.

4. இந்தியாவின் அணுசக்தித் திட்டங்கள், அவற்றின் உற்பத்தித் திறன், கையிலுள்ள அணு ஆயுதங்கள், அணுஆயுதம் தயாரிக்க உதவும் மூலக்கூறுகளின் கையிருப்பு, இந்தியாவில் ஆண்டுதோறும் வெட்டியெடுக்கப்படும் யுரேனியத்தின் அளவு ஆகிய எல்லா இரகசியங்கள் குறித்தும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் அமெரிக்க அதிபர் நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

5. அணு ஆயுதப் பரவல் தடுப்புக்காக அமெரிக்கா உருவாக்கியுள்ள (கட்டைப் பஞ்சாயத்து) அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக வேண்டும். 6. இரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.''
இவை மட்டுமின்றி, இந்த ஆண்டின் இறுதியில் கூடவிருக்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட்டில் நிறைவேற்றப்படுவதற்காகப் பின்வரும் திருத்தங்களும் தயாராக உள்ளன.

""1. இந்திய அணு உலைகள் அனைத்தையும் முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வராதவரை தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது.

2. 14 அணுசக்தி நிலையங்களை மட்டும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் கண்காணிப்புக்கு அனுமதிப்பதாக இந்தியா கூறியுள்ளதை ஏற்கவியலாது; மீதமுள்ள 8 அணுசக்தி நிலையங்களையும் கண்காணிப்புக்குள் கொண்டுவர வேண்டும்.

3. இரான் போன்ற அணுஆயுதமில்லாத நாடுகள் எத்தகைய கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனவோ, அதே விதமான கண்காணிப்புக்கு இந்தியாவும் உட்படவேண்டும்; இந்தியாவுக்கு அணுஆயுத நாடு என்ற சிறப்புத் தகுதியோ, விதிவிலக்கோ தரவியலாது.

4. சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் சோதனை மட்டுமின்றி அமெரிக்க அதிகாரிகளின் நேரடி சோதனைக்கும் இந்தியா உட்படவேண்டும்.

5. இந்தியாவுக்குச் செறிவூட்டப்பட்ட யுரேனியம் வழங்கலாமென அமெரிக்கா திருப்தியடையாத பட்சத்தில், யுரேனியம் விற்கும் பிற நாடுகளும் இந்தியாவிற்கு அதனை விற்பனை செய்யாமல் தடுக்க அமெரிக்க அரசு முயற்சிக்க வேண்டும்.''

சென்ற ஆண்டு ஜூன் 18ஆம் தேதி புஷ்ஷýம் மன்மோகனும் அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட கூட்டறிக்கையிலும் இந்த ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்ட புஷ் மன்மோகன் சிங் உடன்பாட்டிலும் பூடகமாக மறைக்கப்பட்டிருந்த அமெரிக்க மேலாதிக்க நோக்கங்களை இந்தத் "திருத்தங்கள்' வெளிக் கொண்டு வந்திருக்கின்றன.
""இந்தியாவின் இறையாண்மையையும் அணுசக்தி சுயசார்பையும் பாதிக்கின்ற எந்தவித நிபந்தனைகளுக்கும் உட்படமாட்டோம்'' என கடந்த மார்ச் மாதத்தில் இந்திய நாடாளுமன்றத்திற்கு உறுதிமொழி அளித்த மன்மோகன் சிங், அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 20 நாட்களாக இந்த திருத்தங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றபோது வாய் திறக்கவில்லை. ரசியாவில் நடைபெற்ற ஜி8 நாடுகளின் மாநாட்டிற்குச் சென்றிருந்த மன்மோகன் சிங்கிடம் தங்களது நிருபர் நிர்ப்பந்தித்துக் கேட்டபிறகுதான், திருத்தங்களின் சில அம்சங்கள் கவலையளிப்பதாக மன்மோகன் சிங் பதிலளித்தாரென்று தனது தலையங்கத்தில் (ஜூலை20) குறிப்பிடுகிறது. ""தி இந்து'' நாளேடு. அதன் பிறகு புஷ்ஷை சந்தித்த மன்மோகன் சிங், ""போட்ட ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக ஏன் மீறுகிறீர்கள்?'' என்று கேள்வி எழுப்பவில்லை. ""நாங்கள் ஒரு ஜனநாயக நாடு. நாங்கள் எங்களுடைய நாடாளுமன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. சில விசயங்கள் எங்களுக்கும் எங்கள் நாடாளுமன்றத்துக்கும் கவலை அளிக்கின்றன'' (இந்து, 18.7.06) என்று புஷ்ஷிடம் கவலை தெரிவித்தாராம். ஆவன செய்வதாக புஷ் உறுதியளித்துள்ளாராம்!
..
""அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதம் குறித்து நானும் இந்திய வெளியுறவுச் செயலர் சியாம்சரணும் ஜூலை 10ம் தேதியன்று பாரிசில் 5 மணிநேரம் பேசியிருக்கிறோம்'' என்று கூறி மன்மோகன் சிங் கும்பலின் குட்டை உடைத்துவிட்டார் அமெரிக்க வெளியுறவுத்துறை இணைச்செயலர் நிகோலஸ் பர்ன்ஸ். "ஆவன செய்வதாக'க் கூறிய புஷ்ஷின் வெள்ளை மாளிகையோ நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள திருத்தங்களை வரவேற்றிருக்கிறது. திரைமறைவு பேரங்கள் முடிந்துவிட்ட நிலையில் இந்திய மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் நாடகங்கள்தான் மன்மோகன் வெளியிடும் அறிக்கைகள் என்ற உண்மையை மன்மோகன் சிங்கே நிரூபிக்கிறார்.

அணுசக்திக் கமிசனின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநரும், சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் இந்தியப் பிரதிநிதியுமான ஏ.என். பிரசாத், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவரான ஏ.ஆர். கோபாலகிருஷ்ணன் என விஞ்ஞானிகள் அனைவரும் ஒருமித்த குரலில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துள்ளனர். அவர்களுடைய வாதங்கள் எதற்கும் மன்மோகன் கும்பல் பதிலளிக்கவில்லை. ""அனாவசியமாகப் பிரச்சினையை மிகைப்படுத்தாதீர்கள். செனட்டிலும் விவாதம் முடிந்து அமெரிக்க சட்டத்தின் இறுதி வடிவம் வரட்டும். அதில் ஏதாவது பிரச்சினை இருந்தால் நான் நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்கிறேன்'' என்பதுதான் மன்மோகன் சிங் கூறியுள்ள பதில்.

""அணு ஆயுதம் தயாரிக்கும் உரிமையைப் பறிப்பதால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கே ஆபத்து'' என்று கூச்சலிட்டது பாரதிய ஜனதா. ""சுயேச்சையான வெளியுறவுக் கொள்கை வகுக்க முடியாமல் செய்து இந்தியாவை அமெரிக்காவின் உலக யுத்த தந்திரத் திட்டத்தில் பிணைக்கிறது; அணுசக்தி சுயசார்பை அழிக்கிறது'' என்று கூறி இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக "நாடாளுமன்றத்தின் உணர்வை வெளிப்படுத்தும் தீர்மானத்தை'க் கொண்டுவரப் போவதாக "எச்சரித்தது' சி.பி.எம். கட்சி. ""அத்தகையதொரு தீர்மானம் கொண்டுவரப்பட்டால் நான் இந்த அரசில் இருக்க மாட்டேன், இந்த அரசாங்கமும் இருக்காது'' என்று பதிலுக்கு சி.பி.எம்.மை எச்சரித்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி. உடனே, தாங்கள் சி.பி.எம்.மின் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று நழுவியது பா.ஜ.க. ""அரசாங்கத்தை மிரட்டுவது எங்கள் நோக்கமல்ல, இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு சட்டகத்தை முன்மொழிவதுதான் எங்கள் நோக்கம்'' என்று விளக்கமளித்திருக்கிறார் "மார்க்சிஸ்டு' கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்.

புஷ் மன்மோகன் ஒப்பந்தம் என்பது சொக்கத்தங்கம் போலவும், அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் திருத்தங்கள்தான் பிரச்சினை என்பது போலவும் ஒரு பொய்ச்சித்திரம் ஓட்டுக்கட்சிகளாலும் ஊடகங்களாலும் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது. மாறாக, இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் அனைத்தையும் அமெரிக்க தூதர் முல்ஃபோர்டு, கன்டலிசா ரைஸ், நிகோலஸ் பர்ன்ஸ் போன்ற பல அதிகாரிகளும் மார்ச் ஒப்பந்தத்திற்கு முன்னதாகவே பேசியுள்ளனர். இவை தொடர்பாக மன்மோகன் சிங் கூறிய பொய்களும் அப்போதே அம்பலமாகி இருக்கின்றன. (பு.ஜ. மார்ச், ஏப்ரல் 2006)
நாடாளுமன்றத்துக்கு மட்டுமின்றி அமைச்சரவைக்குக் கூடத் தெரியாமல் ஜூன், 18, 2005 அன்று மன்மோகன் சிங் புஷ்ஷடன் இணைந்து அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட கூட்டறிக்கையும், ஜூன் 28,2005இல் பிரணாப் முகர்ஜி அமெரிக்காவில் கையெழுத்திட்ட இராணுவ ஒப்பந்தமும்தான் மார்ச் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படைகள். அந்த அடிப்படையில்தான் இரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி ஏஜென்சியில் இந்தியா வாக்களித்தது. இரானுடனான எரிவாயுக் குழாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டதற்கும் இதுதான் அடிப்படை. இந்தியாவின் அரசியல், பொருளாதார, இராணுவக் கொள்கைகள் இந்த அடிப்படையிலிருந்துதான் தீர்மானிக்கப்படுகின்றன.

ஆட்சியே போனாலும் ஒப்பந்தத்தை விடமுடியாது என்ற பிரணாப் முகர்ஜியின் மிரட்டலுக்கும், தேசிய கவுரவத்தின் மொத்தக் குத்தகைதாரர்களான பார்ப்பன பாசிஸ்டுகளின் "பல்டி'க்கும், அமெரிக்க ஒப்பந்தத்துக்கு ஆலோசனை வழங்குவதாக "மார்க்சிஸ்டுகள்' அடக்கி வாசிப்பதற்கும் வேறென்ன விளக்கம் இருக்கிறது? ஆசியாவுக்கான அமெரிக்க அடியாள் என்ற பதவியில் நியமனம் பெறுவதன் மூலம் மறுகாலனியாக்கத்தின் ஆதாயங்களைச் சுவைக்க வெறி பிடித்து அலைகின்றது இந்தியத் தரகு முதலாளிவர்க்கம். அதன் பொருட்டு "இறையாண்மை, சுயசார்பு' போன்ற பழைய உள்ளாடைகளை அவிழ்த்து வீசிவிட்டு அம்மணமாக நடனமாடவும் தயாராக இருக்கிறது. இநத நிர்வாண நிலையை எழுத்துபூர்வமாக உத்திரவாதப்படுத்த விரும்புகிறது அமெரிக்க வல்லரசு. ""நாமும் ஒரு வல்லரசு என்று கூறிக் கொள்வதால் அதைக் கொஞ்சம் இலைமறை காயாக செய்யக்கூடாதா?'' என்பதுதான் இப்போது நாடாளுமன்றத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் விவாதம். இந்தக் கேலிக்கூத்தின் முரண்நகையாக பத்தாண்டுகளுக்கு முன் பிரதமர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் அமெரிக்க உளவாளிகள் என்ற பிரச்சினையை எழுப்பியிருக்கிறார் "தேசபக்தர்' ஜஸ்வந்த் சிங். இப்போது பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருப்பவரே ஒரு அமெரிக்க உளவாளிதானே!
..
puthiyajananayagam 2006 aug

Tuesday, July 8, 2008

நேபாளம்:வர்க்கப் போராட்டத்தில் புதிய உத்திகள்

நேபாளப் புரட்சியைத் தலைமையேற்று வழிநடத்திய மாவோயிஸ்டுகள், அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் வெற்றியோடு சுயதிருப்தி அடைந்து முடங்கி விடவில்லை. இடைக்கால அரசில் பங்கேற்று முற்போக்கான சட்டங்களை இயற்றுவதன் மூலம் மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவி விட முடியும் என்று அவர்கள் கனவு காணவுமில்லை. ஒருபுறம், இடைக்கால அரசில் பங்கேற்று ஜனநாயகக் குடியரசை நிறுவ மேலிருந்து போராடி வரும் மாவோயிஸ்டுகள், மறுபுறம் மக்கள்திரள் போராட்டங்களைக் கட்டியமைத்து கீழிருந்தும் நிர்பந்தம் கொடுத்து புரட்சியைத் தொடர்கிறார்கள்.


நேபாளத்தில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டு, மன்னர் குடும்பம் அரண்மனையிலிருந்து வெளியேறி சாதாரணக் குடிமகனாக வாழவேண்டும் என்று மேலிருந்து சட்டம் இயற்றப்பட்ட போதிலும், அவர் தானாக வெளியேறிவிடவில்லை. கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்கள் தொடர்ந்த பின்னரே, மன்னர் குடும்பம் மூட்டை முடிச்சுகளோடு அரண்மனையை விட்டு வெளியேறியது. மேலிருந்து சட்டங்கள் இயற்றினால் மட்டும் போதாது; கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்களும் நிர்பந்தங்களும் எவ்வளவு அவசியம் என்பதை இது எடுப்பாக உணர்த்துகிறது.


தற்போது, இடைக்கால அரசை நிறுவுவதிலும் அமைச்சர் பதவிகளைப் பகிர்ந்து கொள்வதிலும் அரசியல் கட்சிகளுக்கிடையே முரண்பாடுகளும் இழுபறியும் நீடிக்கின்றன; மாவோயிஸ்டுகளுக்கு இதர அரசியல் கட்சிகள் பல்வேறு முட்டுக்கட்டைகள் போட்டு முடக்கத் துடிக்கின்றன; முந்தைய அரசின் பிரதமரான கொய்ராலா, பதவி விலக மறுக்கிறார். இவற்றையும், புதிய முற்போக்கான சட்டங்கள் இயற்றுவதையும் மேல்மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் உடன்பாடுகள் மூலம் மட்டும் தீர்வு காண முடியாது. கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்கள் நிர்பந்தங்கள் மூலமே பிற்போக்கு சக்திகளை வீழ்த்தி ஜனநாயகக் குடியரசை நிறுவ முடியும் என்பதையே நேபாள நிலைமைகள் படிப்பினையாக உணர்த்துகின்றன.


புரட்சியின் வளர்ச்சிப் போக்கில், இடைக்கால அரசில் பங்கேற்று மேலிருந்து போராடுவது என்ற மார்க்சியலெனினிய போர்த்தந்திர உத்தியை நேபாளத்தின் பருண்மையான நிலைமைக்கேற்ப செயல்படுத்தி வெற்றியைச் சாதித்துள்ள மாவோயிஸ்டுகள், அப்போர்த்தந்திர உத்தியின் வழியில் கீழிருந்தும் மக்கள்திரள் போராட்டங்களைத் தொடர்கின்றனர். நேபாள மாவோயிஸ்டு கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினரும் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தோழர் பாபுராம் பட்டாரய், அமெரிக்காவின் மேடிசன் குடிமக்கள் குழும வானொலிக்கு (WORT-FM) கடந்த மே 3ஆம் தேதியன்று அளித்த பேட்டியில், கீழிருந்து மக்கள்திரள் போராட்டங்களைத் தொடர வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். மனித இன வரலாற்று ஆய்வாளர்களான ஸ்டீபன் மைக்செல், மேரி டெஸ் செனே ஆகியோருக்கு அவர் அளித்த பேட்டி, இவ்வானொலியில் மே 4ஆம் தேதியன்று ஒலிபரப்பானது. இப்பேட்டி ""எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி'' என்ற ஆங்கில வார இதழிலும் (மே 1016, 2008) வெளிவந்துள்ளது. மிக விரிவான இந்தப் பேட்டியைச் சுருக்கி சாரத்தை மட்டும் இங்கே தொகுத்தளித்துள்ளோம்.


— ஆசிரியர் குழு



*இம் மே நாளில் தொழிலாளர்களுக்கு உங்கள் கட்சி விடுத்துள்ள செய்தி என்ன?


நேபாளத்தில் நாங்கள் முற்றிலும் சொந்தக் காலில் நின்று போராடி புரட்சியின் வெற்றியைச் சாதித்துள்ளோம். அதேசமயம், நாங்கள் எதிர் கொண்டுள்ள சவால்கள் ஏராளம். நேபாள பிற்போக்குவாதிகள் வரலாற்று அரங்கிலிருந்து வெகு எளிதில் விலகவிட மாட்டார்கள். அவர்கள் கடும் எதிர்த்தாக்குதலைத் தொடுக்கவே செய்வர். எனவே இந்தச் சவாலை நாங்கள் பாரதூரமானதாகக் கருதிச் செயல்பட வேண்டியுள்ளது. தூக்கியெறியப்பட்ட நிலப்பிரபுத்துவ பிற்போக்கு சக்திகளின் எதிர்த் தாக்குதலை முறியடிக்க தொழிலாளர்களும் உழைக்கும் வர்க்கத்தினரும் தேவையான தயாரிப்புகளைச் செய்ய வேண்டியுள்ளது.


அடுத்து, நாங்கள் ஒரு புதிய நேபாளத்தை உருவாக்க வேண்டும். சமாதானம், ஐக்கியம், முன்னேற்றத்தைக் கொண்ட ஒரு புதிய தேசிய ஒருமைப்பாட்டை நிறுவுவதில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை வீழ்த்தி, தொழிற்துறை உறவுகளை வளர்த்து சோசலிசத்தை நோக்கி முன்னேற தொழிலாளி வர்க்கம் தலைமையேற்க வேண்டும். இதுதான் தொழிலாளி வர்க்கத்தின் நீண்டகாலத் தேவைகளை நிறைவு செய்யும்.


தொழிலாளி வர்க்கத்துக்கும் உழைக்கும் மக்களுக்கும் இவ்விரு கடமைகளையே மே நாள் நிகழ்ச்சிகளில் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.


*இந்தத் திசையில் செயல்பட நீங்கள் என்ன நடைமுறைப் பணிகளை மேற்கொள்ளப் போகிறீர்கள்?


நாங்கள் தேர்தலில் வெற்றியைச் சாதித்துள்ள போதிலும், பிற்போக்கு சக்திகள் குறிப்பாக, ஏகாதிபத்தியவாதிகள் பல்வேறு இரகசிய சதிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவோயிஸ்டுகளிடம் அதிகாரத்தைக் கையளிக்கக் கூடாது என்று அவர்கள் முடியாட்சி சக்திகளையும் அதிகார வர்க்க முதலாளித்துவ கும்பலையும் தூண்டிவிட்டு, மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்து வருகிறார்கள். நேபாள மக்கள் இவற்றுக்கெதிராக ஏற்கெனவே பல போராட்டங்களை நடத்தி வந்துள்ள போதிலும், தொழிலாளி வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் இச்சதிகளை முறியடிக்க போராட்டத்துக்குத் தயாராக வேண்டும். அவசியமானால், வீதிகளில் இறங்கி போராடி இப்பிற்போக்கு சக்திகளை வீழ்த்த வேண்டும். நடைமுறையில் இதைச் சாதிக்க மக்கள் தயாராக வேண்டும்.


இரண்டாவதாக, எமது தலைமையில் புதிய அரசை நிறுவிய பிறகு, சில உடனடி நிவாரணங்களை உழைக்கும் வர்க்கத்துக்கும் ஏழை மக்களுக்கும் செய்ய வேண்டியுள்ளது. வறுமை, வேலையின்மை, புறக்கணிப்பு ஆகியவற்றால் நீண்டகாலமாக எமது மக்கள் வேதனைப்படுகிறார்கள். இதனைக் களைய, கூட்டுறவுச் சங்க கடைகள் எனும் வலைப்பின்னலின் மூலம் பொது விநியோக முறையை (ரேஷன்) விரிவாக்கி உறுதிப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம்.


அடுத்து, எமது கொள்கை அறிக்கையிலும், இடைக்கால சட்டத்திலும் குறிப்பிட்டுள்ளபடி கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகியன மக்களின் அடிப்படை உரிமைகள். புதிய அரசின் வரவுசெலவு திட்டத்தில் (பட்ஜெட்) இதற்கென முறையான நிதி ஒதுக்கீடு செய்து இதனைச் சாதிக்கவும் தீர்மானித்துள்ளோம். இவற்றைச் செயல்படுத்த, நடைமுறையில் மக்கள் பங்கேற்பும் ஈடுபாடும் மிக அவசியமாகும். அவர்கள் எமது கட்சிக்கும் எதிர்கால அரசாங்கத்துக்கும் ஆலோசனைகள் வழங்க வேண்டும்; எமது கட்சியும் அரசாங்கமும் சரியான திசையில் செயல்படுகிறதா என்பதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று நாங்கள் மக்களிடம் தெரிவித்துள்ளோம். உழைக்கும் வர்க்கத்தினரும் ஏழை மக்களும் கீழிருந்து நிர்பந்தம் செய்யாவிடில், அரசாங்கம் சரியான திசையில் இயங்க முடியாது. இது தொடர்பாக, வரலாற்றில் ஏராளமான எதிர்மறை படிப்பினைகள் உள்ளன. எனவே, உழைக்கும் மக்கள் விழிப்புடன் கண்காணித்து, தங்கள் அதிகாரத்தைச் செயல்படுத்தி கீழிருந்து அரசைக் கட்டுப்படுத்தி இயக்காவிட்டால், அரசாங்கமானது திசை விலகிப் போய்விடும்; தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போய் விடும்.


*கீழிருந்து நிர்பந்தம் கொடுத்து மக்கள் செயல்படுவதற்கு நீங்கள் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறீர்கள்?


முதலாவதாக, நாங்கள் அரசாங்கத்தில் பங்கேற்றுள்ள போதிலும் இந்த அரசாங்கமானது முழுமையான புரட்சிகர அரசாங்கமல்ல; இடைக்கால அரசாங்கம்தான். எனவே, முதன்மை எதிரியை வீழ்த்த நாங்கள் இதர வர்க்கங்களுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டியுள்ளது. எனினும், இதர வர்க்கங்களைவிட நாங்கள் முன்னிலையில் நிற்க விழைகி றோம். அரசின் உள்ளிருந்தே செயல்பட்டு அதன் தன்மையை மாற்றியமைக்க விழைகிறோம். இதன் காரணமாகவே, அரசுக்கு வெளியே மக்களின் நிர்பந்தத்தை நாங்கள் கட்டியமைக்க வேண்டியுள்ளது. எங்கள் கட்சித் தலைமை முழுவதும் இந்த அரசாங்கத்தில் பங்கேற்று விடவில்லை. ஒரு பிரிவினர் மட்டுமே அரசாங்கத்தில் பங்கேற்றுள்ளோம். மற்றொரு பிரிவினர் அரசுக்கு வெளியே மக்களைத் தொடர்ந்து அமைப்பாக்கி, போராட்டத்துக்குத் தயார்படுத்தி வருகிறோம். இந்தத் திசை வழியிலேயே எமது கட்சி செயல்படுகிறது.


புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க அரசாங்கத்துக்கு உள்ளிருந்தே போராடுவது தற்போது முதன்மையான போராட்ட வடிவமாக உள்ளது. அதேசமயம், எமது கட்சி அரசாங்கத்துக்கு வெளியிலிருந்தும் போராடும். எனவேதான் எமது மையக் குழுவின் அனைத்து தோழர்களும் இத்தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்படாமல், ஒரு பிரிவினர் மட்டும் தேர்தலில் போட்டியிட்டோம். எமது கட்சியின் மற்றொரு பிரிவினர் அரசுக்கு வெளியே மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பார்கள். அதன் மூலம் அரசுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தி, மக்களாட்சிக்கான அரசியல் சட்டத்தை உருவாக்க துணை செய்வார்கள்.


இதுதவிர, நாங்கள் சில மக்கள்திரள் அமைப்புகள் நிறுவனங்களை உருவாக்க முயற்சித்து வருகிறோம். இதற்கான பருண்மையான வடிவங்களை இன்னும் தீர்மானிக்காத போதிலும், கொள்கையளவில் இது பற்றிய முடிவுகளை எடுத்துள்ளோம்.


*உங்களது பொருளாதாரக் கொள்கைப்படி, அனைத்துலக மூலதனத்தின் சவாலை எதிர்த்து நின்று, உள்நாட்டு மூலதனத்தைத் தக்க வைத்துக் கொண்டு முன்னேற என்ன வழிமுறைகளை மேற்கொள்ளப் போகிறீர்கள்?


உள்நாட்டு தேசிய மூலதனத்தைத் திரட்டுவதற்கே நாங்கள் அழுத்தம் கொடுப்போம். எமது அடிப்படைத் தேவைகளுக்காக நாங்கள் உள்நாட்டு மூலாதாரங்களைத் திரட்டாவிட்டால், நாங்கள் அனைத்துலக மூலதனத்தால் உருட்டி மிரட்டப்படுவோம். எனவே, உள்நாட்டு மூலாதாரங்களைத் திரட்டுவதே எமது முதன்மையான பணி.


அதேசமயம், நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு அடிக்கட்டுமான வளர்ச்சிக்கு எமக்கு அந்நிய முதலீடுகள் கொஞ்சம் தேவைப்படுகிறது. அதற்கான அந்நிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அவை நிர்பந்தம் கொடுக்கும் என்பது உண்மைதான். அதேசமயம், அந்நிறுவனங்களுக்கும் சில நிர்பந்தங்கள் உள்ளன. அவை எம்முடன் ஒத்துழைக்க மறுத்தால் அவை மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும்.


மேலும், அந்நிய மூலதனங்களுக்கு போர்த்தந்திர முக்கியத்துவமிக்க நீண்டகால நலன்களும் உள்ளன. அவை சீனா மற்றும் இந்தியாவின் பெரும் சந்தையைக் குறி வைத்துள்ளன. சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் போர்த்தந்திர முக்கியத்துவமுடைய இடத்தில் நேபாளம் அமைந்துள்ளது. நேபாளத்தில் அமைதியான நிலைமை இல்லாவிட்டால், அது இந்தியசீன சந்தைகளையும் பாதிக்கும் என்பது அவற்றுக்குத் தெரியும். இந்த வழியில் நேபாளத்தில் அவையும் தமது சொந்த நலன்களைக் கொண்டுள்ளன.


உள்நாட்டு மூலாதாரங்களைச் சார்ந்து நிற்கும் அதேசமயம், அடிக்கட்டுமான வளர்ச்சிக்கான அந்நிய முதலீட்டைப் பெற நாங்கள் எச்சரிக்கையுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளோம். மக்கள் போராட்டங்கள் மூலம், அந்நிய நிறுவனங்களின் நிர்பந்தங்களிலிருந்து எமது பொருளாதாரம் விடுதலையடைய முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.


*உங்களது பொருளாதாரக் கொள்கையைச் செயல்படுத்த உழைக்கும் வர்க்கத்தை குறிப்பாக உங்களது தொழிற்சங்கத்தை எவ்வாறு ஈடுபடுத்துவீர்கள்?


நேபாளத்தில் எமது கட்சியின் தலைமையிலுள்ள தொழிற்சங்கங்கள் மிக வலுவானவை. அனைத்து ஆலைகள் தொழிற்கூடங்களில் எமது தொழிற்சங்கங்களே தொழிலாளர்களை அமைப்பு ரீதியாகத் திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளன.


நேபாளத்தில் புல்லுருவித்தனமான மூலதனமே அதிகாரத்தில் உள்ளது. இதை தரகுஅதிகார வர்க்க முதலாளித்துவம் என்று நாங்கள் குறிப்பிடுகிறோம். இந்த வகையான முதலாளித்துவம் தொழிலுற்பத்தியையோ வேலை வாய்ப்பையோ பெருக்குவதில்லை. சிதைக்கப்பட்ட, ஏகாதிபத்திய சார்புத் தன்மை கொண்ட இத்தகைய முதலாளித்துவத்தை நாங்கள் எதிர்க்கிறோம். நேபாளத்திலுள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளில் எமது தொழிற்சங்கம் கூலி உயர்வு வேலை நிலைமைகளுக்காகப் போராட்டங்களை நடத்தியபோது, சில விடுதி உரிமையாளர்கள் விடுதிகளை மூடிவிட்டு நாட்டை விட்டே வெளியேறி விட்டனர். சில பிற்போக்காளர்கள், நாங்கள் தொழில் முதலீட்டுக்கே எதிரானவர்கள் என்று எதிர்ப்பிரச்சாரம் செய்தனர். நாங்கள் இத்தகைய புல்லுருவித்தனமான முதலீடுகள் வெளியேறுவதைப் பற்றி கவலைப்படவில்லை. அதேசமயம், நாங்கள் உற்பத்தி சார்ந்த உள்நாட்டு முதலீடுகளை எதிர்ப்பதில்லை. உள்நாட்டு முதலாளிகள் வர்த்தகர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு ஆதரவாக எமது தொழிற்சங்கங்கள் செயல்பட்டுள்ளன. தேசிய முதலாளித்துவத்தையும் சிறு தொழில்களையும் வர்த்தகத்தையும் வளர்த்தெடுப்பதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.


*தற்போதைய அரசின் கொள்கைப்படி உங்களது தொழிற்சங்கங்கள் எவ்வாறு தகவமைத்துக் கொண்டு செயல்படும்?


எமது தொழிற்சங்கங்கள் அரசியல்மயமானவை. அரசியல் அதிகாரம் தொழிலாளர்களிடமும் உழைக்கும் மக்களிடம் இல்லாதவரை போராடிப் பெற்ற உரிமைகளையும் பொருளாதார ஆதாயங்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பதை அவர்கள் நன்குணர்ந்துள்ளனர். பொருளாதார கோரிக்கைகளுக்கான போராட்டங்களோடு அரசியல் போராட்டங்களையும் எமது சங்கங்கள் நடத்தி வந்துள்ளன.


இதுதவிர, தொழிற்சாலைகளில் எமது சங்கங்கள் வலுவாக இருப்பதால், ஆலை நிர்வாகங்கள் முக்கிய கொள்கை முடிவுகள் அனைத்தையும் தொழிலாளர்களின் ஒப்புதலைப் பெற்றால்தான் செயல்படுத்த முடியும். இதை ஏற்கெனவே நாங்கள் சாதித்துள்ளோம். ""தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் அரசியல் அதிகாரம்'' எனும் சோவியத் வடிவத்தை முழுமையாகக் கொண்டிராத போதிலும், அந்த திசையில் நாங்கள் தடம் பதித்துள்ளோம். நேபாள தொழிற்சாலைகளில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளில் எமது தொழிலாளர்களே செல்வாக்கு செலுத்தி கட்டுப்படுத்தும் நிலையில் உள்ளனர்.


*விவசாயிகள் பற்றியும் நிலச்சீர்திருத்தம் பற்றியும் கட்சியிலும், அரசாங்கத்திலும் விவசாயிகளின் பங்கேற்பு குறித்தும் என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளீர்கள்?


எமது நாடு விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எமது நாட்டின் மொத்த உழைப்பாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் விவசாயிகள், இவர்களில் பெரும்பாலோர் ஏழை விவசாயிகள். அவர்களிடம் அரை ஹெக்டேருக்கும் குறைவான நிலமே உள்ளது. உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற எமது புரட்சிகர திட்டத்தின் படி, நிலப்பிரபுக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து கூலிஏழை விவசாயிகளுக்கு மறுவிநியோகம் செய்யும் நிலச்சீர்திருத்த இயக்கத்தை ஏற்கெனவே நாங்கள் நடத்தி வருகிறோம். புதிய அரசின் கீழும் இது தொடரும்.


மூன்று வழிமுறைகளின் மூலம் நிலச்சீர்திருத்தத்தையும் விவசாயத்தைச் சீரமைத்து முன்னேற்றவும் தீர்மானித்துள்ளோம். முதலாவதாக, உற்பத்தி உறவுகளை அதாவது, நிலவுடைமை முறைகளை மாற்றியமைத்தல்; சமவெளிப் பகுதிகளில் பல ஹெக்டேர் நிலங்களை நிலப்பிரபுக்கள் குவித்து வைத்துள்ளனர். அவர்கள் விவசாயத்தில் ஈடுபடாமல் விவசாயிகளைச் சுரண்டி நகரங்களில் உல்லாசமாக வாழ்கின்றனர். நிலத்திலிருந்து விலகியுள்ள விவசாயத்தில் ஈடுபடாத நிலப்பிரபுக்களின் நிலங்களைப் பறித்து, உழுபவனுக்கே நிலம் சொந்தம் எனும் கொள்கைப்படி, கூலிஏழை விவசாயிகளுக்கு இந்நிலங்களைப் பகிர்ந்தளித்து, விவசாய உற்பத்தியைப் பெருக்குவோம்.


இரண்டாவதாக, சிறு விவசாயிகளை கூட்டுறவுச் சங்கங்களில் அணிதிரட்டுவோம். அரசு இச்சங்கங்களுக்கு சலுகைகளையும் உரிமைகளையும் அளிக்கும். விவசாயிகள் அரசாங்கத்தில் பங்கேற்கவும் கட்டுப்படுத்தவும் இத்தகைய கூட்டுறவு சங்கங்கள் மிக அவசியமாகும்.


மூன்றாவதாக, நவீன நீர்ப்பாசனம், உழுபடைக் கருவிகள், கூட்டுப் பண்ணைகள் மூலம் விவசாயத்தை மேம்படுத்தவும் தீர்மானித்துள்ளோம். விவசாயிகளின் ஊக்கமான பங்கேற்பு இல்லாமல் இவற்றைச் சாதிக்க முடியாது. ஏற்கெனவே இத்தகைய பணிகளில் எமது கட்சி ஈடுபட்டு வந்துள்ளது.


அடுத்து, உலக வங்கியும், உணவு மற்றும் விவசாய அமைப்பும் (ஊஅO) தீர்மானித்து ஏழைநாடுகளில் திணித்துள்ளதைப் போல, ஏற்றுமதி அடிப்படையிலான பணப்பயிர் உற்பத்தியைப் பெருக்குவதாக எமது விவசாய கொள்கை இருக்காது. எமது விவசாயிகளின், மக்களின் உணவுப் பாதுகாப்பே முதன்மையானது. உள்நாட்டுத் தேவைக்கேற்ப உணவு தானிய உற்பத்தியைப் பெருக்குவதே எமது விவசாயக் கொள்கை. உற்பத்தி பெருகி உபரியாகக் கிடைத்தால் மட்டுமே நாங்கள் ஏழை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம். உணவு தானியங்களுக்காக ஏகாதிபத்தியங்களிடம் கையேந்துவதாக ஒருக்காலும் எமது விவசாயக் கொள்கை அமையாது.



* இளம் கம்யூனிஸ்டு கழகங்களின் பங்கு என்ன?


எமது இளம் கம்யூனிஸ்டு கழகங்கள் தற்போதைய புரட்சிப் போரில் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன. இவை அர்ப்பணிப்பும் கடமையுணர்வும் மிக்க அரசியல் சக்தியாகும். தேர்தலுக்கு முன்னும் பின்னும் மக்களை அணிதிரட்டி அரசியல் பிரச்சாரம் செய்வதிலும், பிற்போக்காளர்களின் சூழ்ச்சிகள் சதிகளை முறியடித்து வெற்றியைச் சாதித்ததிலும் இவை முக்கிய பங்காற்றியுள்ளன. வருங்காலத்திலும் இக்கழகங்கள் பிற்போக்கு எதிர்ப்புரட்சி சக்திகளை முறியடித்து நாட்டையும் மக்களையும் காக்கும் கடமையில் ஈடுபடும். அடுத்து, இக்கழகங்கள் தம்மை அணிதிரட்டிக் கொண்டு உற்பத்திக்கான நடவடிக்கைகளிலும், மக்களுக்கு உடனடி நிவாரணமளிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடும். மக்களைத் திரட்டி ஆரம்பக் கல்வி அளித்தல், மருத்துவசேவை, கட்டுமானப் பணிகள் முதலானவற்றில் ஈடுபடுவதோடு, அரசியல் நிர்ணய சபை பற்றியும் சட்டங்களைப் பற்றியும் மக்களுக்கு விளக்கி, அரசு நடவடிக்கைகளில் ஈடுபடவும் கண்காணிக்கவும் துணை நிற்கும்.


*"புதிய நேபாளத்தைக் கட்டியமைப்போம்!'' என்ற முழக்கத்தை தேர்தலின்போது உங்கள் கட்சி முன் வைத்துப் பிரச்சாரம் செய்தது. தற்போதும் இதே முழக்கத்தை எதிரொலிக்கிறது. புதிய நேபாளம் என்பதன் உண்மையான பொருள் என்ன?


புதிய நேபாளம் என்பது அரசியல் ரீதியில் நிலப்பிரபுத்துவ அரசியல் பொருளாதார கலாச்சாரத்தை முற்றாக நிராகரிப்பதாகும். புரட்சிகர ஜனநாயக சக்திகளின் தலைமையில் சமூக பொருளாதார மாற்றத்தை நிறுவுவதாகும். பழைய ஒழுங்கமைவை அடித்து நொறுக்கிவிட்டு புதிய முற்போக்கான ஒழுங்கமைவைக் கட்டியமைப்பதாகும். நிலப்பிரபுத்துவ உறவுகளைத் தூக்கியெறிந்துவிட்டு, விவசாயத்தைச் சீரமைத்து, உற்பத்தி சக்திகளை வளர்த்து, நவீன தொழிற்துறை உறவுகளை நிறுவி, சோசலிசத்தை நோக்கிய திசைவழியில் முன்னேறுவதே புதிய நேபாளம் என்ற முழக்கத்தின் பொருளாகும். இதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதே தற்போதைய இடைக்கட்டத்தில் எமது மையக் கடமையாக உள்ளது.


*அரசியல் நிர்ணய சபையில் நீங்களும் பிற இடதுசாரி சக்திகளும் சேர்ந்தாலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், முற்போக்கான சட்டங்களை இயற்றுவதில் இழுபறி நீடிக்குமே! பிற்போக்கு சக்திகள் முட்டுக்கட்டை போடுமே! உங்கள் மீது வீண்பழி சுமத்துமே! இந்நிலையில் அரசியல் நிர்ணய சபையை எவ்வாறு இயக்கிச் செல்லப் போகிறீர்கள்?


நீங்கள் கூறுவது உண்மைதான். இது சுலபமான பாதை அல்ல. பெரும் போராட்டங்களின் மூலம்தான் புதிய முற்போக்கான சட்டங்களை இயற்ற முடியும் என்பதை நாங்கள் நன்கறிந்துள்ளோம். அதேசமயம் அரசியல் நிர்ணய சபையில் நாங்கள் 37% இடங்களைப் பெற்றுள்ளோம். இது மூன்றில் ஒரு பங்கை விட அதிகமானது. எனவே, எமக்கு வெட்டு அதிகாரம் (""வீட்டோ'') உள்ளது.


எங்கள் ஆதரவு இல்லாமல் பிற்போக்கு சக்திகளால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற முடியாது. நாங்கள் முற்போக்குச் சட்டங்களை இயற்றுவதை இச்சக்திகள் தடுக்குமானால், அவற்றின் பிற்போக்குச் சட்ட முன்மொழிதலையும் எங்களால் தடுக்க முடியும். இது அரசியல் நிர்ணய சபையில் பெரும் முட்டுக்கட்டையாகவே அமையும். நாங்கள் வெற்றி பெறுவது கடினமானதுதான் என்றாலும், நாங்கள் பின்வாங்கிவிட மாட்டோம்; தோற்றுவிடவும் மாட்டோம்.


அரசியல் நிர்ணய சபையில் மூன்று விதமான சக்திகளும் மும்முனைப் போட்டியும் முரண்பாடும் நீடிக்கின்றன. நிலப்பிரபுத்துவ முடியாட்சி ஆதரவு சக்திகள் ஒருபுறம்; முதலாளித்துவ நாடாளுமன்ற சக்திகள் மறுபுறம்; இடதுசாரி பாட்டாளி வர்க்க சக்திகள் இன்னொருபுறம். நிலப்பிரபுத்துவ முடியாட்சி ஆதரவு சக்திகளை வீழ்த்துவதே எமது முதன்மையான குறிக்கோள். அதன்பிறகு, வருங்காலத்தில் முதலாளித்துவ சக்திகளுக்கும் பாட்டாளி வர்க்க சக்திகளுக்குமிடையிலான முரண்பாடும் மோதலும் நீடிக்கும். அதற்கும் தயாராகவே உள்ளோம்.


ஒருக்கால் முற்போக்கான சட்டங்களை நிறைவேற்றுவதில் பிற்போக்கு சக்திகள் தடையாக நின்றால், அதற்கெதிராக தொடர்ந்து நாங்கள் போராடுவோம். இது மேல்மட்டத்தில் அரசாங்கத்தில் நடப்பதாக மட்டுமின்றி, பிரதானமாக மக்கள்திரள் போராட்டங்களாகக் கீழ்மட்டத்திலும் நடப்பதாக இருக்கும். இரண்டு வழிகளிலும் நாங்கள் போராடுவோம். ஒருபுறம் அரசில் பங்கேற்று, அதைத் தலைமையேற்று வழிநடத்தவும், முற்போக்கான சட்டங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றவும் அரசின் உள்ளிருந்தே போராடுவோம். மறுபுறம், அரசுக்கு வெளியே மக்கள்திரள் போராட்டங்களைக் கட்டியமைப்போம். இரண்டு முனைகளிலும் தொடரும் இப்போராட்டங்கள் மூலம் புதிய நேபாளத்தைக் கட்டியமைக்க விழைகிறோம்.·
புதிய ஜனநாயகம் july 2008

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது