Wednesday, March 28, 2007

இவர்களா பகத்சிங்கின் வாரிசுகள் ?



வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி, தூக்கு கயிற்றை முத்தமிட்டார் தோழர் பகத்சிங்.

அந்த மாவீரனின் பாதையில் அணி திரண்டு போராட இன்றைய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கும் வேளையில், அவரைக்காட்டி பிழைப்பு நடத்தும் பிழைப்புவாத சிபிஎம் கும்பல் பகத்சிங்கை கேவலப் படுத்தியுள்ளது. அவரின் தியாகத்திற்கு பங்கம் விளைவித்த நிகழ்ச்சி சென்னை கே.கே.நகரில் நடந்துள்ளது.

பகத்சிங்கின் படத்தைப் போட்டு இளைஞர்களைத் திரட்டிக் கட்டப்பஞ்சாயத்து, நீர்மோர் பந்தல், கபடிபோட்டி நடத்தும் இந்திய சனநாயக வாலிபர்சங்கம் (DYFI), பகத்சிங்கின் 76 வது நினைவுநாளை, 100வது நினைவுநாள் என ஊர் முழுக்க சுவரொட்டி ஒட்டியுள்ளனர். தன் இளைஞர் அணிக்கு பகத்சிங்கின் தியாகமோ, போராட்ட அரசியலோ, புரட்சிகர கருத்துகளோ கூட வேண்டாம், நினைவு நாள் கூட சரியாகத் தெரிவிக்க இயலாத நிலையில்தான் CPM உள்ளது.

மேலும் கொடியேற்றி ஏழைகளுக்கு சேலை வழங்கும் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு தரம் தாழ்ந்து போயுள்ளனர்.
இது ஏதோ தற்செயலான சம்பவமல்ல. பிழைப்புவாத கும்பலாக குறுகி போன சிபிஎம் மின் தலைமை எப்படி மார்க்ஸையும், லெனினையும் பூசையறை படமாக்கி அணிகளையும், ஆதரவாளர்களையும், தன் பிழைப்புவாத புதைகுழியில் மூழ்கடித்துள்ளதோ அப்படியே அதன் இளைஞர் அமைப்பும் உள்ளது.

தன் நாட்டு மக்களின் ஏழ்மையை சோஷலிசப் புரட்சி நடத்தி களைய நினைத்த வீரனை இவ்வாறு தரங்கெட்ட குப்பை அரசியலுக்கு (சேலை வழங்குதல் !...அன்னதானம் போடலையோ ?) முன்னிறுத்தும் இந்தக் கூறுகெட்ட குப்பைப் பதர்களை அம்பலப்படுத்தி அப்புறப்படுத்தாமல் இந்நாட்டு மக்களுக்கு விடிவில்லை.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது