Monday, October 29, 2007

மருத்துவமே இல்லையடா ! ஆனா போலிகளை பற்றி கவலைப்பட வைச்சுட்டேங்களடா !!

நேற்று சன் நியூஸ் சேனலில் மருத்துவ துறையில் போலி மருத்துவர்கள் அதிகரிச்சுட்டார்கள் எனவும், அதுனால ஏற்படுகின்ற பாதிப்புகள் என்னவென்றும் அலசினார்கள்.
..
இதனை பார்க்கும் போது...

மக்களுக்கு மருத்துவமே கிடைப்பதில்லை. அனைத்தையும் வியாபாரமாக்கிவிட்டார்கள்.
..
உரிமையாக நிலைநாட்டப்பட வேண்டியவற்றில் ஒன்றான மருத்துவத்தை லாபகரமான தொழிலாக மாற்றிட்டானுங்க இந்திய ஏகாதிபத்திய கைக்கூலி ஆட்சியாளர்களான ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகள்.

இன்றைக்கு வாழ்வதற்கே படித்த ஒரிஜினல் மருத்துவர்களிடம் கிட்னி விற்று வாழுங்கள் என்ற நிலைக்கு கொண்டு வந்துட்டானுங்க.
..
நாடு முழுவதும் புகையிலை தடை செய்கின்ற அதிகாரத்தை வந்துகிட்டு என்ன சொல்கிறார் அதுனால தான் 40 % நோய் வருகிறது அதுனால புகையிலை பொருட்களின் மீது மண்டையோடு போடப்போறேன் என்கிறார் குறைந்தபட்சம் மக்களாலே கூட தேர்ந்தெடுக்கப்படாத ஒரு இந்திய சுகாதார துறை அமைச்சர்.
..
கோக்கை அனுமதிச்சு கொண்டே அதை உபயோகிக்காதீர்கள் என தன் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்கிறது ராமதாஸ் குடும்பம்.
..
(எல்லா ஓட்டுப்பொறுக்கிகளையும் ஏன் சொல்லவில்லை என யோசிக்காதிங்க...மற்ற பதிவிகளை படித்து தெரிந்து கொள்ளவும்.)
..
இப்படி அனைத்தையும் விற்று வந்து மருத்துவம் பார்க்கின்ற சில பேருக்கு நாங்க போலிகள்களை வைத்து கொல்லுவோம் என்கின்றனர் இந்த மறுகாலனியாதிக்க தாசர்கள்.

வாழ்வதையே பெரிய விஷயமாக ஆகப் பெரும்பாண்மை இந்திய மக்களை இன்று உருவாக்கி வருகின்றனர் இவர்கள்.

Sunday, October 28, 2007

இந்து மதவெறி பயங்கரவாதம் ! மதவெறிக்குமபல் பா.ஜ.கவும் இதர ஓட்டுப் பொறுக்கிக்கட்சிகளும் !!


இந்து மதவெறி பயங்கரவாதத்தை குஜராத்தில் அரங்கேற்றிய போதும் அதனுடன் கூட்டணி வைத்து பதவி சுகத்தை அனுபவித்த ஓட்டுப்பொறுக்கிக் கட்சிகளும், எதிர்தரப்பில் முற்போக்கு வேடம் போட்ட காங்கிரஸ் மற்றும் போலி கம்யூனிஸ்டுகளும் ஆழ்ந்த மெளனம் காத்தனர். அதே போல இன்று இந்து மதவெறி பயங்கரவாதம் அம்பலமாகிவிட்ட போதும் அதே ஆழ்ந்த மெளனத்தை அனைத்து ஓட்டுபொறுக்கி கட்சிகளும் காக்கின்றனர்.

http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107gujrat_sec.asp

Saturday, October 27, 2007

குஜராத் பயங்கரம்: தெகல்கா-இந்தியா டுடேவின் அதிர்ச்சி வீடியோ

அகமதாபாத்: குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நடத்தியதாக பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர்.
..
இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது.
..
குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து.
..
சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது.
..
கோத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ஹரேஷ் பட் பஜ்ரங் தள் அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார். இவரையும் குஜராத் வன்முறையில் நேரடியாகப் பங்கு கொண்ட 7 பேரையும், மோடிக்கு மிக நெருக்கமான அரசு வழக்கறிஞரையும் மேலும் 5 பேரையும் தெகல்கா நிருபர்கள் குழு ரகசியமாய் நெருங்கியது.
..
அவர்களிடம் குஜராத் வன்முறை குறித்து பேசியது. அப்போது அதை ரகசியமாய் கேமராக்களில் படம் பிடித்தது.ஆனால், தாங்கள் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் எப்படியெல்லாம் வன்முறையை நடத்தினோம், எப்படி ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்துப் போட்டு வெட்டினோம் என்பதையெல்லாம் இவர்கள் பேசியுள்ளனர்.
..
தெகல்கா நடத்திய இந்த ஆபரேசனுக்கு தலைமை வகித்தவர் அதன் நிருபரான ஆஷிஷ் கெய்தான். அவர் 'விஎச்பியும் இந்துத்துவாவும்' என்ற புத்தகம் எழுதப் போகிறேன். அதற்காக கருத்துக்கள், விவரங்களைத் திரட்டி வருகிறேன் என்று கூறித்தான் இவர்களை நெருங்கியுள்ளார்.
..
கிட்டத்தட்ட 6 மாத காலமாக இவர்களிடம் பேசி, அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார் கெய்தான்.இந்த வீடியோவில் அவர்கள் பேசியுள்ளது மிக பயங்கரமாக உள்ளது.வன்முறைக்கு டைம் கொடுத்த மோடி.
..
கோத்ரா எம்எல்ஏவான பட் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பாஜக பிரமுகர்கள், பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் கூட்டம் நடந்தது.
..
அதில் நான் உங்களுக்கு 3 நாட்கள் நேரம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் (வன்முறை, கொலை, தாக்குதல்) செய்து கொள்ளுங்கள்.
.
ஆனால், 3 நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும் என்றார்.மேலும் நரோடா பாட்டியாவில் பெரிய அளவில் கொலைகள் நடந்த பின்னர் அதற்காக எங்களை மோடி அழைத்துப் பாராட்டினார் என்று கூறியுள்ளார் பட்.
..
போலீஸ் உதவியோடு பாம் தயாரித்தோம்...
..
விஎச்பியைச் சேர்ந்த அனில் படேல், தாபல் ஜெயந்தி படேல் ஆகியோர் கூறுகையில், விஎச்பி தொண்டர்கள் எனது தொழிற்சாலையில் தான் குண்டுகளைத் தயாரித்தனர். ராக்கெட் லாஞ்சர்களைக் கூட தயாரித்து முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.
..
இதற்கு போலீசாரும் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன்....
..
பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி கூறுகையில், நான் அந்த கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன்.
..
அதிலிருந்த சிசுவை எடுத்து வெளியே எரிந்து வெட்டினேன் என்று கூறியுள்ளார்.மதன் சாவல் என்ற பாஜக தொண்டர் கூறுகையில், முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜாப்ரி தனது பகுதி முஸ்லீம்களை காப்பாற்ற முயன்றார். தனது வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார்.
..
இதையடுத்து நாங்கள் வாள்களுடன் அவரது வீட்டை முற்றுகையிட்டோம். அப்போது கை நிறைய பணத்தை அள்ளிக் கொண்டு வந்த ஜாப்ரி இதை வைத்துக் கொண்டு அனைவரையும் விட்டுவிடுமாறு கூறினார்.
..
நாங்கள் சரி என்றோம். பணத்தைக் கொடுத்த அவர் கதவைத் திறந்தார்.
..
அப்போது வீட்டுக்குள் நுழைந்து அவரைப் பிடித்தோம். இருவர் கையை பிடித்துக் கொள்ள நான் அவரது கைகளை வெட்டினேன் பின்னர் அவரது மர்ம உறுப்பை வெட்டி எரிந்தோம்.
..
பின்னர் அவரை துண்டு துண்டாக்கி எரித்துவிட்டோம். அவர் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.இன்னொரு தொண்டர் கூறுகையில், நரேந்திர மோடியால் தான் நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அவர் நீதிபதிகளை இடமாற்றம் செய்து தனக்கு வேண்டியவர்களை நியமித்ததால் தப்பித்தேன் என்றார்.
..
இவை அனைத்தும் வீடியோவில் அப்பட்டமாக அப்படியே பதிவாகியுள்ளன.குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரகாஷ் ரத்தோட் என்பவர் கூறுகையில், பாஜக எம்.எல்.ஏ மாயா பென் வீதி வீதியாக சென்று முஸ்லீம்களை விரைவாக கொல்லுங்கள், யாரையும் விடாதீர்கள் என்று வேகப்படுத்தினார் என்று கூறியுள்ளார்.
..
சுரேஷ் ரிச்சர்ட் என்பவர் கூறுகையில், போலீஸார் எங்களை அழைத்து சில இடங்களை சுட்டிக் காட்டி இங்கு முஸ்லீம்கள் சிலர் ஒளிந்துள்ளனர். அவர்களை விடாதீர்கள் என்று எங்களுக்கு வழி காட்டினர். நாங்கள் அந்த இடத்திற்குச் சென்று வெளியிலிருந்து கதவுகளை மூடி உள்ளேயே வைத்து அவர்களை எரித்துக் கொன்றோம் என்று தெரிவித்துள்ளார்.
..
விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த ரமேஷ் தவே கூறுகையில், இதை நாங்கள் இப்போது செய்யவில்லை. கடந்த 20, 25 வருடங்களாகவே எங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் (முஸ்லீம்கள்) கொன்று குவித்துள்ளோம் என்று கூறியுள்ளார்
..
தவே.அரசு, நீதித்துறை, காவல்துறையின் கூட்டுச் சதி:குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி ஷா கமிஷன் முன்பு ஆஜரான அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா கூறுகையில்,கலவரத்தில் ஈடுபட்டோருக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன.
..
முதல்வர் நரேந்திர மோடி உயர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து இந்துக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறு வாய் மொழியாக உத்தரவிட்டார்.
..
கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மோடி மிகவும் அப்செட் ஆக இருந்தார். அகமதாபாத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார்.
..
ஆனால் முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார்.முஸ்லீம்களைக் கொன்ற தினத்தை ஆண்டுதோறும் இந்துக்கள் பெரிய அளவில் கொண்டாட வேண்டும். அதே சமயம் அவர்களைக் கொல்வதை விட நசுக்குவதுதான் மிகவும் சிறந்தது.
..
இதன் மூலம் முஸ்லீம்கள் காலம் பூராவும் இந்துக்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள்.முஸ்லீம்களைக் கொல்வதைப் போல அவர்கள் மீது பொருளாதார நெருக்கடியைத் திணிக்க வேண்டும் என்று கூறியுள்ள பாண்ட்யா இதை விட பயங்கரமாக, இந்த சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி நானாவதி ஷா கமிஷனையே விலைக்கு வாங்கிவிட்டன பாஜக மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் என்றும் தெரிவித்துள்ளார்.
..
அதுகுறித்து அவர் கூறுகையில், நீதிபதி நானாவதியுடன் கூட்டாக விசாரித்த கே.ஜி.ஷா (இவர்தான் கமிஷனின் தலைவர்) ஒரு பாஜக அனுதாபி என்றும் கூறியுள்ளார் பாண்ட்யா.வி.எச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்கு சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாக அவர்கள் வாதாடினர் என்றார்.

Wednesday, October 24, 2007

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்

முத்திராமலிங்க தேவருக்கு விழா என்றும், அரசே சில கோடிகள் செலவு செய்து சிறப்பிக்கின்றனர் என்றும் செய்திகள் வரும் சூழ்நிலையில்....மேலும், திருமா போன்ற வாழும் அம்பேத்கார்கள் கூட மாநாட்டில் சுதந்திர போராட்ட வீரரும், தலித்களை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் போவதற்கு போராடியவரும் ஆன முத்திராமலிங்க தேவரின் நூற்றாண்டு விழாவினை விடுமுறையாக அறிவிக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடும் சூழ்நிலையில் இந்த சாதிவெறினை அம்பலப்படுத்தி தோழர் அசுரன் அவர்களின் தளத்தில் வந்த பதிவை மறுபிரசுரம் செய்வது அவசியம் எனக் கருதி........

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன் -இந்துத்துவத்துக்கு விளக்குப் பிடித்த திருமகன்

**********
இந்த கட்டுரையின் பின்னூட்டங்களை(Comments) மிக முக்கியமாக படிக்கவும்.
*********
தேவரின் காலடி மண்ணை எடுத்துக் கும்பிடும் கோடானு கோடி பாசாங்குவாதிகளின் காதில், தேவர் பற்றிய அவ்வளவாய் சொல்லப்படாத விசயங்களைப் போட்டு வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

முதலில் காமராஜர் குறித்து, முத்துராமலிங்கத் தேவர் உதிர்த்த பொன்முத்துக்களைப் பார்ப்போமா?

1957 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் பேசிய பேச்சு:- "இற்றைக்கு முதல் மந்திரி என்று சொல்கிற நபர் எல்லாம், அற்றைக்கு நாங்கள் ஏவின வேலையை கேட்டுக் கொண்டிருந்தவர்", என்று ஆணவம் நிரம்பக் கூறினார்.

இதே விசயத்தை, சங்கரன்கோவிலில் இருந்து தேனி வரை எல்லா ஊர்க் கூட்டங்களிலும், முதல்வரை, மரியாதை சிறிதும் இன்றி 'நபர்' என்றோ, காமராஜன் என்றோ, காமராஜ் நாடான் என்றோ தாழ்த்தியே பேசி வந்தார். எல்லா மேடைகளிலும் ஒரு கதை சொல்வார், காமராஜர் குறித்து. அது என்ன கதை?பசும்பொன் உ.முத்துராமலிங்கமே கூறட்டும் கேட்போம்.

"இதே காமராஜ் இற்றைக்கு முதல் மந்திரியாக இருக்கலாம். ஆனால் இதே நபர் பழைய காலத்தில் ஒரு ஓட்டராக இருக்கக்கூட யோக்யதை இல்லாமல் இருந்த தொண்டர். அற்றைக்கு சொத்திருந்தவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. இவருக்கு சொத்து கிடையாது. ஒரே ஒரு வீடு இருந்தது. அதுவும் அவர் தாயார் பெயரில் இருந்தது. அந்த வீட்டை இவர் பேருக்கு மாற்றித் தரும்படி நான் கேட்டபோது, இவருக்கு ஒரு தங்கை உண்டு. இவருடைய தாயார், "வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. அதை நல்ல இடத்தில் கை பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆகையால் நான் இந்த வீட்டைப் பையன் பேருக்கு மாற்ற முடியாது" என்று சொல்லி விட்டார்கள்.

(இதே கூற்றை "அவன் வேலை வெட்டி இல்லாமல், பொருள் சேர்க்கத் தெரியாமல் ஊரைச் சுத்துகிறவனாயிற்றே. அவனுக்கு வீட்டை எழுதி வைத்து விட்டு பிறகு என்ன செய்கிறது?" என்று காமராஜரின் அன்னை சொன்னதாக சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)

அதன் பிறகு நான் என்ன செய்ய வேண்டியிருந்தது என்றால், ஒரு வெள்ளாட்டை வாங்கி, அதற்குக் கட்ட வேண்டிய முனிசிபாலிடி வரியைச் செலுத்தி, தகர வில்லையை வாங்கி, அதனுடைய கழுத்தில் கட்டி,அந்த ரசீதை காமராஜ் கையில் கொடுத்து,ஓட்டர் ஆக்கியவன் அடியேன். இந்த நிலைமையிலிருந்த சாதாரணத் தொண்டர்களை எல்லாம் மனிதத் தன்மைக்குக் (!!!) கொண்டு வந்தவன் அடியேன்."(21/2/57 காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்)

சாதாரணமான தொண்டனாக இருந்த காமராஜை, மனிதத்தன்மை உள்ள மனிதராக இவர் ஆக்கினாராம். என்னதோர் ஆணவப் பேச்சு பாருங்கள்.

அதே கூட்டத்தில் காமராஜரை, காமராஜன் என்றுதான் சொல்லியிருக்கிறார். அப்போதைய காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரசின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் காமராஜர். அவர் தலைமையை, முத்துராமலிங்கத் தேவர் மதிப்பிடும் தரம் எப்படி இருந்தது பாருங்கள்.
"இன்றைக்கு மாகாணக் கமிட்டியில் எவனெவனோ வந்து விட்டான்.இற்றைக்கு காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ. தேர்தலுக்கு 'நாமினேஷன்' போடுகிறவன் கேட்கிறான். "திலகர், காந்தி மகன் தானே" என்று.இப்படிப்பட்ட அறிவாளிகள் வந்து விட்டார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் சபையில் காமராஜின் புண்ணியத்தால்."

கல்வியைப் பரவலாக்கிப் பணியாற்றிய காமராஜரினை, ராஜாஜியுடன், தேவர் ஒப்பிட்டதைப் பார்ப்போம். "அவர் மிதவாதியாக (ராஜாஜி) இருந்தாலும், காமராஜ் போல தற்குறி அல்ல. பழங்காலத்தில் எம்.ஏ. எல்.டி., பி.ஏ. எல்.டி. பட்டம் பெற்றவர்கள் ஆண்டார்கள். இற்றைக்கி எம்.ஏ.,பி.ஏ. இல்லாது வெறும் எல்.டி.க்கள், அதாவது 'லெப்ட் தம்ப்' இடது கைப்பெருவிரல் பிரட்டுகிறவர்கள் ஸ்தானம் பெற்றிருக்கிற காலம்."

காமராஜ், வறுமையின் காரணமாய்ப் பள்ளிப்படிப்பைத் தாண்டவில்லை, என்பதனை நாடறியும். இதனால் என்ன குறைந்தது, அவரின் திறமைக்கு? தேவர், இதனைக் கூட கேவலமாகப் பேசித் தன் பெருந்தன்மையை உலகுக்குப் பறைசாற்றியிருக்கிறார். (இதனைச் சொன்ன தேவரோ, எஸ்.எஸ்.எல்.சி.யே தாண்டவில்லை என்பது இன்னும் சிறப்பு).

குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்து தமிழர்கள் கல்வியில் மண்ணள்ளிப்போட சூதறிஞர் ராஜாஜி முனைந்தபோது, காங்கிரசுக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து, குல்லுகப் பட்டர், பதவி விலகி, காமராஜர் முதல்வரானார். அச்சூழலை விவரிக்க வந்த தேவர் சொல்கிறார், காஞ்சி தேர்தல் பிரச்சாரத்தில் - "பிளாக் மார்க்கெட்காரர்களுக்கு புரோக்கராக நின்ற காமராஜர் பிரதம மந்திரியாகிறார்." (அப்போது, மாகாண முதல்வர்களை, பிரீமியர்-பிரதமர் என்று சொல்வது வழக்கம்)

காமராஜரை ஆதரித்த காங்கிரஸ் தலைவர்களிடம் தேவர் சொன்ன கருத்து "உங்களுக்கு அவர் பிரதமராகத் தோன்றலாம். எனக்கு அவருடைய பழைய மார்க்கெட் வேல்யூ தெரியும். ஒழுக்கத்தின் பெயரால், அறிவால்,தியாகத்தால் பதவிக்கு வருகிறவர்களைத்தான் நான் மதிக்க முடியும். சந்தர்ப்பத்தின் பெயரால் முன்னுக்கு வருகிறவர்களை நீங்கள் மதிப்பதாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?".

சற்றே யோசித்துப் பார்ப்பின் தேவர் குறிப்பிட்ட மார்க்கெட் வேல்யூ என்பது, ஜாதிப் படிநிலைதான் என்பது தெள்ளெனப் புரியும்.

முதல்வராகும் முன் ஆசீர்வாதம் வாங்க வந்த காமராஜரிடம் இவர் சொல்கிறார் "நீ பிரதமர் ஆவதன் மூலம் காங்கிரஸ் கெடும். நீ மாகாணக் கமிட்டித் தலைவனாக (தலைவராக அல்ல-அழுத்தம் எம்முடையது) இருந்து கொண்டு யாரேனும் நல்லவரைப் பிரதமராக்கி, உன்னுடைய அதிகாரத்தைச் செலுத்து. உனக்கு வர வேண்டிய லாபம் வரும்".

அதே காஞ்சிக் கூட்டத்திலே, தேவர், காமராஜர் மீது ஓர் அபாண்டப் பழியைப் போட்டார். அது என்ன பழி? "பழைய காலத்தில் காங்கிரஸ் காரன் போட்டது கள்ள ஓட்டு. இப்போது காமராஜ், கள்ள நோட்டு அச்சடிக்கிற காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்", " ஏற்கெனவே விருதுநகர் நாடார் ஒருவர் நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டை அள்ளிக் கொண்டு,திருவெற்றியூருக்கு வந்திருந்தபோது கைது செய்யப்பட்டார். இப்பேர்ப்பட்ட யோக்யதை அற்ற காமராஜ் கும்பலைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு நல்லதல்ல".

காமராஜர், சாகும்போது அவர் வீட்டில் நூற்றிச் சொச்சம் ரூபாய் மட்டுமே இருந்தது என்பதை நாம் அறிவோம். நேர்மையாய், எளிமையாய் வாழ்ந்த அத்தலைவரினைத் தரம் தாழ்த்தி, இவ்வாறு பழி போட்டு, காஞ்சியில் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் கள்ளநோட்டுப் பேர்வழி என்று புழுதிவாரித் தூற்றியவர், தேவர்.

கம்பம் தேர்தல் கூட்டத்திலே, 24 பிப்ரவரி, 1957ல் மீண்டும் அதே பழியைப் பின்வருமாறு சொல்கிறார்."இன்று கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் ஆட்சி இந்த நாட்டிலே நடைபெறுகிறது" "என் மீது கேஸ் போட்டால் இந்தக் கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் அயோக்கியத்தனத்தைச் சாட்சி மூலம் நிரூபிக்க ரிக்கார்டு இருக்கிறது".

இக்கூட்டத்திலே, காமராஜரின் படிப்பறிவை மறுபடியும் கொச்சைப்படுத்தி "எம்.ஏ. படித்தவர்கள் ஆண்ட நாட்டிலே எல்.டி. பதவிக்கு வந்து விட்டார்கள். இந்த அளவுக்கு மானம் கெட்டு வந்திருக்கிறது. இப்படி மானம் கெட்டு இருக்கிற காரணத்தினாலேயே இந்த நாட்டிலே காரியங்கள் மிகத் தாழ்ந்த நிலைமைக்கு வந்திருக்கிறது."

(இதே காலகட்டத்தில் மதுரை தமுக்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தேவருக்கு, குறும்பாய் ஒருவர் துண்டுச்சீட்டில் "நாடார், நாட்டை ஆள்வார்" என்று எழுதிக் கொடுத்து இருக்கிறார். தேவரய்யா டென்ஷனாகி விட்டார் "நாடார், பனையை ஆள்வார், தென்னையை ஆள்வார், நாட்டை ஆளமுடியாது" என்று பச்சையாய் சாதிவெறி கக்கினாராம். தூத்துக்குடி அருகில் உள்ள குருக்குச்சாலையில் நடந்த தேர்தல் கூட்டத்தில், உரை முழுவதும் காமராஜரை 'சாணாப் பயலே' என்று திட்டியே பேசியிருக்கிறார்.)

இதே கம்பம் கூட்டத்திலே, காமராஜரைக் கொச்சைப்படுத்தி ஒரு சம்பவத்தை, தேவர் சொல்லி இருக்கிறார்.

"வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்தவர்களுக்கு, முனிசிபல் கவுன்சிலர்கள் வரவேற்புக் கொடுத்தார்கள். அந்த வரவேற்பில், காமராஜூம் கலந்து கொண்டார். யார் இந்த நாட்டு முதல் மந்திரி என்பதைத் தெரிந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்காரர்கள் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். அறிவாலோ, பேசும் திறத்தாலோ, அல்லது நடையுடை பாவனையாலோ பார்த்துத் தெரிந்து கொள்ள முடியவில்லை. உடனே ஒரு வெள்ளைக்காரன், "சென்னையின் முதல் மந்திரி யார்?" என்று கேட்டார். இந்த நாடார் சும்மா இருந்தால் செக்கரட்டரி சொல்லியிருப்பான் அல்லது தமிழிலே பேசியிருந்தால் தேச அவமானம் என்று நினைத்திருப்பான். தன் அறிவைக் காட்டத் தெரியாத ஒருவர், இந்த நாட்டு முதல் மந்திரியாக இருக்கிற இந்த அலங்கோலத்தினால் நாடு அவலட்சணமாகக் கேவல நிலை அடைந்தது. தமிழ்நாடு தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு அன்று அவமானப்பட்டது."

(இதே சம்பவத்தை இன்னும் விரிவாக்கி "அந்தக் கேள்விக்கு தமிழிலேயே பதிலளித்து இருக்கலாம். அப்படிச் செய்யாமல், அவருக்கு ஆங்கிலத்தில் இருக்கும் அறியாமையை எடுத்துக் காட்டுமளவில் "I is the Chief" என்று சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு ஆள் முதன்மந்திரியாக இருக்கிறான் (இருக்கிறார் அல்ல- அழுத்தம் எமது) என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள்" என சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)

ஈயத்தைப் பார்த்து இளித்த பித்தளையின் கதை இது. காமராசர், சுய சாதி வெறியுடன் ஆட்சி செய்கிறார் என்று, இந்த சாதி ஒழிப்புப் போராளி, அதே சங்கரன் கோவில் கூட்டத்திலே சொல்கிறார் "சர்க்கார் உத்தியோகங்களை அவருடைய ஆட்களுக்கே கொடுத்து வருகிறார். பிளாக் மார்க்கெட்டு வியாபாரத்தையும் அவருடைய ஆட்களே செய்து வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருகிறார் இந்த காமராஜர். தமிழ்நாட்டின் நிர்வாகத் தரம் குறைந்து போய் விட்டது."

மார்ச் 1, 1957 இல் சிறீ வில்லிபுத்தூர் தேர்தல் கூட்டத்திலே, மக்களுக்கு தேவரய்யா நாகரீகமாக ஒரு அழைப்பு விடுக்கிறார் - "அரசியல் சரித்திரத்திலே இப்படி மானம் கெட்டவன் பிரதம மந்திரியாக இருந்தது கிடையாது. விருது நகர் வியாபாரி சமாச்சாரம் தெரிஞ்ச ரகசியமில்லே. இதை மறைக்கலாமா? இற்றைக்கு அரசியலையும் அப்படி கெடுக்கப் பார்க்கிற. பத்து வருஷமா இப்படித்தானே அரசியலிலே காலம் தள்ளினே. இனிமேலும் நடக்க விடுவோமா? எவ்வளவு சீக்கிரம் இந்த நாடார் பதவியை விட்டுப் போறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு நல்லது. நாட்டுக்கும் நல்லது."

இம்மானுவேல் சேகரன் கொலைச் சதி வழக்கில் இருந்தில் தப்பிய தேவர், 1962 இல் மதுரையில் நடந்த தேர்தல் கூட்டத்தில் கூட, முதல்வர் காமராஜருக்கு ஆதியிலே சோறு போட்டது நானாக்கும் என்கிற ரேஞ்சுக்கு அல்பத்தனத்தைக் காட்டி இருக்கிறார் "நம்மால் உணவு கொடுத்து, உடை கொடுத்து, உறைவிடங் கொடுத்து வளர்க்கப்பட்ட புண்ணியவான்களாலேயே கொலைக் குற்றம் சாட்டப்பட்டேன்" என்றார்.

காமராஜரின் மதிய உணவுத் திட்டம், பல தரப்பு ஏழைக் குழந்தைகளையும் கல்விச்சாலை நோக்கி வர ஊக்கப்படுத்தியது என்பதை முந்தைய இரண்டு, மூன்று தலைமுறை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 1962லே அந்த மதிய உணவுத் திட்டத்தை தேவர் மதிப்பிடும் லட்சணம் இதுதான் "மதிய உணவுத் திட்டம் என்பதன் பெயரால், பிள்ளைகளின் படிப்பு பாழாக்கப்படுகிறது. உபாத்தியாயர்கள் மதிய உணவுத் திட்டத்திற்கு அரிசிப் பிச்சை எடுக்கப் போக நேர்வதால், பிள்ளைகள் படிப்பு நாசமாகி தேசத்தின் எதிர்காலம் அறிவுச் சூன்யத்துக்குத் தயாராகிறது."
******************
இமானுவெல் படுகொலையும், சாதி வெறியும்:

1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.

இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தலித்களின் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தலித்களின் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.

"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடனே எதிர்க்கட்சிகள் காமராஜ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.

அத்தீர்மான விவாதத்தின்போது, அமைச்சர் பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கையில் தேவர் அவர்கள் இம்மானுவேலைக் குறித்து என்ன பேசினார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது - "(சமாதான) மகாநாட்டிலிருந்து வெளியே வரும்போது சிறீ முத்துராமலிங்கத்தேவர், இம்மானுவேல் போன்ற பள்ளன் கூட எதிர்த்துப் பேசும்படியாக விட்டு விட்டீர்களே! என்று தம் ஆதரவாளர்களைக் கடிந்து கொண்டார்". கடிந்து பேசிய அக்கோபமே, இம்மானுவேலை வெட்டிப் போட்டது.

அதனை அடுத்து மூண்ட கலவரத்தின்போது கொண்டலாதி எனும் ஊரில் தலித் மக்கள் குடிநீர் கோரும் கிணற்றில் மண்ணெண்ணெய்யும், மனித மலமும் கொட்டப்பட்டன. தேவமார்கள் தன் சாதி மக்களை அடையாளம் கண்டு கொள்ள மஞ்சள் வேட்டி அணிந்து கொண்டு வேல் கம்புடன் போருக்கு செல்வது போன்று கும்பலாய் சென்று தலித்களின் வீடுகளையும், வைக்கோல் போர்களையும் கொழுத்தினர். 8 ஊர்களில் பெண்களைக் கற்பழித்தனர். பல ஊர்களில் தலித் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக விடப்பட்டனர்.

இது சமயம், தேவர், மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- "ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் முத்துராமலிங்கத்தேவரும் கலந்து கொண்டார். ஹரிஜனங்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் ஹரிஜன் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் முத்துராமலிங்கத் தேவர் மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, முத்துராமலிங்கத் தேவரின் சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. "முத்துராமலிங்கத் தேவருக்குச் சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்? என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்."

(தலித்களுக்குத் தாம்தான் தலைவர் என்றும், தானே பல தலித்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், இம்மானுவேலை அவர்களின் தலைவராகத் தன்னால் ஏற்க இயலாதென்றும் தேவர், அக்கூட்டத்தில் கூறி இருந்தார். சாதி இந்து மனதில் ஆண்டாண்டு காலமாய் வேரோடிய சாதி வெறிதான் தலித்தின் தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறது. இதே போன்று தான், வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கரை, தீண்டப்படாதவர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்று காந்தி வாதிட்டார். சென்ற சட்டசபைத் தேர்தலில், திமுகவின் சாதி இந்துக்கள், கூட்டணியில் இருந்த தலித் கட்சியினரைத் தோற்கடித்தனர்.)
இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.

நீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் "ஒரு ஹரிஜன இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே! நீங்கள் மறவர்களா? என்று தமது ஆதரவாளர்களிடம் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை நான் கேட்டேன்" என்றார் அவர்.

கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமராஜர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதம், தேவரின் பல பரிமாணங்களை சட்டசபைக் குறிப்பேடுகளில் பதிய வைத்துள்ளது. இனி, சட்டமன்றக் குறிப்பேடுகள் பேசட்டும்.

உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் 26 அக்டோ பர் 1957 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து:

"..The Government received petitions alleging several cases of lawlessness as a result of the inflamatory speeches by Sri.Muthuramalinga Thevar, inciting his followers to harass Nadars and Harijans...."

கலவரத்தை நிறுத்திட கூட்டப்பட்ட சமாதான மாநாடு பற்றி அந்த அறிக்கை பின்வருமாறு சொன்னது:

"Recognized leaders of the different communities were invited to attend this Conference. It is on record, Sir, that Sri Muthuramalinga Thevar who attended the Conference questioned the leadership of one Sri Emmanuel, Leader of the Local Depressed Classes League, who was representing the Harijans, Sri Thevar is reported to have asked Emmanuel whether he could pose as a Leader of the same stature as Sri Thevar, and whether his assurances on behalf of the Harijans were worth having."

"It is also learnt, Sir, that while coming out of the Conference, Sri Muthuramalinga Thevar chided his followers for allowing even Pallans like Emmanuel to talk back to him. The very next day, Sri Emmanuel was brutally murdered at Paramakudi."

முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஜாதிக் கலகத்தை விதைக்க வெறியூட்டும் பேச்சை எங்கெல்லாம் தேவர் பேசினார் என்பதை அவ்வறிக்கை பட்டியலிட்டது - இவ்வாறு: "On 16th September 1957 addressing a public meeting at Vadakkampatti, Sri Thevar refered to the communal strife raging in Mudukulathur and Paramakudi areas. Obviously the reference was to the incidents which had occured at Arunkulam, Keelathooval, Veerambal, Ilanjambur, Irulandipatti and Sandakottai between 10th and 16th September 1957".

கீழத்தூவலில் இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்கப்போன போலீசாருடன் மோதிய மறவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விசாரிக்க அனுப்பப்பட்ட எஸ்.வெங்கடேஸ்வரன் I.C.S. முன்பு ஆஜராக வந்த மக்களை மிரட்டும் வகையில் தேவர், தனது காரினை விசாரணை நடந்த இடத்துக்கெதிரில் நிறுத்தி வைத்து அந்தக் காரிலே அவர் இருந்த செயலையும் பக்தவச்சலத்தின் அறிக்கை அம்மணமாக்கியது.

"In connection with the enquiry by Sri. S. Venkateswaran I.C.S. into the Police firing at keelathooval village through Sri Thevar had orally announced that he and his party would not take part in the enquiry, he seated himself in a car at the entrance of the building where the enquiry was held. This had the effect of preventing witness coming forward to tender evidence which might clash with Sri. Thevar's contentions."

திமுக உறுப்பினர் டாக்டர் சத்தியவாணிமுத்து அம்மையாரின் பேச்சில், 1937 தேர்தலில், ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றபோது தனக்கு வாக்களிக்காத ஹரிஜனங்களுக்கு அவர் (தேவர்) செய்த பயங்கரக் கொடுமைகள் குறித்தும், அதற்காக அவர் மீது மதுரை அடிஷனல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த விசாரணையும் வெளிப்பட்டது. டெபுடி தாசில்தார் சிதம்பரம் முதலியாரின் கால் வெட்டப்பட்டதும், சப்-மாஜிஸ்திரேட் ஒருவர் கொல்லப்பட்டதும் தேவரின் தூண்டுதலால் நடந்தது என்பதும் சட்டமன்ற விவாதத்தின்போது வெளியானது.

திமுக எம் எல் ஏ அண்ணாதுரை பேசும்போது 'முத்துராமலிங்கத் தேவர் 1933ஆம் வருஷத்திலிருந்தே பாண்டிய மண்டலத்தில் சாதித் துவேஷம் வளர்க்கக் கூடிய வகையில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்' எனக் குறிப்பிட்டார்.

முதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதி வெறி தேவர்களிடம், வெட்டுப்பட்டு சாகும்போது கூட தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் அளவிற்கு சாதி வெறி உச்சத்திற்குப் போய் இருந்தது. கலவரத்தில் வெட்டுப்பட்டு சாகப்போகும் சமயத்தில் முத்துராமன் சேர்வை என்ற மறவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. ஒரு மனிதன் சாகும்போது சொல்லும் வார்த்தைகள் பொதுவாக உண்மையாக இருக்கும் என்பது உலகத்தாரிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. முத்துராமன் சேர்வையின் மரண வாக்குமூலத்தை அன்றைய உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் வெளியிட்டார் " நான் ஒரு அரிஜன். அரிஜன வீட்டை நானே கொளுத்தினேன்". அந்த நபர் செத்த பிறகு, பிணத்தை வாங்க வந்தவர்களோ மறவர்கள். இவ்வாறெல்லாம் சாகும்போது கூட ஒருவன், தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் படி, சாதி வெறியேற்றிவிடும் அளவிற்கு அவர்களின் அன்றைய தலைவர் இருந்தார்.

முதுகுளத்தூர் கலவரம் ஆரம்பமாகும் முன்,முத்துராமலிங்கத் தேவர், தன் சாதி மக்களிடம், "தேவர்கள் தேவர் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டுமென்றும்","நாடார் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்றும்" கூறி இருந்தார். இப் பேச்சு, ராம.கோபாலன் வெறியேற்றிவிடும் "இந்துக்கள், இந்துக் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டும்" எனும் பேச்சுடன் மிகச் சரியாகப் பொருந்துகிறது.
**********************
கேப்பை, நெய், கேனைப்பயல்கள் மற்றும் தேவர்:
இரண்டாம் உலகப் போரில் மர்மமான முறையில் மாண்டுபோன நேதாஜியை, 'அவர் சாகவில்லை, மறைவாய் வாழ்கிறார்' என்று கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வதந்தி ஒன்று மக்களிடையே பரவி இருந்தது. அதனை ஊதி ஊதிப் பெருக்கி விட்டவர்களில் தேவரும் ஒருவர். தாம், 1950 இல் கொரியப் போரின்போது கொரியா சென்றிருந்ததாகவும் அப்போது நேதாஜியை சந்தித்ததாகவும் கூறிவந்தார். வட தென் கொரியப் போரில் நேதாஜி பங்கெடுத்ததாகவும், தேவரும் அப்போரில் ராணுவப் பயிற்சி எடுத்ததாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருடைய பேச்சுக்கள் பல இடங்களில், எதைச் சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள் எனும் அதீத நம்பிக்கையால் வெளிப்பட்டிருக்கும்.

உதாரணமாக ஒரு கூட்டத்தில் தேவர் "வரும் அக்டோ பர் 28 அன்று யாம் செந்திலாண்டவருடன் சேவற்கொடியேற்றி, வேல் கைப்பிடித்து, மயிலாசனத்தில் வானத்தில் தரிசனம் கொடுப்போம். அப்பொழுது, சென்னை செண்ட் ஜார்ஜ் கோட்டையில் குண்டு வீசி, காமராஜரைக் கைது செய்வோம். பின்னர், டில்லி செங்கோட்டையில் குண்டு வீசி, நேருவைக் கைது செய்வோம்" என்று பேசியதையும்,

"இதோ 50 லட்சம் பேர் கொண்ட படையுடன் நேதாஜி வருகிறார்" என்றும், "திபெத்தில் நேதாஜி நுழைந்து விட்டார்" என்றும்,"நேபாளில் சுதந்திர சேனை", "சிங்கியங்கில் நேதாஜி" என்றெல்லாம் அளந்து வந்ததையும் என்.ஆர்.தியாக ராஜன் எனும் எம் எல் ஏ சட்டசபையில் பேசி இருக்கிறார்.

"மடியில் அணு குண்டு(??) வைத்திருப்பதாகவும்", "மூன்றாம் உலக யுத்தத்தை முதுகுளத்தூரில் ஆரம்பிப்பேன்(!!!)" என்றும் மேடையில் முழங்கிய தேவரின் பல சவடால்கள் விநோதமாய் இருக்கும்.

"மாக்னெட் நோஸ் (காந்தக் கருவி) ஒன்றை வைத்து சமுத்திரத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் பனிக்கட்டி ஆக்கி விட முடியும், அதனால் கப்பல்கள் எல்லாம் அங்கங்கே ஸ்தம்பித்துப் போய்விடும் , இதன் மூலம் இங்கிலாந்து அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளை எல்லாம் நாம் பிடித்து விடலாம்" என்றும் சொன்ன தேவர், இப்படியாப்பட்ட மாக்னெட் நோசை, தன் மடியில் கட்டி வைத்திருப்பதாகவும் சொன்னதுதான் விசேசம்.

இம்மாபெரும் தலைவர், பல முறை மக்களால் பயம் கலந்த பக்தியுடன் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்யப்படுவதை எதிர்த்தவாறுதான் இருந்து வந்துள்ளார்.

காமராஜரின் காலகட்டத்தில் பட்டி தொட்டி எல்லாம் பள்ளிக்கூடங்கள் பெருகியபோது "பள்ளிக்கூடம் எல்லாம் வந்தா எல்லா சாதிப்பயலுகளும் படித்து விட்டு, டவுனுக்குப் போயி இங்கிலீஷ் படித்து விட்டு, நம் ஜாதி ஆட்களுக்கு மரியாதை தராமல் இருப்பார்கள்" என யூகித்து, பள்ளிகள் வருவதை எதிர்த்து வந்தார்.

சட்ட மன்ற உறுப்பினர் சிதம்பர பாரதியின் சட்டமன்ற உரை "அங்கே ரோடு வசதியைப் பெறுவதற்கு முயற்சி செய்யலாம் என்று கூறினால், "இல்லை. ரோடு வேண்டாம். ரோடு வந்தால் ரொம்ப ஆபத்து. நாங்கள் ஏதாவது கோபத்தில் சண்டையிட்டு அடித்துக் கொள்வோம். உடனே போலீசில் புகார் கொடுக்க மாட்டோ ம். பிறகு 4,5 நாட்கள் ஆனவுடன், நாங்களே பஞ்சாயத்து பண்ணிக் கொள்வோம். ஆகவே ரோடு வந்தால் ரொம்ப ஆபத்தாகிவிடும்" என்று தேவரின் ஆதரவாளர்கள் சொல்லியதிலிருந்தே, அவர் தொகுதியில் நடைபெற்ற வளர்ச்சிப் பணியின் யோக்யதை தெரிந்திருக்கும்.
*****************
இந்துத்துவத்திற்க்கு விளக்கு பிடித்த கதை:

தேவரின் பல கருத்துக்கள், இந்து மதவெறிக் கட்சியினரின் கருத்துக்களோடு ஒத்துப் போகின்றன."அரசியலுக்கு வரும்போது 'அரசியல் வேறு மதம் வேறு. இரண்டையும் சேர்த்துக் குழப்புகிறார்கள்' என்ற பேச்சு நடைபெறுகிறது. அரசியல் இல்லாமல் மதமில்லை. மதமில்லாமல் அரசியல் இல்லை. மதம் இல்லாத தேசம், வேரில்லாத மரம் போல. எந்தக் காற்றிலும் விழுந்து விடும்" என்றும் "இங்கே மதமும், அரசியலும் சேரக் கூடாதென்று சொல்லி இங்கிலீஷை காலேஜில் சொல்லிக் கொடுத்துக் கெடுத்தான்" என்றும் 1957 காஞ்சிபுரம் கூட்டத்தில் கூறி இருக்கிறார்.

"சுதந்திரம் வாங்கிய பிற்பாடு நாட்டில் ஏற்பட்ட நிலைமை என்ன? பாகிஸ்தானிலே மாட்டிக் கொண்ட 1 1/2 கோடி மக்களின் கதி என்ன ஆயிற்று? அவர்கள் நடுச்சந்தியிலே நிறுத்தப்பட்டார்களே? சொத்தை இழந்து, வாழ்க்கை நிலைமை இழந்து, மனைவி மக்களை இழந்து அலறித் துடித்தார்களே? அதற்காக இங்கே இருக்கும் முஸ்லீம்களைப் பாகிஸ்தான் ஓடு என்று ஆச்சாரியார் கோஷ்டி (சூதறிஞர் ராஜாஜி-அழுத்தம் எமது)யால் விரட்ட முடிந்ததா? அல்லது அவர்களைத்தான் நீங்கள் "பாகிஸ்தான் பிரஜை போ" என்று சொல்ல முடிந்ததா?" என்று பால் தாக்கரே, அத்வானி போன்ற பாசிஸ்ட்கள் போன்று தேவர், சட்டசபையில் 1952 ஜூலை 3 ல் பேசி இருக்கிறார்.

கோல்வால்கர், இந்து மகாசபைத்தலைவர் மதுரைக்கு வந்தபோது அவருக்கு பணமுடிப்புக் கொடுத்து சிறப்பு செய்ய ஏற்பாட்டை செய்தவர், முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அதற்காக அவர் சொன்ன காரணம்-"ஹிந்து மதத்தின் விரோதி மகாத்மா காந்தி. ஆதலால் தான் நான் கோல்வால்கர் அவர்களுக்குப் பண முடிப்புக் கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இசைந்தேன்."

காங்கிரசு உறுப்பினர் சுவாமி சகஜானந்தாவின் பேச்சில் வீராம்பல் ஊரில் நடந்த இரட்டைக் கொலைக்கான (கொல்லப்பட்டவர்கள் தலித்கள்) வேறொரு காரணம் வெளிப்பட்டது."வீராம்பலில் எப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடந்திருக்கின்றன? அங்கே இரண்டு ஹரிஜனப் பையன்கள், தாங்கள் முஸ்லீம் மதத்தில் சேர வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அவர்களுடைய பிரசிடெண்டையும் செக்ரெட்டரியையும் கொலை செய்து விட்டார்கள்".
****************
சட்டசபை உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந்திரன் (1957-62ல் உறுப்பினர்) முதுகுளத்தூர் பிராந்தியத்தில் பயணம் செய்தபோது, மறவர் குலப் பெண்கள், அவரிடம் கேட்ட கேள்வி "ஹரிஜனங்கள் முக்குலத்தாரைப் பெண் கேட்க வந்தார்களாமே? பெண் கேட்க வருவதற்கு அத்தனை துணிச்சலா?" என்பதாய் இருந்தது. இது அப்போதைய கலவரத்தில் பொது மக்களிடையே பரப்பப்பட்ட வதந்திகளில் முக்கியமான ஒன்று. அச்சம்பவத்திற்கு இது வரை ஆதாரம் ஏதும் கிடைக்காதபோதும், ஜாதி இந்து மக்கள் அவ்வதந்தியை இன்னமும் எளிதில் நம்பி உணர்ச்சி வசப்பட்டு, சாதிக் கலவரத்திற்கு தயாராகி விடுகின்றனர்.

அப்படி என்ன வதந்தி அது?தேவரும், இம்மானுவேல் சேகரும், சமாதானக் கூட்டத்திற்கு வந்தபோது, இம்மானுவே, தேவர் முன்னால் சிகெரெட் பிடித்தபிடி, கால்மேல் கால் போட்டபடி சரி சமமாய் அமர்ந்தாராம். உடனே தேவரய்யாவுக்கு ஜிவ்வென்று கோபம் ஏறி "..க்காளி.. இவனுக எல்லாம் நம்ம கூட சரி சமமா வந்திட்டானுங்க.." என்றாராம். இது இம்மானுவேல் காதில் விழுந்ததும், அவரது ஆதரவாளர்களுடன் பழம்,பூவுடன் சென்று தலித் பையன் ஒருவருக்கு, தேவர் வீட்டுப் பெண்ணைக் கேட்டனராம். காரணம், தேவரே, இம்மானுவேலிடம், மைத்துனனிடம் பேசிடக்கூடிய வசைச்சொல்லான '..க்காளி' என்பதனைப் பேசினாரே என்பதாம்.

கலவரத்தில் எண்ணெய் வார்க்க இந்த வதந்தி பயன்பட்டது.

இதே வதந்தி, சிற்சில மாறுபாடுகளுடன், 1989ல் போடி நாயக்கனூர் பகுதியில் ஜான் பாண்டியனை மையமாக வைத்துப் பரப்பப்பட்டு, கலவரத்தை விசிறி விட்டது.

****************
சமீப காலகட்டங்களில் தேர்தல் கமிஷன் பல கெடுபிடிகளைப் போட்டு, பிரச்சாரத்தை இரவு பத்து மணியுடன் நிறுத்திடச் சொல்லியதும், சில கட்சி வேட்பாளர்கள், பத்து மணிக்கு மேல் பேசுவதை நிறுத்தி விட்டு வெறுமனே கைகளைக் கூப்பி வணங்குவதுடன் சென்று விடுகின்றனர். இதெல்லாம் ஏதோ புதுமை என்று எண்ணி இருக்கையில், 1952 தேர்தலுக்கு முன்பிருந்தே தேவர் இவ்வாறுதான் செய்திருக்கிறார். ஆனால் தேவரைப் பேச விடாமல் தடுத்தது தேர்தல் கமிஷன் அல்ல. அரசாங்கம். இவர் வாய் திறந்து பேசினாலே சாதி மோதல்தான் உருவானது. எனவே அரசு இவருக்கு வாய்ப்பூட்டு போட்டது.ஆனால் தேவர், 1957 முதுகுளத்தூர் கலவரத்தின்போதும், 'மவுனமாகக் கைகூப்பும் முறையை' கலவரத்தை தூண்டிவிட பயன்படுத்தினார். அறிக்கை ஏதின்றி வெறுமனே தேவரின் கைகூப்பிய முழுப்படம் ஒன்றை 'தினமணி' என்றெல்லாம் விளம்பரமாய்ப் பிரசுரித்ததோ, அன்றெல்லாம், கலவரம் உக்கிரம் பெற்றுள்ளது.

இங்கு எண்ணற்ற ஆதாரங்களை தேவரின் சாதி வெறிப்போக்கிற்கான சான்றாகக் காட்டினாலும் தேவர் அபிமானிகள், 'தேவர் தனக்கு சொந்தமாய் இருந்த எக்கச்சக்கமான ஏக்கர் நிலங்களை தலித்களுக்கு எழுதிக் கொடுத்தவர்' என்று சொல்வது வழக்கமே. அவ்வாறு தேவர் நிலம் தந்தமைக்கு இருந்த உள்நோக்கத்தை அன்றைய அமைச்சர்கள் பக்தவச்சலமும், சி.சுப்பிரமணியமும் சட்டசபையில் போட்டு உடைத்துள்ளனர் 'தனக்கு விசுவாசமாய் வாலாட்டும் ஓர் அடியாள் படையை தேவர் இவ்வாறுதான் உருவாக்கினார்' என்று.

*************************
ஆதார நூல்கள்
1) தேர்தல் மேடைகளில் பசும்பொன் தேவர் - தொகுப்பு கே.ஜீவபாரதி2) பசும்பொன் தேவரும் கம்யூனிஸ்ட்களும் - தொகுப்பு கே.ஜீவபாரதி3) பசும்பொன் தேவரின் கட்டுரைகள் - தொகுப்பு கே.ஜீவபாரதி4) சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர் - தொகுப்பு கே.ஜீவபாரதி5) பசும்பொன் தேவரும் திராவிட இயக்கங்களும்- தொகுப்பு கே.ஜீவபாரதி6) சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு - தொகுப்பு கே.ஜீவபாரதி
*************************
கற்பக விநாயகம்

பதிந்தவர் அசுரன்

Monday, October 22, 2007

தஞ்சை பொதுக்கூட்டத்தில் தோழர்.மருதையன் ஆற்றிய உரை !!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
..
இராமன் பாலம் என்பது புராணப் புரட்டு !
திருச்சியில் பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு!
..
15-10-2007 அன்று தஞ்சை பொதுக்கூட்டத்தில் தோழர்.மருதையன் ஆற்றிய உரை


பகுதி 1

http://www.esnips.com/doc/05f2291f-d7da-45eb-a818-b7dbde5603d7/maruthaiyan-speech-1
..
பகுதி 2
http://www.esnips.com/doc/51ad5669-b2bf-4109-8406-55a1b52c7081/maruthaiyan-speech-2

நன்றி இவான்
..
இந்த உரையுடன் பேராசிரியர்.பெரியார்தாசன் அவர்கள் 15.10.2007 அன்று திருச்சியில் ஆற்றிய உரையும் சேர்த்து ஒலிக் குறுந்தகடு வடிவில் வெளிவந்து உள்ளது.
..
தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.
..
புதிய கலாச்சாரம்
சென்னை
தொலைப் பேசி எண் : 044- 23718706
..
நன்கொடை ரூ30

Saturday, October 20, 2007

இராமன் பாலம் என்பது புராணப் புரட்டு ! திருச்சி பொதுக்கூட்டத்தில் பேராசிரியர்.பெரியார்தாசன் ஆற்றிய உரை !!



மக்கள் கலை இலக்கியக் கழகம்
இராமன் பாலம் என்பது புராணப் புரட்டு !
திருச்சியில் பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு!
14-10-2007 அன்று திருச்சி பொதுக்கூட்டத்தில் பேராசிரியர்.பெரியார்தாசன் ஆற்றிய உரை


Get this widget Track details eSnips Social DNA


நன்றி இவான்

இந்த உரையுடன் தோழர்.மருதையன் அவர்கள் 15.10.2007 அன்று தஞ்சையில் ஆற்றிய உரையும் சேர்த்து ஒலிக் குறுந்தகடு வடிவில் வெளிவந்து உள்ளது.

தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.

புதிய கலாச்சாரம்
சென்னை
தொலைப் பேசி எண் : 044- 23718706
நன்கொடை ரூ30

Tuesday, October 16, 2007

சென்னை முழுவதும் பொதுக்கூட்டங்கள் & புரட்சிகர கலைநிகழ்ச்சி !



சுந்தர ராமசாமி:இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள்உறையும் அற்பவாத இதயம் !

சுந்தரராமசாமி அவரது அபிமானிகளின் கூற்றுப்படி, நவீனத்துவத்தின் இலட்சிய உருவமாய், பாதைகள் மயங்கும் அந்தி யில், நினைவின் நதியில், பின்னும் உயிர்வாழும் கானலாய், இறுதியில், காற்றில் கலந்த பேராசையாய் மறைந்து விட்டார். அவரைப்பற்றி நாங்கள் என்ன எழுத முடியும், ஏன் எழுதவேண்டும் என்பது ஒருபுறமிருக்க, அவர் உயிரோடு படைப்பின் முக்கி முனகும் அவஸ்தையோடு வார்த்தைகளை அச்சிட்டு சந்தைப்படுத்தி "சிற்றி லக்கிய உலகில் இங்கொருவன் இருக்கின்றேன்' என்று ஜாக்கி வைத்த பல்லக்கில் பிதாமகராய் உலா வந்த நேரத்தில் கூட அவரை நாங்கள் கண்டு கொண்டதில்லை. அதேசமயம் அப்படி முழுவதுமாய் அவரை ஒதுக்கி வைத்ததாகவும் சொல்லிவிட முடியாது.
..
..
கிழே இணைப்பினை க்ளிக் செய்து ஓரங்க நாடகத்தினை படிக்கவும்:-.

Monday, October 15, 2007

வந்தே மாதரம்:எட்டப்பர்களின் தேச பக்தி பஜனை!


சக மனிதர்களைக் கூட நம்ப மறுக்கும் அளவிற்கு நாட்டு மக்களை நிரந்தர பயத்தில் ஆழ்த்துவதற்காக ""முஸ்லீம் பயங்கரவாதம், குண்டு வெடிப்பு, முக்கிய தலைவர்களைக் கொல்ல தீவிரவாதிகள் சதி'' என்ற வழக்கமான பீதியை மீண்டும் ஒருமுறை அனைத்து ஊடகங்களும் ஆகஸ்ட் 15ஐ முன்னிட்டு உரக்கச் சொல்லி ஓய்வதற்குள், அடுத்து கல்லா கட்ட ஆரம்பித்து விட்டது ""தேசபக்தி'' பஜனையும் அதையொட்டிய லாவணிக் கச்சேரிகளும்.

மைய அமைச்சர் அர்ஜுன் சிங், "வந்தே மாதரம்' பாடலின் நூற்றாண்டு விழாவினை முன்வைத்து, செப்டம்பர் ஏழாம் தேதியன்று நாட்டிலுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் கட்டாயமாக "வந்தே மாதரம்' பாடவேண்டும் என்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதைத் தொடர்ந்து, தேசபக்தியை ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்துள்ள பா.ஜ.க. கும்பல், பாட மறுப்பதை தேசத் துரோகமாகச் சித்தரித்து, சிறுபான்மையினருக்கு எதிரான தனது வழக்கமான அவதூறுப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது. தான் ஆளும் மாநிலங்களில் இப்பாடலைப் பாடவேண்டியது கட்டாயம் என உத்தரவிட்டது. குறிப்பாக அம்மாநிலங்களில், அனைத்து மதரஸாக்களும் இந்தப் பாடலைத் தங்களது மாணவர்களைக் கட்டாயமாகப் பாடச் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த நாட்டை விட்டு வெளியேறி அந்நிய நாட்டில் அடிமை வேலை செய்யும் ""அம்பி''கள் அனுப்பும் அமெரிக்க டாலரை நன்கொடையாக வாங்கிக் குவிக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பன்னாட்டுத் தலைவரான அசோக் சிங்கால், ""வந்தே மாதரத்தைப் பாட மறுப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்'' என்று பேட்டி கொடுத்துள்ளார். மறுபுறம், ""சுதந்திரப் போராட்டக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் போராட்டத்தை நோக்கி ஈர்த்த இந்தப் பாடலைப் பாட மறுப்பது தேசத்துரோகச் செயல்'' என ஆட்சியாளர்களால் விரிவாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

"திராவிட நாடு' கேட்டுக் கொண்டிருந்தபோது, இதே பாடலை "வந்தே ஏமாத்துறோம்' என நக்கலடித்த கருணாநிதியோ, இன்று பெருமுதலாளியாகி, தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டதால், "பாட வேண்டியது கட்டாயமில்லை' என்று இந்தப் பஜனைக்குச் சுருதி தப்பாமல் பின்பாட்டுப் பாடுகிறார். சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில், சுதந்திரப் பொன்விழாவை ஒட்டி ஒரு மைல் நீளத்துக்கு தேசியக் கொடியைத் தெருவெங்கும் பரத்திப் பரவசப்பட்டவர்கள்தானே இவர்கள்! சமயம் கிட்டும்போதெல்லாம் ""கழக அரசுதான் கார்கில் நிதியை அதிகமாகக் கொடுத்தது'' என்று தம்பட்டம் அடித்து இந்திய தேசிய சாக்கடையில் மூழ்கவும் தயங்காத இவர்கள், இம்முறை பா.ஜ.க.வின் பஜனையில் கரைந்து போனது ஆச்சரியமில்லைதான்.

இவர்கள்தான் இப்படி என்றால், மே.வங்கத்தை ஆளும் போலி கம்யூனிஸ்டும், தரகு முதலாளிகளின் கையாளுமான புத்ததேவ் பட்டாச்சார்யாவும், ""அனைவரும் பாடலாம்; ஆனால் பாடவேண்டியது கட்டாயம் இல்லை'' என்று கூறி ஒதுங்கிவிட்டார். மதச்சார்பின்மைக்காக காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள், பா.ஜ.வின் இந்து தேசியவெறியை எதிர்க்கத் துப்பில்லாமல், காங்கிரசும் பா.ஜ.க.வோடு ஓரணியில் நிற்பதைப் பார்த்து அடங்கிப் போய் மவுனம் காக்கின்றனர்.

முதலில் இந்த ஆண்டு, வந்தே மாதரம் பாடலின் நூற்றாண்டே அல்ல. 1870களில் எழுதப்பட்டு 1882இல் ஒரு நாவலில் சேர்க்கப்பட்ட ஒரு பாட்டுக்கு இந்த ஆண்டுதான் நூற்றாண்டு எனத் திடீரென விழா எடுப்பதற்கு அவசியமென்ன வந்தது? அமெரிக்காவின் அடியாளாக மாறிக் கொண்டிருக்கும் இந்த அரசு சமீபத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்கு, அணுசக்தி விஞ்ஞானிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்து சேர்ந்து, தனது முகமூடி கிழிந்து தொங்கியதாலும், மறுகாலனியத் தாக்குதலால் உழைக்கும் மக்களிடம் வெறுப்பும் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆத்திரமும் பெருகி வருவதாலும், பிரச்சினையைத் திசைதிருப்பி தேசபக்தித் தீயை மூட்டிக் குளிர்காய அரசு நினைத்தது. ஆளும் கட்சியினருக்கு இது ஒன்றும் புதியதல்ல; முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது தேசிய வெறியைக் கிளப்ப போக்ரானில் அணுகுண்டு வெடித்தும், பிரச்சினைகள் முற்றியபோது எல்லைப்புறத்தில் சிப்பாய்களைக் கொண்டு போய் நிறுத்தி தோட்டா ஒன்றைக் கூடச் சுடாமல் "போர் பீதி'யை கிளப்பியதும் யாவரும் அறிந்ததுதான்.கட்சிக்குள் நிலவும் கோஷ்டி தகராறால் உமாபாரதி வெளியேற்றம், போதைப் பொருள் உபயோகித்துக் கையும் களவுமாய் மாட்டிய ராகுல் மகாஜன் விவகாரம், ஜார்கண்ட் மாநிலத்தில் பறிபோன ஆட்சி, முக்கிய தலைவர்களின் ஒழுக்கக்கேடுகள் ""வீடியோ சிடி''களாக வெளிவந்த விவகாரம் என அழுகி நாறிக் கொண்டிருக்கும் பா.ஜ.க.விற்கு, அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் வரப்போகும் உ.பி., போன்ற மாநிலங்களின் தேர்தலுக்கு உதவிட அருமருந்தாய் இந்த வந்தே மாதரம் விவகாரம் கிடைத்தவுடன் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தது. "முஸ்லீம்கள் பாட மறுக்கிறார்கள், அதனால் அவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள்' என மக்களிடையே இந்துமுஸ்லீம் பிளவைக் கூர்மைப்படுத்தி, தனது இந்துவெறி ஓட்டு வங்கியைத் தூசு தட்ட ஆரம்பித்தது. ஏற்கெனவே "கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஜெயித்தால் வெடி போடுகிறார்கள்' என்று முஸ்லீம்களுக்கு எதிராகச் சொல்லி வந்த அவதூறின் தொடர்ச்சியாக "வந்தே மாதர' விவகாரத்தை அக்கட்சி கையில் எடுத்துக் கொண்டது. செப்டம்பர் 7ஆம் தேதியன்று காங்கிரசு தலைவி சோனியா "வந்தே மாதம்' பஜனையில் கலந்து கொள்ளாததை ஊதிப் பெருக்கி ""சிறுபான்மையினரை தாஜா செய்கிறார்'' என்று தனது மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.

வந்தே மாதம் பாடலுக்கும் நாட்டுப்பற்றுக்கும் அப்படியென்னதான் சம்பந்தம் இருக்கிறது?

1882ஆம் ஆண்டு வெளிவந்த ""ஆனந்த மடம்'' எனும் வங்க நாவலில் இடம் பெற்ற பாடல்தான் "வந்தே மாதரம்'. இந்த நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெபுடி மாஜிஸ்ரேட்டாக விசுவாசமான காலனிய சேவை செய்த சாட்டர்ஜி, 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் நவாபுக்கு எதிராக நடந்த வைணவ சந்நியாசிகளின் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை எழுதினார்.1773ஆம் ஆண்டில் வங்காளத்தில் வந்த பஞ்ச காலத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. அன்றைய வங்காள நவாபான மீர் ஜாபரின் கஜானாவை சந்நியாசிகள் கொள்ளையடிக்கின்றனர். இந்த நாவலில் வரும் பவானந்தன் எனும் கதாபாத்தி ரம், நவாபுக்கு எதிராக வைணவத் துறிவிக் கூட்டத்துடன் அரசாங்கக் கஜானாவைக் கொள்ளையிடவும், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் செல்லும்போது "வந்தே மாதரம்' பாடலினைப் பாடியபடியே மக்களைத் திரட்டுவதாய் நாவல் செல்கிறது.

""இந்தப் பாதகர்கள் நிரம்பிய யவனபுரியைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்தவிட வேண்டும்'' என்றும், ""இந்தத் துன்மார்க்கர்கள் கூட்டத்தை தீ வைத்து எரித்து அன்னையாகிய நமது தாய்நாட்டை மீண்டும் பரிசுத்தமாக்க வேண்டும்'' என்றும் ""நமது தேவாலயங்களை இடித்து அவற்றின் மீது அவர்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறிந்து மறுபடியும் ராதா மாதவர்களுக்கு (கிருஷ்ணனுக்கு) கோயில் கட்டுவோமாக!'' என்றும் முஸ்லீம்களுக்கு எதிராக இந்நாவல் நெருப்பைக் கக்குகிறது.

""இத்தாடிப் பயல்களைத் தேசத்தை விட்டுத் துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்குச் சேமமில்லை'' என்றும் ""இம் மகம்மதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து ஆற்றில் விடக் கருதினோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்பலாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம்! நண்பர்களே! அதற்கான காலம் வந்துவிட்டது. வாருங்கள்! நாம் சென்று அந்த இஸ்லாமியப் பாவிகளின் இருப்பிடத்தை அழிப்போம். அப்பன்றிகளை அடைக்கும் பட்டியை எரிப்போம். அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளை எல்லாம் காற்றில் பறக்க விடுவோம்'' என்றெல்லாம் நஞ்சைக் கக்கி விட்டு, கூடவே, ""பகவான் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!'' என்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி.

முஸ்லீம்களை தீ வைத்துப் பொசுக்குவதுதான் தேசத்தைப் பரிசுத்தமாக்குவதாம்! இதைத்தானே சங்கப் பரிவார பாசிஸ்டுகள் குஜராத்தில் செய்து முடித்தார்கள்! முஸ்லீம்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த் தெறியும் திட்டத்தின் மூல விதையை பார்ப்பனபாசிச கும்பலுக்கு இந்த நாவல்தான் விதைக்கிறது எனும்போது, இந்நாவலில் இடம் பெறும் பாடலும் இந்து பயங்கரவாதிகளுக்கு உவந்து போனதில் வியப்பென்ன?

வந்தே மாதரம் என்றால் "தாய்க்கு வணக்கம்' என்று பொருள். எந்தத் தாய்க்கு வணக்கமாம் அது? பாட்டின் இரண்டாம் பகுதியில் இதற்கு பதில் இருக்கின்றது. பார்வதி, காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்றெல்லாம் சுட்டப்படுபவள்தான் இந்தத் தாய். பாரதியார் மொழிபெயர்த்துள்ள வந்தேமாதம் பாடலில் இது தெளிவாகவே உள்ளது.இந்தத் தாயைப் ""அகண்ட பாரத மாதா''வாக புரமோஷன் கொடுத்த கைங்கர்யத்தைக் காங்கிரசுக் கட்சி 1906இல் செய்தது. 1930களின் இறுதியில் இப்பாடலை "தேசிய கீதமாக்க' காங்கிரசுக் கட்சி முயன்றது.

இப்பாடலுக்கு இசையமைத்த கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் ""வந்தே மாதரம் பாடல் துர்க்கை அன்னையை வணங்குவது போலப் பாடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்கள் தவிர முஸ்லீம்கள் மற்றும் பல மதத்தினர் இருக்கின்றனர். எனவே இந்தப் பாடலைத் தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது'' என்று 1937இல் எதிர்த்துள்ளார். எம்.என்.ராயும், சுபாஷ் சந்திரபோசும் இப்பாடலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

1937இல் சென்னை மாகாண பிரீமியராக ராஜாஜி இருந்தபோது, சென்னை சட்டசபையில் இப்பாடலைப் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். பாடல் பாடுகையில் எழுந்திருக்க மறுத்து 2 இஸ்லாமிய உத்யோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரிஸ்ஸா சட்டசபையிலும் இது எதிர்ப்பை சம்பாதித்தது. பெரியாரின் ""குடியரசு'' பத்திரிகை அப்போதே இப்பாடலின் முஸ்லிம் விரோதப் போக்கை அம்பலப்படுத்தியிருக்கின்றது.

நான்கு கைகள் முளைத்த லட்சுமியைக் காட்டி அவள்தான் "பாரதமாதா' என்றும், அவளை அனைவரும் வழிபட வேண்டும் என்று மற்ற மதத்தினரைக் கட்டாயப்படுத்துவதும் பார்ப்பன (இந்து) வெறியன்றி வேறென்ன?முஸ்லீம்களை வெறுக்கக் கற்றுத்தரும் இதே நாவல், ஆங்கிலேயர்களுக்கு அதிக விசுவாசமாக ""ஆங்கிலேயர்கள் நமக்குப் பகைவர்கள் அல்லர்'' என்றும் ""இந்த சந்தான சந்நியாசிகள் செய்த புரட்சியின் காரணமாகவே அரசுப் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஏற்க வேண்டி வரும்'' என்றும் கூறுகிறது. பல இடங்களில் பிரிட்டிஷாரை வெகுவாகப் புகழ்கிறது. இந்து தர்மம் தழைக்கக் கூட ஆங்கிலேயனின் ஆதிக்கம் வேண்டுமென ஆன்மீகக் கயமைத்தனத்தைக் காட்டுகிறது இந்நாவல்.

நமது நாட்டின் சக குடிகளான இசுலாமியர்களை அழிக்கவும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடிகளை உருவாக்கவும் முனையும் இந்த நாவலில்தான் இன்றைக்கு தேசபக்தியின் அடையாளமாகக் காட்டப்படும் "வந்தே மாதரம்' பிறந்துள்ளது. இப்பாடலை வைத்து தேசபக்தி பஜனை பாடும் பா.ஜ.க., காங்கிரசு இரண்டுமே நாவல் குறிப்பிடுவது போலவே நாட்டின் சிறுபான்மை மக்களை அழிப்பதிலும், நாட்டை அன்னியனுக்குக் காட்டிக் கொடுப்பதிலும் ஓரணியில் நிற்கின்றன.

வந்தே மாதரத்தைப் பாடுவதன் மூலம் ஒருவன் தேசப் பற்றாளன் என்றோ, அதைப் பாட மறுப்பவன் தேசத்துரோகி என்றோ கருதி விட முடியுமா? அப்படியானால் ""வண்டே... மாட்றம்'' என்று நவீன மெட்டுக்கள் மூலம் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களை வைத்து இந்தியா முழுவதும் இப்பாடலை ஒலிக்கச் செய்து, கல்லாவை நிரப்பிக் கொண்ட அந்நிய நிறுவனமான ""சோனி''தான் "இந்திய நாட்டின் சிறந்த தேசபக்தனாக' இருக்க முடியும்.

போலியான தேசபக்தி அரட்டைக் கச்சேரி செய்யும் காங்கிரசு கும்பலோ தாம் ஆண்ட ஐம்பது ஆண்டுகளில் அடுத்தடுத்து நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து, இந்திய ராணுவத்திற்கு போர் விமானம், போபர்சு பீரங்கி, நீர் மூழ்கிக் கப்பல் வாங்குவதிலும் ஊழல் செய்து திளைத்தது. அதீத கூச்சல் போடும் பா.ஜ.க.வோ, சீமைச் சாராயம், விபச்சார அழகிகளுக்காக ராணுவ ரகசியங்களை விற்க முன்வந்ததையும், கார்கில் போரில் மாண்ட வீரர்களின் உடலை எடுத்துச் செல்லும் சவப்பெட்டிகளில்கூட கமிஷன் அடித்ததையும் மறைத்துவிட்டு, "வந்தே மாதரம் பாடுவதுதான் தேச பக்தி' எனக் கூச்சல் போடுகிறது. காசுக்காகவும், சாராயத்துக்காகவும், விபச்சாரிகளுக்காகவும் நாட்டின் பாதுகாப்பையே விற்ற இவர்களுக்குத் தேச பக்தி பற்றிப் பேசிட அருகதை உண்டா?

ஒரு நாடு என்பது நாட்டு மக்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் இயற்கை வளங்களையும் பண்பாட்டையும் குறிப்பதாகும். நாட்டு மக்களின் மீதும், நாட்டின் மீதும் உண்மையான அக்கறையுடன், அந்நிய ஆக்கிரமிப்புக்கும், ஆதிக்கத்துக்கும் எதிராகவும், நாட்டு மக்கள் நலன் மீது மாளாக் காதலுடனும் போராடுவதே உண்மையான நாட்டுப் பற்றாகும். இதைச் செய்யாமல் தேசத்துரோக ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் இறையாண்மையை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்து விட்டு, "வந்தே மாதரம்' பஜனை பாடுவது நாட்டுப் பற்றாகாது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது வந்தே மாதரத்தைவிட வேறு இரண்டு முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன. அவை: சுபாஷ் சந்திரபோஸின் ""ஜெய்ஹிந்த்'' மற்றும் பகத்சிங்கின் ""இன்குலாப் ஜிந்தாபாத்'' 1929இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவிருந்த தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத்தைக் கண்டித்துப் போராடும் விதமாக வெடிகுண்டு வீசியபோதும், பின்பு ராஜகுரு, சுகதேவுடன் தூக்கிலிடப்பட்டபோதும் பகத்சிங் முழங்கியது இதே "இன்குலாப் ஜிந்தாபாத்'தான். அத்தகைய தேசப்பற்றாளனின், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் பிறந்தநாள் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான்.

""புரட்சி ஓங்குக!'' (இன்குலாப் ஜிந்தாபாத்!) என பகத்சிங் முழங்கிய முழக்கம்தான் நூற்றாண்டுகளைக் கடந்து இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இனிவரும் நூற்றாண்டும் புரட்சியின் நூற்றாண்டாக இருக்கப் போகிறதே அன்றி, இந்துவெறி தேசியவெறிக்கானதாக இருக்கப் போவதில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பும் நாட்டுப்பற்றும் மதச்சார்பின்மையும் கொண்ட புரட்சியின் முழக்கம்தான் இனி நாடெங்கும் எதிரொலிக்கப் போகிறதே தவிர, ஏகாதிபத்திய கைக்கூலிகளின் வந்தேமாதரம் பஜனை அல்ல.
..

மு அன்பு

Thursday, October 11, 2007

நீ இந்து என்றால் சொல் சம்மதமா

சம்மதமா சம்மதமா நீ இந்து என்றால் சொல் சம்மதமா !
சொல்லிடு உன்னால் முடியுமா !
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !
சொல்லிடு உன்னால் முடியுமா !

நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !
இல்லை கண்டும் காணாத கல்லினமா!
கண்டும் காணாத கல்லினமா!

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

கண்ணில் விழுந்ததும் தூசியல்ல !
என் கண்ணிரும் ஒயவில்லை
நெஞ்சை அறுக்கும் சோகமடா !
அந்த பிஞ்சு முகம் கண்ணில் ஆடுதடா !
தொழுகை முடிந்த வாசலிலே அந்த அழுகை யாருக்கும் கேக்கலியே !

கேட்டது கொலை வெறி சத்தமடா
அது வேட்டைக்கு அலைந்த கூட்டமடா !
கேட்டது கொலை வெறி சத்தமடா
அது வேட்டைக்கு அலைந்த கூட்டமடா !

குழந்தை மறைந்தது கூட்டத்திலே
பிஞசு குரலும் மறைந்தது கூச்சலிலே
குழந்தை மறைந்தது கூட்டத்திலே
பிஞசு குரலும் மறைந்தது கூச்சலிலே

சின்ன பிஞ்சை பிளக்க மனம் வருமா?
அது முஸ்லீம் என்றால் சம்மதமா
நீ இந்துவென்றால் சொல் சம்மதமா?

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

கங்கை சுமந்து மீன்களையா
தலை துண்டாய் போன உடல்களையா !
மண்ணில் விளைந்த கோதுமையே
நீ தின்று வளர்ந்தது பிணங்களையா !

கண்கள் அவிந்த பகல்பூரே
உன் பங்கினை கேள் இந்த பாவத்திலே !
தோட்டத்தின் மேலே பூக்களடா !

தோண்ட தோண்ட தலைகளடா !
கோதுமை கதிர்கள் பொன்நிறமா !
தூர்களின் வேரோ செந்நிறமா !

ஜென்மமடா ராம ஜென்மமடா !
இரத்த கங்கையில் பிறந்த ஜென்மமடா
மனித கறி நர மாமிசமா
உடல் முஸ்லிம் என்றால் சம்மதமா ?

நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

ஒடிவந்தனரே உயிர் பிழைக்க !
இடம் தேடி வந்தனரே உடல் நடு நடுங்க !
துர‌த்தி வந்தது கும்பல் ஒன்று
ஊரில் இருக்க வைத்தது அடைக்கலமென்று !

தேடிய கும்பல் நுழைந்ததடா
மூடிய கதவு திறந்ததடா !
அடைக்கலம் தந்த கைகள் அல்ல
அது ஆட்காட்டிகளின் கைகளடா !

துரோகமடா கொடுந் துரோகமடா
தூக்கத்தில் கொன்ற துரோகமடா
துரோகமடா கொடுந் துரோகமடா
தூக்கத்தில் கொன்ற துரோகமடா

கொடுத்த சோறு செரிக்கும் முன்னே
குடலை அறுத்த துரோகமடா
கொடுத்த சோறு செரிக்கும் முன்னே
குடலை அறுத்த துரோகமடா
துரோகிகள் மதம்தான் உன் மதமா ?

நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

சொல்லிடு உன்னால் முடியுமா
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா ?
சொல்லிடு உன்னால் முடியுமா
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா ?
இல்லை கண்டும் காணாத கல்லினமா?

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

என்று உலுக்குகிறது கோவனின் குரல்.. ஈரபசையுடைய ஒவ்வொருவர் இதயத்திலும் இந்த பாடல் ஒலித்து கொண்டேயிருக்கும்.
------------------
மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடல் வெளியிடான " காவி இருள்" யில் இருந்து பிரசுரிக்கப்பட்டு உள்ளது.

ஓரங்க நாடகம்- ராமன் இரட்டைக் கொலை வழக்கு

இராமாயணத்தில் கதாநாயகனான இராமனின் பல்வேறு கிரிமினல் குற்றங்களில் இரண்டை மட்டும் எடுத்துக் கொண்டு இந்த ஓரங்க நாடகம் எழுதப்பட்டுள்ளது. பெரிய புராணத்தில் சுந்தர மூர்த்தி நாயனார் வரலாற்றையே ஒரு கிரிமினல் வழக்கு விசாரனையாக, விரிவாகவும் ஆழமாகவும், புராணப் புளுகுகளையும் தோலுரிக்கும் விதத்தில் எழுதினார் மலேசியப் பெரியார்.

ஆனால் இந்த ஓரங்க நாடகம் மக்கள் மத்தியில் வீதிகளில் நடத்துவதற்காச் சுருக்கமாக எழுதப்பட்டது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக அன்றைய காலச் சூழநிலைகளுக்கு ஏற்ப எழுதப்பட்ட நூலை இன்றைய கிரிமினல் சட்ட பார்வையில் விமர்சிப்பது எப்படி சரியாகும் என "ஆத்திக அன்பர்கள்" பொருமலாம். அப்படிப்பட்ட பழைய குப்பையையே இன்றைய சமுதாயத்தின் ஒழுக்கத்துக்கு வழிகாட்டி என்றும், அதன் நாயகர்களை புனிதர்கள் என்றும், அந்த ராமனே "தேசிய நாயகன்" என்று பார்ப்பன, மேல்சாதிக் கூட்டம் சித்தரிக்கும்போது அந்த ராமனை "தேசிய வில்லன்" என்று நாங்கள் நிரூபிபதில் என்ன தவறு? அதுவும் கற்பனையாக அல்ல; பார்ப்பனர்களால் போற்றிப் புகழ்ப்படும் வால்மீகி ராமயாணத்தின் அடிப்படையில் !

*******************************************************************
கிழே இணைப்பினை க்ளிக் செய்து ஓரங்க நாடகத்தினை படிக்கவும்:-
.
http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/raman1.jpg
.
http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/raman2.jpg
.
http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/raman3.jpg
*******************************************************************

Wednesday, October 10, 2007

ராமன் பாலம் என்ற பெயரில் மதவெறியை பரப்பும் பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராக சென்னை முழுவதும் பொதுக்கூட்டங்கள் !

உயர் நீதி மன்றம் அல்ல வேதாந்தி மன்றம் !இராமன்: தேசிய நாயகனா தேசிய வில்லனா?-புத்தகப் பிரியன்
....
..
..

Tuesday, October 9, 2007

'அனைத்திந்திய அய்யர் தி.மு.க'.!




இறுதித் தீர்ப்பு: குஜராத் படுகொலை:ஆவணப்படம்

நிறையப் படித்துவிட்டோம். குஜராத்தில் இந்து மதவெறி சங்கப் பரிவாரக் குரங்குகள் நடத்திய கொடூரத்தை. எழுத்துக்களாய் நீங்கள் படிக்கும் போது உங்களுக்குள் உருவகப்படுத்திக் கொண்ட காட்சிகளால் அல்லது வார்த்தைகள் தந்த உணர்ச்சிகளால் தாக்குண்டு, வெகுண்டெழுந்த உங்களது கோபம், இப்போது ஒருவேளை மட்டுப்பட்டிருக்கலாம். இந்துமத வெறியர்களின் கொலைவெறித் தாண்டவத்திற்கு உதாரணமாகக் குஜராத்தைச் சொல்லிச் சொல்லி உங்களையறியாமலேயே சலிப்படைந்து சடங்குத்தனமாய் வார்த்தைகள் உங்களிடமிருந்து வந்து கொண்டிருக்கலாம்.
உணர்ச்சி வசப்பட வைக்கும் எழுத்துக்களின் தீவிரம் நம்மை ஆட்கொள்ளும் காலத்தின் அளவு குறித்த வரையறை எதுவுமில்லைதான். ஆனால், அது நிச்சயமாகக் காட்சி ஊடகத்தின் தீவிரம் நம்மை ஆட்கொள்ளும் காலத்தின் அளவை விடக் குறைவுதான்.

சங்கப் பரிவாரக் குரங்கு ஒன்று இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு வெறியோடு அலறும் புகைப்படத்தையும், இசுலாமியர் ஒருவர் இரு கைகளையும் கூப்பி வணங்கி கண்ணில் நீர் மல்க, மரண பீதியுடன் நிற்கும் புகைப்படத்தையும், ஏற்கெனவே பத்திரிக்கைகளில் பார்த்திருந்ததால், குஜராத் படுகொலை குறித்த ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தபோது, ஆரம்பத்தில் ""ஒரே அழுகுரல், எங்கும் புகை, ஆங்காங்கே ஏதேதோ எரிந்து கொண்டிருக்கின்றன, வெட்டிச் சாய்க்கப்பட்ட பிணங்களாக மனிதர்கள், அலறி ஓடுகின்ற மக்கள், துரத்தி வரும் இந்து மதவெறியர்கள்....'' — இப்படித்தான் கற்பனை செய்து கொண்டிருந்தேன். ஆனால் படத்தில் அப்படி ஏதுமில்லை. பிஜேபியின் சித்தாந்தம் பாசிசம்தான் என்பதையும், பிஜேபி, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து மதவெறிக் கும்பலெல்லாம் பாசிசக் கூட்டம்தான் என்பதையும், மிகத் தெளிவாக, ரத்த சாட்சியங்களாக நம்முன் வைக்கிறது இந்த ஆவணப்படம், நாம் இனிமேல் குஜராத்தை என்றென்றைக்கும் மறந்து விட முடியாதபடி. இப்படத்தின் பெயர்: ஃபைனல் சொல்யூஷன் இறுதித் தீர்வு. படத்தை எடுத்தவர் ராகேஷ் சர்மா.

இந்து நஞ்சு

படத்தின் துவக்கத்திலேயே, படுகொலையினால் பாதிக்கப்பட்ட, படுகொலைகளை நேரில் பார்த்த முசுலீம் குடும்பத்துச் சிறுவன் இஜாஜ் உடன் நேர் காணல் வருகிறது. ஒரு நொடியில் நாம் அதை உணர்ந்து விடுவதால் ஓடிச் சென்று, கள்ளங்கபடமில்லாமல் மலங்க மலங்க விழித்தபடி பேசும் அவனைக் கட்டியணைத்து ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் எனச் சொல்ல வேண்டும் என மனம் துடிக்கிறது. படம் இரண்டரை மணி நேரம் ஓடுகிறது.

பக்தியை, கடவுளை, மதத்தை, மதவெறியை, கலவரம் மூலமாக, படுகொலைகள் மூலமாக, பாலியல் வன்முறை மூலமாக, தேர்தல் வெற்றியாக மாற்ற முடியும் என்பதைப் பாசிஸ்டுகள் நிரூபித்துக் காட்டுகிற விதத்தை தெளிவாக நாம் புரிந்து கொள்ளும்போது, படம் முடியப் போகும் நேரத்தில், மீண்டும் அதே சிறுவன் இஜாஜ் உடன் நேர் காணல் வருகிறது. கேள்விகளுக்கு அவன் பதில் சொல்வதைக் கேளுங்கள். இஜாஜ் படித்துக் கொண்டிருப்பது யூ.கே.ஜி.

இஜாஜ்: 1... 2... 3... எனக்கு எல்லா எண்களும் தெரியும். வீடு... பூக்கள் எல்லாம் செய்யத் தெரியும்.

கேள்வி: பெரியவனான பிறகு என்ன ஆவாய்?

இ: சோல்ஜராவேன்! பிறகு அவர்களைச் சுடுவேன்!கே: யாரை?
இ: இந்துக்களை!

கே: ஏன்?

இ: ஏன்னா, அவர்களும் இதைத்தான் செய்தார்கள்!

கே: நீ ஏன் அவர்களை மோசமானவர்களாக நினைக்கிறாய்?

இ: .....கட்டாயம் அவர்களைக் கொல்வேன்!

கே: ஏன்?

இ: நான் அவர்களைச் சேதப்படுத்துவேன்!

கே: எல்லா இந்துக்களும் மோசமானவர்களா?

இ: அவர்கள் கெட்ட வார்த்தைகளைப் பேசினார்கள்!

கே: எந்த மாதிரி?

இ: நான் அந்தக் கெட்ட வார்த்தைகளைப் பேசமாட்டேன்.

கே: நான் ஒரு இந்து. நான் மோசமானவன்னு நெனக்கிறியா?

இ: (யோசித்து) இல்லை.

கே: நீ ஒரு சோல்ஜர். என்னைக் கொல்லணுமல்லவா?

இ: (தலையசைத்து) ஆமா, நா வேற யாரையும் தாக்க மாட்டேன். இந்துக்களை மட்டும்தான் கொல்வேன்.

கே: சரி! நா ஒரு இந்து.

இ: இல்லை. நீங்கள் அவர்களில்லை.

கே: நான் அவர்களைப் போல இல்லையா?

இ: (இல்லையெனும்படித் தலையசைக்கிறான்)

கேள்வி: அப்புறம்?

இஜாஜ்: நீங்கள் ஒரு முசுலீம்.

— குஜராத்தில் நடத்தப்பட்ட படுகொலைகள், இசுலாமிய இளைஞர்கள், பெண்கள், குழந்தைகளிடம் என்ன எதிர்விளைவுகளை உண்டாக்கும்? அவைகள் எதிர்வன்முறைகளாக அமைந்தால், அது இந்துவெறியர்களுக்குத்தான் சாதகமானதாக இருக்கும் என்பதை எப்படி அவர்களிடம் விளக்கலாம் என்பதும்; கொழுந்துவிட்டு எரியும் இவர்களின் கோபத் தீக்கு என்ன சமாதானம் சொல்வது? எம்மாதிரியான தண்டனைகளை இந்து மதவெறிக் கும்பலுக்கு வழங்கினால், இவர்களின் ஈடு செய்ய முடியாத இழப்புகளைச் சமன் செய்ய முடியும் என்கிற கேள்வியும் — படத்தின் இடையிடையே அலைபோல எழும்பியெழும்பித் தணிந்து கொண்டிருந்தபோது இறுதியில் வரும் இஜாஜின் சொற்கள் நம்மை அதிர வைக்கின்றன.

இந்துக்கள் என்றாலே கொடூரமானவர்கள் என்கிற ஆழமான வடுவை இஜாஜ் போன்ற குழந்தைகளின் மனதில் பதித்து விட்டார்கள், ராமபக்தர்களான இந்துப் பாசிஸ்டுகள். தம்மை இந்துக்கள் என்று நம்பிக் கொண்டும், சொல்லிக் கொண்டும் திரிபவர்கள் இஜாஜின் கேள்விக்கு என்ன பதில் சொல்வார்கள்?

அது யாரோ வெறியர்கள் செய்தது என்றால், உங்களின் பெயரைப் பயன்படுத்தித்தான் அவர்கள் இதைச் செய்தார்கள் என்பதால் அவர்களுக்கு நீங்கள் என்ன தண்டனை வழங்கப் போகிறீர்கள்? பிஞ்சு மனதில் நஞ்சைக் கலந்து என்பார்களே, அதை அப்படியே பார்க்க முடிகிறது. அதுவும் இது இந்து நஞ்சு.

பிரச்சாரம் பயம் வெற்றி

பிஜேபியின் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுடன் படம் துவங்குகிறது. முசுலீம்களை இழிவாகத் திட்டும் சிறுவர்கள். இஜாஜின் நேர் காணல். முசுலீம் முகாம்கள் இடிக்கப்பட்ட வீடுகள் — ""போலீசு பஜ்ரங்தளுடன் சேர்ந்து கொண்டனர்'' என ஆவேசப்படும் முசுலீம்கள். போலீசு சுடும் காட்சி கலவரத்தை அடக்க போலீசால் சுடப்பட்டுச் செத்த 40 பேர்களில் 36 பேர் முசுலீம்கள். பாதிக்கப்பட்டவர்களின் நேர் காணல்கள். மோடியின் மதவெறியூட்டும் தேர்தல் பிரச்சாரப் பேச்சு. எல்லா இடங்களிலும் கோத்ரா பற்றியே பேச்சு.

கோத்ரா ரயிலில் இறந்த ஒரு பெண்ணின் இரண்டு புகைப்படப் பிரதிகளை வாங்கிக் கொண்டு போய், ஒன்றை விஎச்பி அலுவலகத்தில் கரசேவத் தியாகிகள் என கட்டம் போட்டும், இன்னொன்றை, வில்லோடும் வெறியோடும் சீறும் "ராம்'போவின் படத்துடன் இணைத்து லேமினேட் செய்தும் கொடுத்துள்ளார்கள். ""எங்கம்மா கரசேவகர் இல்லை. விஎச்பிக்காரர்கள் அப்படி மாற்றி விட்டார்கள்'' என்று அவரது மகள், ஒரு சிறுமி சொல்கிறார்.

தேர்தல் பிரச்சாரம் ராவணனால் வாலில் தீ வைக்கப்பட்ட ஹனுமான் குஜராத்திற்கு வந்திருந்தார் எனப் பிரச்சாரம். நடக்கும் தேர்தல் பிஜேபிக்கும் காங்கிரசிற்குமல்ல; இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் பாகிஸ்தானே நமது எதிரி முஸ்ரஃபே எச்சரிக்கை இந்து வன்முறையாளர்கள் என்று சொல்கிறார்கள், இந்துக்களுக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை, இந்துக்கள் வன்முறையில் இறங்கினால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இல்லாமல் போகும் — பிரச்சாரம், இந்துமதவெறிப் பாசிசத்தின் உச்சகட்டப் பிரச்சாரம்.

இடையில் இந்துக்களுக்கு ஆதரவாகச் சிலர், ஒரு டாக்ஸி டிரைவர், இளம்பெண், கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்... எனப் பேசுகிறார்கள். அவர்கள் பேசுவது பொய்தான் என்பதையும், உண்மையைச் சொல்ல வரும்போது அவர்கள் தடுமாறுவதையும் பேச்சை நிறுத்திக் கொள்வதையும், அவர்கள் மறைக்க நினைக்கும் இந்துத்துவச் சார்பை, டாக்ஸியில் இருக்கும் கண்ணாடிப் பிள்ளையார், பிரார்த்தனையை வலியுறுத்திப் பேசி, ஊதுபத்தி காட்டி, போலீசுக்குக் கும்பிடு போடும் இளம்பெண்... போன்றவைகளைக் கவனமாகக் காட்சிப்படுத்தியிருப்பதன் மூலமும் சிறப்பாக அம்பலப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

ஒரு ஆவணப்பட இயக்குநருக்கு அவசியம் இருக்க வேண்டிய "கருத்துக்களின் சார்பை வெளிக் கொணருதலை' ராகேஷ் சர்மா இதில் முழுமையாகச் செய்திருக்கிறார்.

ஒரு இந்துக் கோயிலில் குண்டைத் தேடியும், தீவிரவாதிகளைச் சுட்டதாகவும் காட்டும் ராணுவ நடவடிக்கைகளைக் காண்பித்து "சான்சூய் டிவி'யின் விளம்பரத்தைக் காண்பித்திருப்பது பொருத்தமான அம்பலப்படுத்துதலோடு கிண்டலாகவும்இருக்கிறது.

படத்திலுள்ள செய்திகள் ஏராளம், ஒரு நூல் எழுதுமளவிற்கு. மந்திரம், வேதம், புனிதம், பக்தி, கடவுள், தியானம், யோகம், ஆன்மீகம், காவி, துறவு, பூஜை, தேசபக்தி, ஸ்ரீராம், காளி, கணபதி... இன்னும் தான் அணிந்திருக்கிற எல்லாவிதமான முகமூடிகளையும் கழற்றி எறிந்துவிட்டு, தான் ஒரு பாசிசம்தான் என முழு அம்மணமாய் குஜராத்தில் நின்றிருக்கிறது இந்துத்துவம். அதற்கு ஆதாரம் இப்படம்.
···
சுகானா, அவரது மகள்கள் ரேஷ்மா, சபானா மூன்று பேரும் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படுகின்றனர். பறிகொடுத்த உறவினரின் நேர் காணலுக்குப் பிறகு, அவர்கள் சீரழிக்கப்பட்ட, கொல்லப்பட்ட இடங்களையும், பார்வையிட்ட பிறகு, அத்தொகுதியின் பிஜேபி எம்.பி. பிரபலமான வக்கீல், கோபால்சிங் சோலங்கியிடம் அவரோடு காரில் பயணித்துக் கொண்டே நேர்காணல் துவங்குகிறது:

கே: நீங்கள் வழக்கறிஞராகச் செயல்பட்டு வருகிறீர்கள்.

எம்.பி: ஆம்! நான் முதலில் வக்கீல், அரசியல்வாதி பிறகுதான். அரசியல் என்னோடு கூடவே ஓடிவந்து கொண்டிருக்கிறது.

(கார் வக்கீல் அலுவலகத்திற்கு வந்துவிட்டது. ஏராளமான புகார்தாரர்கள். போலீசும் அமர்ந்திருக்கிறது. கேள்விகளுக்குச் சிலர் பதில் சொல்கிறார்கள்.)

பதில்: ஆம்! அவர் எங்கள் வக்கீல்!

கே: எப்படிப்பட்ட வக்கீல்?

ப: மிகத் திறமைசாலி அவருக்கு எல்லாச் சட்டமும் தெரியும்.

கே: என்ன வழக்கில் நீங்களெல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறீர்கள்?

ப: செக்ஷன் 302, 307 அப்புறம் 376.

கே: எதுக்காக?

ப: 376 ரேப்... 302 கொலை

இசுலாமியப் பெண்கள் நரவேட்டையாடப்பட்டிருக்கிறார்கள். வேட்டையாடிய இந்து ஓநாய்களின் வக்கீல் பிஜேபியின் பாராளுமன்ற உறுப்பினர். வக்கீல் த எம்பி த கலவரம் த பாலியல் வன்முறை த படுகொலை த வக்கீலிடம் குற்றவாளிகள் கூட்டம் த சிறந்த வக்கீல் த பாலியல் வன்முறை, படுகொலை வழக்குகள் த வெற்றிகரமான வக்கீல் தொழில் த மிகத் துல்லியமாக இந்த வலைப்பின்னலை அம்பலப்படுத்தியிருக்கும் இயக்குநர் பாராட்டப்பட வேண்டியவர்.

ஆவணப்படம் எனும் வடிவத்தில் இச்செய்தியை ராகேஷ் சர்மா வெளிக் கொணரக் கையாண்டிருக்கும் பொருத்தமான தொகுப்பும், உத்தியும், ஆவணப்பட உலகினர் கவனம் கொள்ள வேண்டிய ஒன்று. இந்தப் பொருத்தமும், தொகுப்பும் ராகேஷ் சர்மாவிற்குக் கனகச்சிதமாய் அமைந்ததற்கு, பிரச்சினையின் உண்மையை அவர் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பதுதான் அடிப்படை.

குற்றங்களைச் செய்வதற்கான குற்றவாளிகளை உருவாக்கிப் பணமும் சம்பாதிப்பதற்கு, பிஜேபிக்கு பயன்பட்டிருக்கிறது வக்கீல் தொழில். மைக்கேல் மூரின் ""பாரன்ஹீட் 9/11''ஐ நினைவூட்டுகிறது இக்காட்சி. பணம் சம்பாதிக்க புஷ் குடும்பம் துவக்கிய ஈராக் போர். அங்கே அமெரிக்க "அப்பன் புஷ்'; இங்கே பிஜேபி எம்.பி சோலங்கி.

இவ்வளவு குரூரமான கலவரத்திற்குப் பிறகும் பிஜேபி தேர்தலில் எவ்வாறு வெற்றியடைந்தது என்பதைப் படம் தெளிவாக விளக்குகிறது.

சங்பரிவாரக் குரங்குகளால் தாக்கப்பட்ட முசுலீம் பகுதியிலுள்ள ஒரு இந்துவின் வீடு. வீட்டைச் சீர் செய்து கொடுத்திருக்கிறது இசுலாமியக் கமிட்டி — இவற்றையெல்லாம் சொல்லும் அந்தப் பெண்ணிடம், ""யாருக்கு ஓட்டு போடுவீர்கள்?'' எனக் கேட்கப்படும் கேள்விக்கு அவர் சொல்லும் பதில் ""பிஜேபிக்கு.'' காரணம்? பயம்.

""ஏன் மோடிக்கு ஓட்டுப் போடுவேன் என்கிறீர்கள்?'' இதற்கு ஒரு இளைஞனின் பதில், ""அப்பத்தாங்க டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.'' டென்ஷன் என்பது பயம்தான்.

பயத்தை விதைத்து தேர்தல் வெற்றியை அவர்கள் அறுவடை செய்திருக்கிறார்கள். முசுலீம்களிடம் மட்டுமல்ல இந்துக்களிடமும் அந்தப் பயம் மிக அதிகமாகவே இருந்திருக்கிறது. இந்தப் பயம்தான் பாசிஸ்டுகளுக்குத் தேர்தலில் வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.
···
நாமும் இங்கிருந்தே கற்றுக் கொள்வோம். தேர்தலில் தோல்வியடைய வைப்பதன் மூலம் பாசிஸ்டுகளுக்குப் பாடம் கற்பிக்க முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிற நாமும் அதே "பயம்' எனும் ஆயுதத்தையே எடுத்துக் கொள்வோம். பயம் என்பதை ""பயப்பட வைத்தல்'' என்று மாற்றிக் கொள்வோம். தேர்தலில் அல்ல, தெருவில் திருப்பியடிப்போம். மதவெறிக் குரங்குகளைக் கட்டிவைத்து வாலில் தீ வைப்போம். பயம் அறுப்போம். துணிச்சல். துணிச்சல் ஒன்றுதான் வழி. மதவெறியர்களைப் பயப்பட வைக்கும் நடவடிக்கையில் இறங்கும் துணிச்சல் ஒன்றுதான் பாசிஸ்டுகளை ஒழித்துக் கட்டப் பயன்படும் முதல் ஆயுதம் என்பதை இறுதித் தீர்வு (ஊடிணச்டூ குணிடூதtடிணிண) எனும் இந்த ஆவணப்படம் முகத்தில் அறைந்து சொல்கிறது.

ஹிட்லர் தனது இறுதித் தாக்குதலுக்கு வைத்துக் கொண்ட பெயர் இறுதித் தீர்வு. படத்தின் தலைப்பாக இருக்கும் இந்த வார்த்தைகளுக்கு நாம் கொள்ளும் அர்த்தமும் இதுதான்.

குஜராத்திற்குப்பின் தமிழகம்தான் என்கிற கனவைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்திருக்கிறது காவிக் கும்பல். தேர்தலும் சட்டமன்றமும் பாராளுமன்றமும் பாசிஸ்டுகளை ஒழிக்காது. அவை பாதுகாக்கும், வளர்க்கும். குஜராத்தைவிட வேறு எடுத்துக்காட்டு இனித் தேவையே இல்லை.

இவர்களின் பிரச்சாரத்தையும், நடவடிக்கைகளையும் எதிர்க்கும் துணிச்சலும், நேருக்கு நேர் சந்திக்கும், மோதும் துணிச்சலும்தான், பாசிஸ்டுகளை ஒழிக்கும், அழிக்கும். அதற்குத் தமிழகம் ஓர் எடுத்துக்காட்டு என்பதை புரட்சிகர அமைப்புகள் நிரூபித்தே தீரும்.

· குருசாமி மயில்வாகனன்

இந்து மதவெறியின் பரிணாமம்: அன்று சோமபானம்! இன்று கோகெய்ன்!

போதை மருந்தை வாங்கி உட்கொண்ட குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட ராகுல் மகாஜனின் கதையை, முதலாளித்துவ ஊடகங்கள் அனைத்தும் ""செண்டிமென்ட்'' கலந்து கொடுத்தன. அந்த 31 வயது இளைஞனின் தந்தை பிரமோத் மகாஜன், தனது சொந்த தம்பியாலேயே சுடப்பட்டு இறந்து போன சோகம் மறைவதற்குள்ளாகவே, மகாஜன் குடும்பத்தைத் தாக்கிய இரண்டாவது பேரிடியாக, இந்த விவகாரத்தை முதலாளித்துவ பத்திரிகைகளும், ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகளும் சித்தரித்து வருகின்றனர்.

ராகுல் மகாஜனின் குடும்பம் வருத்தம் அடைந்திருக்கும். ஆனால், எதற்காக? ராகுல் மகாஜன் போதை மருந்து உட்கொள்ளும் பழக்கமுடையவர் என்பது மகாஜன் குடும்பத்திற்கு மட்டுமல்ல, வாஜ்பாய் உள்ளிட்டு, பிரமோத் மகாஜனோடு நெருக்கமாக இருந்த பா.ஜ.க. தலைவர்கள் அனைவருக்கும் தெரியும். இந்த உல்லாச விவகாரம் அம்பலப்பட்டு கைது வரை போய், ராகுல் மகாஜனின் எதிர்கால அரசியல் வாழ்வு பின்னடைவுக்கு உள்ளாகிவிட்டதே என்பதுதான் மகாஜன் குடும்பத்தின் வருத்தமாக இருக்கும். ஏனென்றால், பிரமோத் மகாஜன் இறந்து போனதையடுத்து அவரது வாரிசான ராகுல் மகாஜனை பா.ஜ.க.வில் ஏதாவதொரு பதவியில் திணித்து விடுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன. பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ்.இன் உயர்மட்டத் தலைவர்களும இதற்குச் சம்மதித்திருந்தனர்.

""ராம பக்தர்களின் கட்சியாக அறியப்பட்ட பா.ஜ.க., இப்பொழுது அனைத்துத் தரப்பினரின் கட்சியாக மாறிவிட்டதற்கு இந்த நள்ளிரவு போதையாட்டமே சாட்சி''; ""இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கத்திற்குப் பதிலாக, இந்தியா உறிஞ்சுகிறது என்ற முழக்கத்தை இனி பா.ஜ.க. முன் வைக்கலாம்'' என சொந்தக் கட்சிக்காரர்களாலேயே கிண்டல் செய்யப்படும் அளவிற்கு, இந்த விவகாரம் பா.ஜ.க.விற்குப் பாதகமாக உள்ளது. அதனால்தான், இந்தப் போதை மருந்து விவகாரத்தை முளையிலேயே மூடி மறைத்துவிடவும்; திசை திருப்பிவிடவும் பா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக முயன்றனர்.

ராகுல் மகாஜனும், விவேக் மொய்த்ராவும் தில்லியில் ஜூன் 1 அன்று இரவு தங்கியிருந்த அரசாங்க வீட்டுக்கு அருகிலேயே மைய அரசுக்குச் சொந்தமான அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை இருந்தும், அவர்களை அங்கு கொண்டு சேர்க்காமல், தொலைவில் உள்ள தனியார் அப்பல்லோ மருத்துவமனைக்கு தூக்கிப் போனதற்குக் காரணமே, இந்த விவகாரத்தை அதன் சுவடே தெரியாமல் மூடி மறைத்துவிட வேண்டும் என்பதுதான். பிரமோத் மகாஜனிடம் முன்பு செயலாளராக வேலை பார்த்த ஹரீஷ் சர்மாதான் இந்த யோசனையைக் கூறியதோடு, அந்த வீட்டில் போதை மருந்து உட்கொண்டதற்கான எல்லா ஆதாரங்களையும் அழித்துவிடும்படி வேலைக்காரர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனர் பிரதாப் சி.ரெட்டி, அவரது உதவியாளர், மற்றும் ஹரீஷ் சர்மா இம்மூவருக்கும் இடையே அந்த நள்ளிரவு நேரத்திலும் இது குறித்து செல்ஃபோன் உரையாடல் நடந்ததாக போலீசார் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.

எதிர்பாராதவிதமாக விவேக் மொய்த்ரா இறந்து போனதால், இந்தப் போதை விவகாரம் அம்பலத்திற்கு வந்துவிட்டது. ஆனாலும், அப்பல்லோ நிர்வாகம், அவர்கள் இருவருக்கும் விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற வதந்தியைக் கிளப்பிவிட்டது. பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், ராகுல் மகாஜனின் மாமாவுமான கோபிநாத் முண்டே, இந்த வதந்தியைப் பத்திரிகையாளர்களிடம் ஊதிப் பெருக்கினார்.

""நாங்கள் 14 விதமான ரத்தப் பரிசோதனைகளைச் செய்துவிட்டோம்; ராகுல் மகாஜன் போதை மருந்து உட்கொண்டதற்கான அறிகுறி எதுவும் இல்லை'' என்ற புளுகு மூட்டையை அப்பல்லோ நிர்வாகம் அசராமல் அவிழ்த்துவிட்டது. ஆனால், வேறொரு ஆய்வுக் கூடத்தில் ராகுல் மகாஜன் போதை மருந்து உட்கொண்டது நிரூபணமான பிறகு, ""நாங்கள் செய்தது வேறு விதமான ஆய்வு; அவர்கள் செய்தது வேறுவிதமான ஆய்வு'' எனப் பூசி மெழுகியது.

""ராகுல் மகாஜன் அப்பல்லோவிற்குக் கொண்டு வரப்பட்டவுடனேயே, அவரது சிறுநீரை எடுத்துப் பரிசோதிக்காமல், திட்டமிட்டே கால தாமதம் செய்துள்ளனர். பரிசோதனைக்கு முன்பாகவே, நரம்பு மூலம் திரவ மருந்துகளை அவரது உடம்புக்குள் செலுத்தி, சிறுநீரை வெளியேற்றியதன் மூலம், ராகுல் மகாஜன் போதை மருந்து உட்கொண்டதற்கான ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளனர். ராகுல் மகாஜனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டிய அவசியமே இல்லாதபொழுது, அவரை இரண்டு நாட்கள் அந்தப் பிரிவில் தொடர்ந்து வைத்திருந்து, போலீசு விசாரணையைத் தாமதப்படுத்தியுள்ளனர்'' என அப்பல்லோ நிர்வாகம் மீது போலீசார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சில பா.ஜ.க. தலைவர்கள் தங்கள் பங்கிற்கு, ""இதற்குப் பின்னால் திட்டமிட்ட சதி இருப்பதாகவும்; ராகுல் மகாஜனைக் கொலை செய்யும் நோக்கத்தோடு யாரோ, எதையோ கலந்து கொடுத்துவிட்டதாகவும்'' பத்திரிகைகளுக்கு பேட்டியளித்து, பிரச்சினையைத் திசை திருப்ப முயன்றனர்.

இறுதியாக, ராகுல் மகாஜன் போதை மருந்து உட்கொண்டது மருத்துவ ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டவுடன், எல்லாவற்றுக்கும் காரணம் மொய்த்ரா தான் பிரமோத் மகாஜனிடம் அந்தரங்கச் செயலாளராக இருந்த விவேக் மொய்த்ராதான் சாஹில் ஜாரூவைத் தொலைபேசி மூலம் அழைத்தார்; மொய்த்ராதான் சரக்கு வாங்கிவரச் சொல்லி ஜாரூவிடம் பணம் கொடுத்தார். போலீசு கைப்பற்றியிருக்கும் வெள்ளை பவுடர் கூட மொய்த்ராவிடமிருந்துதான் எடுக்கப்பட்டதுதான் எனப் பழி அனைத்தையும் செத்துப் போனவன் மீது போட்டுவிட்டு, ராகுலை, வாயில் விரலை வைத்தால் கூடக் கடிக்கத் தெரியாத குழந்தை போலக் காட்டுகிறார்கள்.

இந்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் கூட, சட்டத்திலுள்ள சில தொழில்நுட்பக் காரணிகளை ராகுல் மகாஜனின் சிறுநீர் பரிசோதனையில் போதை மருந்தின் அளவு குறைவாக இருப்பது; அவரிடமிருந்து போதை மருந்து எதனையும் கைப்பற்ற முடியாமல் போனது; முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் போலீசார் செய்துள்ள குளறுபடிகள் வைத்துக் கொண்டு, ராகுல் மகாஜனை எதிர்பாராத விதத்தில் சிக்கிக் கொண்ட பலிகடாவைப் போலச் சித்தரித்து, ஒன்பதே நாட்களில் பிணையில் விடுதலை செய்துவிட்டது.

ஆனால், ராகுல் மகாஜனின் கடந்த கால வாழ்க்கையைப் பார்த்தால், அவர் கோயில் காளையைப் போலத்தான் ஊர் மேய்ந்து கொண்டிருந்தார். வசதி, பணம், செல்வாக்கு இருந்த அளவிற்கு, அவருக்குப் படிப்பு ஏறியதாகத் தெரியவில்லை. விமான ஓட்டுநர் பயிற்சி பெறுவதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்; அதிலும் அவர் தேறவில்லை. எனினும், பிரமோத் மகாஜன், தனது மகனுக்கு, தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, ""ஜெட் ஏர்வேஸ்'' நிறுவனத்தில் விமானி வேலை வாங்கிக் கொடுத்தார். அந்த வேலையிலும் அவர் நிலைக்கவில்லை. கணினி மென்பொருள் நிறுவனம் நடத்துவதாக பேர் பண்ணிக் கொண்டிருந்த ராகுல் மகாஜன், தனது தந்தை இறந்து போனவுடன், வாரிசு உரிமையைப் பயன்படுத்தி அரசியலில் குதிக்கத் தயாரானார்.

போதை மருந்து உட்கொள்ளும் பழக்கத்தில் இருந்து விடுபட, அவர் ஏற்கெனவே ஒருமுறை இலண்டனில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மும்பய் நகரில், பெரிய மனிதர்கள் நடத்தும் இரவு விருந்துகளில் கலந்து கொள்ளும் பழக்கமுடைய ராகுல் மகாஜன், பா.ஜ.க.வின் ""இந்துப் பண்பாட்டில்'' மூழ்கிப் போனதில்லை. சம்பவம் நடந்த அன்று, போதை மருந்தை மூக்கு வழியாக உறிஞ்சியவுடனேயே, சரக்கில் கலப்படம் இருப்பதாகச் சொன்னவரே ராகுல்தான் எனச் சாட்சியங்கள் கூறுகின்றன.
அன்று இரவு போதை ஏற்றிக் கொள்ள வேண்டும் எனப் பைத்தியம் போல அலைந்த ராகுல் மொய்த்ரா ஜோடி, அதற்காக பதினைந்தாயிரம் ரூபாயைத் தாராளமாகச் செலவழித்திருக்கிறது. ஒரு ஐநூறு ரூபாயைச் சுருட்டிக் கொண்டு, அதைப் பயன்படுத்திதான் ராகுல் போதை மருந்தை உறிஞ்சியிருக்கிறார். இப்படிப்பட்ட உல்லாச ஊதாரிப் பேர்வழி, மேடையேறி, மைக்கைப் பிடித்துக் கொண்டு, ஏழை மக்களைப் பற்றியும், நாட்டு நலனைப் பற்றியும் பேசுவது கனவில் வருவதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியுமா?

போதை தலைக்கேறிப் போய் செத்துப்போன விவேக் மொய்த்ரா 1980களில் இருந்தே பா.ஜ.க.வின் இளைஞர் அணியில் உறுப்பினராக இருந்து வந்துள்ளார். பா.ஜ.க.வின் தலைவர்கள், ""மொய்த்ரா உற்சாகமாகச் செயல்பட்ட கட்சி ஊழியர்'' எனப் புகழஞ்சலி செலுத்துகின்றனர். அவர் அப்படி உற்சாகமாகச் செய்த கட்சி வேலை என்ன தெரியுமா? கட்சிக்காக தரகு முதலாளிகளிடம் வாங்கும் நன்கொடையைப் பதுக்கி வைப்பதில், பிரமோத் மகாஜனுக்கு உதவியாக இருந்திருக்கிறார். பிரமோத் மகாஜனின் இரகசிய நடவடிக்கைகள் அனைத்திற்கும் பக்கபலமாக இருந்து வந்துள்ளார்.

பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.இன் அடிமட்டத் தொண்டர்கள் இந்து மதவெறி போதை தலைக்கேறிப் போய், சூலத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஊரைக் கொளுத்தும்பொழுது, மொய்த்ரா ஒரு கையில் பணப் பெட்டியோடும், இன்னொரு கையில் ஒயின் பாட்டிலோடும் உல்லாசமாக இருந்திருக்கிறார். இந்தப் பண்பாடு இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானதல்ல. இந்து மதவெறி அரசியலின் இன்னொரு பக்கம்தான் ராகுல் மொய்த்ராவின் அந்தரங்க வாழ்க்கை. கஞ்சா போதையும் சோமபானம் சுராபானம் அடித்துவிட்டு சுருண்டு போவதும் ஆரிய இந்துப் பண்பாடு தானே!

சங்கப் பரிவார அமைப்புகளில், ஊழல் உல்லாசம் ஊதாரித்தனத்தில் மூழ்கித் திளைக்கும் தலைவர்கள் இருப்பது, தெகல்கா ஊழல், பெட்ரோல் பங்க் ஒதுக்கீடு ஊழல், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க இலஞ்சம் வாங்கியது, தகாத பாலியல் உறவில் பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர் சஞ்சய் ஜோஷி மாட்டிக் கொண்டது ஆகியவற்றின் மூலம் ஏற்கெனவே அம்பலமாகியிருக்கிறது. அதனால்தான், வாஜ்பாயி போன்ற பெருந்தலைவர்கள்கூட போதை பழக்கத்துக்கு அடிமையான ராகுல் மகாஜனைக் கைகழுவிவிடாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ராகுல் மகாஜனைப் போல உல்லாசம் ஊதாரித்தனத்தில் திளைக்கும் இளம் தலைமுறையை அனைத்து ஓட்டுக்கட்சிகளிலும் காண முடியும். அந்நிய நாட்டுப் பெண் ஒருவருடன் இலண்டனில் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த ராகுல் காந்தி, திடீரென அரசியலுக்கு இழுத்து வரப்பட்டு, எம்.பி. ஆக்கப்பட்டார்.

இறந்து போன பிஜு பட் நாயக்கின் மகன் என்ற ஒரே தகுதியின் காரணமாக ஒரிசாவின் முதல் அமைச்சர் ஆக்கப்பட்ட நவீன் பட்நாயக், மாலை நேரமானால், தனது நண்பர்களோடு சேர்ந்து கொண்டு குடியும் கும்மாளமுமாகப் பொழுதை ஓட்டுவார்.

தில்லியில் உள்ள ஒரு மதுபான விடுதியில், நள்ளிரவு நேரத்தில் தனக்கு ""தண்ணி'' ஊத்தி தர மறுத்ததற்காக ஜெஸிகா லால் என்ற பணிப்பெண்ணைப் பலர் முன்னிலையில் சுட்டுக் கொன்றான், சண்டீகர் நகர காங்கிரசு தலைவராக இருந்த வினோத் சர்மாவின் மகன் மனுசர்மா.

முலயம் சிங் யாதவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் மீது, ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனால்தான் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் ராகுல் மகாஜன் விவகாரத்தை ""செண்டிமெண்ட்'' கலந்து முடித்து விடுவதில் ஒன்றாக நிற்கின்றன.

பரூக் அப்துல்லாவின் மகன் ஓமர் அப்துல்லா (தேசிய மாநாட்டுக் கட்சி); ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட் (காங்கிரசு); விஜயராஜே சிந்தியாவின் மகன் துஷ்யந்த் (பா.ஜ.க.); முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் (தி.மு.க.) என ஒரு பெரிய இளைய தலைமுறை பட்டாளம், ஓட்டுக்கட்சிகளிலும் அரசாங்கத்திலும் அதிகாரமிக்க பதவிகளில் திணிக்கப்பட்டுள்ளனர்.

திராவிடம், தேசியம், பொதுவுடைமை, ஜனநாயகம் என ஏதாவதொரு கொள்கை, தத்துவம், கோட்பாடு அடிப்படையில் தமது அரசியல்வாழ்வைத் தொடங்கிய பழைய தலைமுறை, சுயநலம், பிழைப்புவாதம், இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள், பொறுக்கி அரசியல் என்ற சீரழிந்த பண்புகளோடுதான் ஓய்வு பெறுகிறது. தரகு முதலாளிகளான ராகுல் பஜாஜ், அனில் அம்பானி, விஜய் மல்லையா மற்றும் 220 கோடி ரூபாய் குடும்பச் சொத்து கொண்ட அமிதாப்பின் மனைவி ஜெயாபச்சன் போன்ற கோடீசுவரர்களைக் கூட எம்.பி.யாகத் தேர்ந்தெடுத்து அனுப்பும் அளவிற்கு ஓட்டுக்கட்சிகள் கொள்கை, கோட்பாடு எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டன.

புதிய தலைமுறை அரசியல்வாதிகளின் கூட்டம் இச்சீரழிவுகளுக்கு எதிரான போராட்டத்தின் விளைவாக தலை எடுக்கவில்லை. மாறாக, இச்சீரழிவுகளின் பக்க விளைவாக அரசியலில் நுழைந்திருக்கிறார்கள் அல்லது திணிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், இவர்கள் எந்தவித சமூக விழுமியங்கள், மதிப்பீடுகள், ஒழுங்குமுறைகளையும் அடிப்படையாக வைத்து வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. அதனால், இப்புதிய இளந்தலைமுறை அரசியல் தலைவர்கள் ஏகாதிபத்திய ஒட்டுண்ணிச் சுரண்டலையும், அடக்குமுறையையும் மட்டுமல்ல் ""டிஸ்கொத்தே'' பண்பாட்டையும் நியாயப்படுத்துவார்கள்.

மு செல்வம்

Monday, October 8, 2007

Tuesday, October 2, 2007

பொதுக் கூட்டம் & புரட்சிகர கலைநிகழ்ச்சி ! பெரியாரின் மண்ணில் பார்ப்பன மதவெறி நச்சுப்பாம்புகள் தலையெடுக்க அனுமதியோம் !!


Related:
..

"புதிய ஜனநாயகம்" அக்டோபர் 2007 இதழ்

துரோகி காந்தியினை அம்பலப்படுத்தும் பதிவுகள் !!

காந்தி நல்லவரா? கெட்டவரா?

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு !

அஹிம்ஸை - ஒரு அபாயகரமான அதி பயங்கர வன்முறையே!

காந்தியசத்தைவிட கொடியதொரு இசம் எது? - மா. சிவகுமார்

ஒருத்தனுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ 35,000 சம்பளம் ! 83 கோடி பேருக்கு மாதம் ரூ 20 சம்பளம் !!

இந்திய ஓட்டுப் பொறுக்கிகளின் சமீபத்திய சாதனை !!






Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது