Sunday, September 30, 2007

பொதுக் கூட்டம் & புரட்சிகர கலைநிகழ்ச்சி


மத்திய அரசே!


இராமன் பாலம் என்ற புனைக்கதையை வைத்து இந்து வெறியைத் தூண்டும் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ் கும்பலை தடைசெய்!

உழைக்கும் மக்களே !
பெரியாரின் மண்ணில் பார்ப்பன மதவெறி நச்சுப்பாம்புகள் தலையெடுக்க அனுமதியோம்!!
3.10.2007


மாலை 5.00 மணி


எம்.ஜி.ஆர்.நகர் மார்க்கெட்


சென்னைஅனைவரும் வருக!
நான் இந்திய நாட்டுக்கான நிதி அமைச்சர் இல்லை, பன்னாட்டு கம்பெனிக்கான அடியாள் தான் ! ப.சிதம்பரத்தின் ஒப்புதல் வாக்குமூலம் !!


Related:

வைக்கம் போராட்டம் : பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்தச் சாட்சிகள் !

Related:

ராமன் பாலம் - தமிழகத்தை குஜராத்தாக மாற்ற முயலும் இந்துமதவெறியர்கள்


இந்து மதவெறியை தூண்டும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கும்பலினை அம்பலப்படுத்தும் நூல்கள் !

ஹவாலா கிரிமினல் வேதாந்தி மதவெறியை டாலராக மாற்றும் காட்சி !


http://www.ibnlive.com/videos/39841/05_2007/pilot_baba/godman-turning-black-money-to-white.html

http://www.ibnlive.com/videos/39851/southern-seer-turns-dirty-money-holy.htmlRelated:

ராமன் பாலம் - தமிழகத்தை குஜராத்தாக மாற்ற முயலும் இந்துமதவெறியர்கள்

இந்து மதவெறியை தூண்டும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கும்பலினை அம்பலப்படுத்தும் நூல்கள் !

போராடிய கண்பார்வையற்றவர்களை சட்டையைப் பிடித்து தூக்கிச் செல்லுகின்றனர் !! இந்த அமைப்பு மக்களுக்கானது அல்ல என்று மீண்டும் மீண்டும் நிருபிக்கின்றனர் !!

Related:

பெரியாரின் மண்ணில் பார்ப்பன மதவெறி நச்சுப்பாம்புகள் தலையெடுக்க அனுமதியோம்!!

பொதுக் கூட்டம் & புரட்சிகர கலைநிகழ்ச்சி
3.10.2007

மாலை 5.00 மணி

எம்.ஜி.ஆர்.நகர் மார்க்கெட்

சென்னை


அனைவரும் வருக!

மத்திய அரசே!
இராமன் பாலம் என்ற புனைக்கதையை வைத்து இந்து வெறியைத் தூண்டும் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ் கும்பலை தடைசெய்!
Friday, September 28, 2007

நான் நாத்திகன் - ஏன்? மாவீரன் பகத்சிங்

தோழர்களே! இது எனது அகங்காரமல்ல. எனது ஆராய்ச்சியின் தோரணையே என்னை நாத்திகனாக்கிற்று. கடவுள் நம்பிக்கையும், தினசரிப் பிரார்த்தனைகளும், சுயநலம் நிறைந்த மனிதனை அகவுரவப்படுத்துகின்ற செய்கைகளென்று நான் கருதுகிறேன். ஆகவே, இப்படிப்பட்ட அல்லது எனது நிலைமையை இன்னும் மோசமாக்குமா வென்பது எனக்கே விளங்கவில்லை.நான் கஷ்டநிஷ்டூரங்களைத் தைரியமாக எதிர்த்து நின்ற நாத்திகர்கள் பலரைப் பற்றிப் படித்திருக்கிறேன்.. ஆதலால் எனது முடிவுரையில், தூக்கு மேடையிற்கூட ஆண்மையுள்ள மனிதனைப் போல தலைநிமிர்ந்து நிற்கவே முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
.
தமிழில் தோழர் ப.ஜீவானந்தம்
.
விலை ரு 10
.
கிடைக்குமிடம்.
கீழைக்காற்று
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 2.
தொலைபேசி எண் : 044-28412367

மாவீரன் பகத் சிங் - தமிழ் மக்கள் இசை விழாவில் இருந்து !

நன்றி இவான்

Related:
விடுதலைப் போரின் கலங்கரை விளக்கம் பகத்சிங்

விடுதலைப் போரின் கலங்கரை விளக்கம் பகத்சிங்
18,19ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்புநிசாம், மருதுதொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் இந்த எல்லைக்கோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது. எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாக அவற்றை நிறுவனமயமாக்கு வதன் மூலமாகவே நமத்துப்போகச் செய்துவிடமுடியும் என்ற உத்தியை 1857 எழுச்சிக்குப் பின் அமலாக்கினார்கள் வெள்ளையர்கள். அதாவது துரோகிகளையே தியாகிகளாக சித்தரித்துக் காட்டுவதன் மூலம் அடிமைத்தனத்துக்குள்ளேயே "விடுதலையைக்' காணும்படி மக்களைப் பயிற்றுவிக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.


உண்மையான ஆட்சியதிகாரத்தைத் தம் கையில் வைத்துக் கொண்டு மன்னராட்சிக்குரிய அடையாளங்களை மட்டும் நீடிக்க அனுமதித்ததன் மூலம் துரோகிகளைத் திருப்திப்படுத்திய பிரிட்டிஷார், அதே உத்தியை மக்களுக்கும் விரிவுபடுத்தினார்கள். இதன் விளைவாக 18,19ஆம் நூற்றாண்டுகளில் துரோகிகள் எனக் கருதப்பட்டோரின் வழித்தோன்றல்கள், 20ஆம் நூற்றாண்டில் சமரசவாதிகளாக அவதரித்தார்கள்.


இந்தியர்களுடைய மனக்குறைகளை மேன்மை தங்கிய பிரிட்டிஷ் அரியணைக்கு மனுச் செய்து தெரிவிக்கும் நோக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் 1885இல் வெள்ளையர்களாலேயே உருவாக்கப்பட்டது. பாரம்பரியமிக்க பிரிட்டிஷ் அடிவருடிகளான நிலப்பிரபுக்களின் நலனை மட்டுமின்றி, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து ஆதாயமடைய விரும்பிய அனைத்திந்திய வர்க்கமான தரகு முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இத்தகையதொரு அரசியல் அமைப்பு தேவைப்பட்டது.


பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் இந்தத் தரகுக் கும்பலின் முதலாளித்துவ வர்க்கப் பின்புலத்தையும், இவர்களுக்கிடையிலான உறவையும் புரிந்து கொள்ளாத எவரும் இந்திய விடுதலையின் மீது காங்கிரசும் காந்தியும் நிலைநாட்டி இருந்த ஏகபோகத்தை உடைக்க முடியாது என்ற நிலையும் தோன்றியது.


இந்திய விடுதலை இயக்கத்தினுள் காந்தி நுழைந்த பிறகு, அவருடைய அகிம்சை வழியிலான போராட்ட முறை மூலம்தான், இந்திய விடுதலை இயக்கம் உண்மையான மக்கள் திரள் இயக்கமாக மாறியது என்ற மிகப்பெரிய வரலாற்றுப் புரட்டு திட்டமிட்டே பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது. இது, இரண்டு நூற்றாண்டுகளாக ஆயுதம் தாங்கிப் போராடிய லட்சோப லட்சம் மக்களின் போராட்டங்களை இருட்டடிப்பு செய்யும் அயோக்கியத்தனம்.


""வன்முறைப்பாதையா, அகிம்சைப் பாதையா'' எனப் போராட்ட வழி முறைகளில்தான் விடுதலை இயக்கத்தில் வேறுபாடு நிலவியதைப் போலவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பொது நோக்கில் அனைவருக்கிடையிலும் ஒற்றுமை நிலவியதைப் போலவும் ஒரு பொய்ச்சித்திரத்தைப் பதிய வைத்திருக்கிறது நமது அதிகாரபூர்வ வரலாறு. உண்மையில், ஆங்கில ஏகாதிபத்தியத்தோடு சமரசம் செய்து கொண்ட காங்கிரசு, முசுலீம் லீக் ஆகிய தரகு முதலாளித்துவ அரசியல் சக்திகள் எவ்விதச் சமரசத்துக்கும் இடமின்றி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை சமருக்கிழுத்த தேசியவாத சக்திகள் என இரு போக்குகள்தான் 20ஆம் நூற்றாண்டின் விடுதலை இயக்க வரலாற்றில் களத்திலிருந்தன.


1921, 1930, 1942 என ஏறத்தாழ பத்தாண்டு இடைவெளிகளில் ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், "வெள்ளையனே வெளியேறு' இயக்கம் என மூன்று போராட்ட இயக்கங்கள் காந்தியின் சத்தியாக்கிரக முறையில் துவக்கி நடத்தப்பட்டன. போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் மக்கள் இயல்பாக போலீசின் தாக்குதல்களுக்கு எதிர்த் தாக்குதல் கொடுக்கத் துவங்கினால், அந்நிய ஆட்சியை தம் சொந்த நடவடிக்கையின் மூலம் தூக்கியெறிய முயன்றால், மறுகணமே காந்தி போராட்டத்தை நிறுத்துவார். காந்திக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுவதற்கு முன், அரசு அவரைக் கைது செய்து விடும். பிறகு, "சென்டிமென்ட் அலை' அடிக்கத் துவங்கி, இறுதியில் இந்திய விடுதலையை மறந்து காந்தி விடுதலையாவதே தேசத்தின் லட்சியமாகி விடும். இதுதான் தியாக வேடமணிந்த துரோகத்தின் சுருக்கமான வரலாறு.


இந்தத் துரோகத்துக்கு எதிராக, சமரசமற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பையும், உண்மையான நாட்டு விடுதலையையும் முன்வைத்துப் போராடிய தியாகம், பகத்சிங் என்ற இளைஞனின் வடிவில் விடுதலைப் போராட்ட அரங்கினுள் நுழைகிறது.


""...நாம் புகாமல் இருந்திருந்தால் புரட்சி நடவடிக்கை எதுவுமே ஆரம்பத்திராது என்று நீ கூறுகிறாயா? அப்படியென்றால், நீ நினைப்பது தவறு; சுற்றுச் சூழ்நிலையை மாற்றுவதில் பெருமளவிற்கு நாம் துணை புரிந்துள்ளோம் என்பது உண்மையானாலும் கூட நாம் நமது காலத்தினுடைய தேவையின் விளைவுதான்.'' — சிறையில் தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்ட நிலையில், சுகதேவ் எழுதிய ஒரு கடிதத்திற்கு, பகத்சிங் அளித்த பதில் இது. இத்தகையதொரு பதிலை 18,19ஆம் நூற்றாண்டுகளின் வீரர்கள் கூறியிருக்க முடியாது. முந்தைய நூற்றாண்டுகளில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிய திப்பு முதல் மருது வரையிலான வீரர்களோ, பல்லாயிரக் கணக்கில் போராடி உயிர் நீத்த விவசாயிகளோ, சிப்பாய்களோ, தமது வரலாற்றுப் பாத்திரத்தை உணர்ந்திருக்கவில்லை. அது சாத்தியமும் இல்லை.


தனது வரலாற்றுக் கடமையை அடக்கத்துடன் புரிந்து வைத்திருந்த ஒரு அரசியல் போராளியாக, ஆனால் தன்னை சமூகத்திற்கு மேல் நிறுத்திப் பார்த்துக் கொள்ளாத ஒரு வீரனாக, தனது தியாகத்தின் அரசியல் பயனைக்கூட ஆராய்ந்து புரிந்துகொள்ள முடிந்த அற்புதமாக பகத்சிங் இந்திய விடுதலைப் போராட்ட அரங்கினுள் நுழைகிறான்.


பகத்சிங்கை வெறுமனே நாட்டுக்காக தூக்குமேடையேறிய வீரராக மட்டும் சித்தரிப்பது அவரது வரலாற்றுப் பாத்திரத்தை மறுப்பதாகும். இளம் வயதில் மரணத்திற்கு அஞ்சாத உறுதியே வரலாற்று நோக்கில் ஒருவருக்கு சிறப்பிடத்தை தந்து விடாது. ஏனெனில் காந்தியைச் சுட்டுக் கொன்று தூக்குமேடையேறிய கோட்சேயும் கூட மரணத்திற்கு அஞ்சாத இளைஞன்தான். உயிரை துறப்பதாலல்ல, உயிரைத் துறப்பதற்கான நோக்கத்திலேதான் வீரமும், தியாகமும் அடங்கியிருக்கிறது. பகத்சிங்கின் நோக்கமும், லட்சியமும்தான் அவரது மரணத்தை வரலாறாக்கியது. இளைஞர்களை புரட்சிகர அரசியலுக்கு கவர்ந்திழுத்தது; இன்றளவும் கவர்ந்திழுக்கிறது.


பகத்சிங்கினுடைய காலத்தின் தேவைதான் என்ன?


1919ல் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்திய மக்களிடத்தில், குறிப்பாக பஞ்சாப் மக்களிடத்தில் ஆறாத வடுவாகவும், சுதந்திரக் கனலை மூட்டி விடுவதாகவும் அமைந்தது. அப்போது சிறுவனாயிருந்த பகத்சிங்கின் உள்ளத்திலும் இப்படுகொலை ஆழமான காயத்தை உருவாக்கியிருந்தது. இதற்குப் பழி வாங்கும் விதத்தில் உத்தம் சிங் எனும் இளைஞர் 20 ஆண்டுகள் காத்திருந்து படுகொலைக்குப் பின்னணியிலிருந்த அப்போதைய பஞ்சாப் கவர்னர் ஜெனரல் ஓ டயரைச் சுட்டுக் கொன்றார்.


1921ல் காந்தி "ஓராண்டிற்குள் சுயாட்சி' என்ற முழக்கத்தோடு ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். அவ்வழைப்பை ஏற்று மாணவர்கள் தொழிலாளர்கள் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் அணிதிரண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.


1922 பிப்.5ஆம் தேதி உ.பியில் உள்ள சௌரி சௌரா எனும் இடத்தில் அமைதியாகப் போராடிய மக்கள் மீது போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் மடிந்தனர். வெகுண்டெழுந்த மக்கள் சௌரி சௌரா போலீசு நிலையத்தை தீயிட்டுக் கொளுத்தியதில் 22 போலீசுக்காரர்கள் கொல்லப்பட்டனர். உடனே ஒத்துழையாமை இயக்கம் காந்தியால் நிறுத்தப்பட்டது. காந்தியின் இந்த எதேச்சதிகாரமான முடிவுக்கு எதிராக காங்கிரசுக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினர் மீதும் அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. காங்கிரசு கை கட்டி வேடிக்கை பார்த்தது. ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு நம்பிக்கையின் மையும், சோர்வும் இந்திய அரசியல் வானை மூடின.


தேசப்பற்றுமிக்க இளைஞர்கள் புதிய நம்பிக்கைகளைத் தேடலாயினர். காந்தியத்தின் மீது துவக்கத்திலேயே விமரிசனம் கொண்டிருந்த பகத்சிங், சுகதேவ் போன்ற இளைஞர்கள் புரட்சிகர அமைப்புகளின் தொடர்பு கிடைக்கப் பெற்றனர். 1924ன் இறுதியில் சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் துவக்கப்பட்ட இந்துஸ்தான் குடியரசுக் கழகம் எனும் அமைப்பில் இணைந்தனர்.


இவ்வமைப்பின் அப்போதைய முன்னணியாளர்களான ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லஹிரி, அஷ்பகுல்லா கான், மன்மத்நாத் குப்தா, சந்திரசேகர் ஆசாத் போன்றோர், 1925 ஆகஸ்டு 9ந் தேதியன்று காக்கோரி எனும் இரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி, அரசு கஜானாவிற்கான பணத்தைக் கொள்ளையடித்தனர். இதனை அரசுக்கு நேர்ந்த சவாலாக உணர்ந்த ஆங்கிலேய அரசு, கடுமையான அடக்குமுறையை ஏவியது. 1926 இறுதியில் தலைமறைவான ஆசாத் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். இயக்கம் செயலற்று நின்றது.


இந்தத் தேக்க நிலையில், 1926இல் லாகூரில் பகத்சிங், பகவதிசரண் வோரா, சுகதேவ், யஷ்பால் முதலானோர் "நவஜவான் பாரத் சபா' எனும் இளைஞர் அமைப்பைத் தோற்றுவித்தனர். வெளிப்படையாக மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையைத் தூண்டும் கூட்டங்கள் இவ்வமைப்பினரால் நிகழ்த்தப்பட்டன.


1927 இறுதியில் ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லஹிரி, அஷ்பகுல்லா கான் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். பலர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இச்சூழ்நிலையில், தலைமறைவாயிருந்த ஆசாத்தோடு பகத்சிங் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பு இந்த இளம் தோழர்களின் தோளில் விழுந்தது.


1925லிருந்து 1927க்கும் இடைப்பட்ட இக்காலத்தில் இயக்கப் பணிகளினூடாக, 1917ன் ரசியப் புரட்சியின் விளைவாக, இந்தியாவில் பரவத் தொடங்கிய சோசலிசக் கருத்துக்களையும், இதர ஐரோப்பியக் கருத்துக்களையும் பகத்சிங்கும், அவரது தோழர்களும் கற்கத் துவங்கினர். பகத்சிங் சோசலிசக் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வதில் முன்ணணியில் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் உருப்பெற்ற அரசியல் கண்ணோட்டம்தான் அவருடைய வளர்ச்சி நிலைகளுக்கு அடிகோலியது. இச்சூழ்நிலையை "நான் நாத்திகன் ஏன்?' எனும் கட்டுரையில் அவர் விவரிக்கிறார்.


""அக்காலகட்டம் வரை நான் வெறுமனே ஒரு கற்பனாவாதப் புரட்சியாளனாகவே இருந்தேன். அது வரை நாங்கள் வெறுமனே பின்பற்றுபவர்களாக மட்டுமே இருந்தோம். இப்பொழுதோ முழுப்பொறுப்பையும் தோளில் சுமக்க வேண்டிய காலம் வந்தது. சில காலமாக ஏற்பட்ட தடுக்க முடியாத எதிர்ப்பால், கட்சி உயிரோடிருப்பதுகூட அசாத்திய மென்று தோன்றியது.... எங்களுடைய வேலைத்திட்டம் பிரயோசனமற்றதென பிற்காலத்தில் உணரக் கூடிய ஒருநாள் வரக் கூடுமோ என சில சமயங்களில் நான் பயந்ததுண்டு. எனது புரட்சிகர வாழ்க்கை யில் அது ஒரு திருப்புமுனையாகும். ""கற்றுணர்'' எனும் முழக்கமே என் மனத்தாழ்வாரங்களில் கணந்தோறும் எதிரொலித்தது...


""நான் கற்றுணரத் துவங்கினேன். என்னுடைய பழைய நம்பிக்கைகள் மாறுதலுக்குள்ளாகத் துவங்கின. எமது முந்தைய புரட்சியாளர்களிடம் பிரதானமாக விளங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான வழிமுறைகள், இப்பொழுது தெளிவான, உறுதியான கருத்துக்களால் நிரப்பப்பட்டன. மாயாவாதமோ, குருட்டு நம்பிக்கையோ அல்ல, மாறாக யதார்த்தவாதமே எங்கள் வழியாயிற்று. அத்தியாவசியத் தேவையையொட்டிய பலாத்காரப் பிரயோகமே நியாயமானதாகும். அனைத்து மக்கள் இயக்கங்களுக்கும் சாத்வீகம் ஒரு விதி என்ற அடிப்படையில் இன்றியமையாததாகும். மிக முக்கியமாக, எந்த லட்சியத்திற்காக நாம் போராடுகிறோம் என்பதைக் குறித்த தெளிவான புரிதலோடிருக்க வேண்டும்.


""களத்தில் முக்கியமான நடவடிக்கைகள் எதுவும் அப்போது இல்லாத காரணத்தால், உலகப் புரட்சி குறித்த பல்வேறு கருத்துக்களைப் படிப்பதற்கு நிறைய அவகாசம் கிடைத்தது. அராஜகவாதத் தலைவர் பக்குனினது எழுத்துக்களையும், கம்யூனிசத் தந்தை மார்க்சினது சில படைப்புக்களையும், அதிகமாகத் தமது நாட்டில் வெற்றிகரமாகப் புரட்சியை நிகழ்த்திக் காட்டிய லெனின், டிராட்ஸ்கி மற்றும் பிறரது கருத்துக்களையும் படித்தேன்.''


பகத்சிங்கிற்கு முந்தைய புரட்சிகர பயங்கரவாதிகள் ஆங்கிலேயர்களுக்கெதிராக வீரஞ்செறிந்த முறையில் போராடிய பொழுதிலும், அரசியல் ரீதியாகப் பின் தங்கியிருந்தனர். சுதந்திரத்திற்குப் பிறகான அரசமைப்பு குறித்தும் தெளிவற்றிருந்தனர். அதன் விளைவாக காந்தி, காங்கிரசின் செயல்பாடுகளை அரசியல்ரீதியில் முறியடிக்கவும், அம்பலப்படுத்த வேண்டிய அவசியத்தையும் உணராமலிருந்தனர். அவ்வகையில், ஒருபுறம் காந்தி, காங்கிரசின் அடிவருடித்தனத்திற்கும், மறுபுறம் புரட்சிகர பயங்கரவாதிகளின் ஆயுதவழிபாட்டு சாகசவாதத்திற்கு எதிராகவுமான ஒரு மாற்றை உருவாக்க பகத்சிங், பகவதிசரண் வோரா முதலான தோழர்கள் முயன்றனர்.


இதனடிப்படையில், 1928 செப்டம்பர் 9,10 தேதிகளில் டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் அதுவரை இந்துஸ்தான் குடியரசுக் கழகமாக இருந்த அமைப்பின் பெயர், இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் கழகமாக (இ.சோ.கு.க) மாற்றப்பட்டது.
காந்தி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தன்னை புரட்சியாளர்களிடமிருந்து கவனமாகத் தூரப்படுத்திக் கொண்ட போதிலும், புரட்சியாளர்கள், காங்கிரசு நடத்திய மக்கள் போராட்டங்களிலிருந்து அவ்வாறு தம்மைத் தூரப்படுத்திக் கொள்ளவில்லை. நாட்டு விடுதலைக்கான அனைத்து முயற்சிகளிலும் அவை பலாத்கார முறைகளிலானாலும் சரி, சாத்வீக முறைகளிலானாலும் சரி புரட்சியாளர்கள் உத்வேகத்தோடு ஈடுபட்டனர். இவ்வகையிலேயே, 1928இல் சைமன் கமிஷன் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர்.


லாகூரில், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பிரதானமாக நவஜவான் பாரத் சபாவினால் ஏற்பாடு செய்யப்பட்டது. போலீசு விதித்த தடையை மீறி, அக்டோபர் 30ஆம் தேதியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலீசு தடியடி நடத்தியது. "பஞ்சாப் சிங்கம்' என்றழைக்கப்பட்ட லாலா லஜபதிராய் எனும் முதிய தலைவர் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இரண்டு வாரங்களில் அவர் உயிர் நீத்த பொழுது, வடஇந்தியாவே கொந்தளித்தது. லஜபதிராயின் இறுதி ஊர்வலத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.


மக்களிடம் எழுந்த ஆவேசத்திற்குச் செயல்வடிவம் கொடுக்க இ.சோ.கு.க தீர்மானித்தது. லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து டிச17 அன்று, அவர் மீது தடியடிப் பிரயோகம் நடத்திய சாண்டர்ஸ் எனும் போலீசு அதிகாரியை, போலீசு நிலைய வாசலிலேயே வைத்து ராஜகுருவும், பகத்சிங்கும் சுட்டுக் கொன்றனர். மறுநாள் லாகூர் முழுதும் சாண்டர்ஸை கொலை செய்ய நேர்ந்ததற்கான அவசியம் குறித்து இ.சோ.கு.க சுவரொட்டி ஒட்டியது. பகத்சிங்கும், இதர தோழர்களும் லாகூரை விட்டுத் தப்பிச் சென்றனர். இதற்கு முன்பு எத்தனையோ முறை ஆங்கிலேய அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டிருந்த போதிலும், சாண்டர்ஸ் படுகொலையின் அரசியல் முக்கியத்துவம் காரணமாக, புரட்சியா ளர்கள் நாடு முழுதும் போற்றப்பட்டனர்.


தலைமறைவான சூழலில் நாட்டின் அரசியல் சூழலை புரட்சியாளர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர். பகத்சிங்குடன் நவஜவான் பாரத் சபாவில் இணைந்து செயல்பட்ட தொழிலாளர்விவசாயிகள் கட்சியின் தலைவர் சோகன் சிங் ஜோஷ், 1928 சாண்டர்ஸ் கொலைக்குப் பிறகு கல்கத்தாவில் பகத்சிங்கைச் சந்தித்த பொழுது ""நீங்கள் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஒருங்கிணையுங் கள். நாங்கள் ஆங்கில அரசின் ஒருங்கிணைவை உடைத்தெறிகிறோம். நாம் இப்படி ஒரு வேலைப் பிரிவினையை ஏற்படுத்திக் கொள்வோம்'' என்று பகத்சிங் கூறியதாகப் பதிவு செய்துள்ளார். கம்யூனிசம் அவர்களை ஈர்த்த போதிலும், "மாபெரும் மக்கள் இயக்கத்தின் இராணுவமாக உருக் கொள்வதே' இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுக் கழகத்தின் இலக்காக இருந்தது. எனினும், மாபெரும் மக்கள் இயக்கம் குறித்த அவர்களது கருத்து கற்பனையிலிருந்து உதித்த ஒன்றல்ல.


அன்றைய சூழலில், தொழிற்சங்க இயக்கம் நாட்டில் முன்னேறிக் கொண்டிருந்தது. 1928இல் வட மாநிலங்களில் பரவலாக தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் போர்க் குணத்தோடு நடைபெறலாயின. வளர்ந்து வரும் தொழிலாளர் இயக்கத்தைக் கடுமையாக ஒடுக்கும் முகமாக "தொழிற் தகராறு மசோதா'வை டெல்லி மத்திய சபையில், ஆங்கில அரசு கொண்டு வந்தது.


"தொழிற் தகராறு மசோதா' நிறைவேற்றப்படும் நாளன்று டெல்லி மத்திய சபையில் உயிர்ச்சேதமின்றி வெடிகுண்டு வீசுவதென்றும், தானாகவே கைதை ஏற்றுக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்காடுவதன் மூலம் ஆங்கில அரசின் அடக்குமுறைகளை அம்பலப்படுத்துவ தெனவுமான திட்டத்தை பகத்சிங் மத்தியக் கமிட்டியில் முன்வைத்தார். இவற்றை செய்து முடித்த பின்னால் ஒரு வேளை தப்ப முடியவில்லையென்றால், தூக்கு மேடை செல்லவும் தயாராக இருக்க வேண்டுமென்றார் பகத்சிங். அவர் முன் வைத்த திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.


திட்டமிட்டபடி, 1929 ஏப்ரல் 8ஆம் தேதியன்று கேள்வி நேரத்தில் எதிர்பார்த்தபடியே வைஸ்ராயின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி "தொழிற் தகராறு மசோதா' நிறைவேறியதை அறிவிக்க ஜெனரல் சூஸ்டர் எழுந்தார். உடனடியாக பார்வையாளர் அரங்கிலிருந்த பகத்சிங்கும், பி.கே.தத்தும் வெடிகுண்டு களை காலி இருக்கைகளின் மீது வீசினார்கள். "செவிடர்களை கேட்கச் செய்வதற்கு வெடிகுண்டு முழக்கங்கள் அவசியமானவை' எனும் தலைப்பிலான சிவப்புத் துண்டறிக்கைகளை வீசியவாறு, "புரட்சி நீடுழி வாழ்க, ஏகாதிபத்தியம் ஒழிக, உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்' ஆகிய முழக்கங்களை உத்வேகத்தோடு எழுப்பினார்கள். நெடு நேரம் அவர்களை நெருங்கவும் தயங்கியவாறு போலீசார் நின்றனர். பின்னர் பகத்சிங் அவர்களை நோக்கி தாங்கள் கைதுக்குத் தயாராக இருப்பதாகவும், தங்களிடம் ஆயுதங்கள் இல்லையெனவும் உறுதியளித்த பின்னரே அந்த சூரப்புலிகள் அவர்களை நெருங்கி கைது செய்தனர்.


1929 ஜீன் 6ஆம் தேதியன்று பகத்சிங்கும், பி.கே.தத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை வரலாற்றுப் புகழ் பெற்றதாகும். வெடிகுண்டு வீசியதை ஏற்றுக்கொண்ட தோழர்கள், அதன் நோக்கம் உயிர்ப் பலியல்லவென்றும், அதன் அரசியல் நோக்கம் குறித்தும் வாதாடினர்.
""எங்களது ஒரே நோக்கம் "செவிடர்களைக் கேட்கச் செய்வதும்', செவிமடுக்காதவர்களுக்குத் தக்க எச்சரிக்கை வழங்குவதுமேயாகும். மிகப்பலரும் எங்களைப் போன்றே செய்ய விரும்பினர். வெளித் தோற்றத்தில் அமைதியாகக் காட்சியளிக்கும் இந்திய மக்கட் கடலிலிருந்து, ஒரு மாபெரும் சூறாவளி எழும்பவிருக்கிறது... கற்பனாவாத சாத்வீகத்தின் காலம் முடிந்து விட்டதைத் துளியும் சந்தேகத்திற்கிடமின்றி இளைய தலைமுறை ஏற்றுக் கொண்டு விட்டதை நாங்கள் அடையாளப்படுத்த மட்டுமே செய்துள்ளோம்.''


அன்று சர்வதேசப் பத்திரிக்கை களிலும், தேசபக்த உணர்வுமிக்க இந்தியப் பத்திரிக்கைகளிலும் விரிவாக வெளியிடப்பட்ட பகத்சிங்கின் அறிக்கைகள் மக்களால் பேரார்வத்தோடு வரவேற்கப்பட்டன. வழக்கை விரைந்து நடத்திய அரசு, 1929 ஜீன்12 அன்று பகத்சிங் மற்றும் பி.கே.தத் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.


சிறையிலடைக்கப்பட்ட தோழர்கள் அங்கேயும் தமது போராட்டத்தைத் தொடர்ந்தனர். அன்றைய சூழலில் அரசியல் கைதிகள் கிரிமினல் கைதிகளைப் போல நடத்தப்படுவதைக் கண்டித்தும், வெள்ளை அரசியல் கைதிகளுக்கு காட்டப்பட்ட பாரபட்சத்தைக் கண்டித்தும், பகத்சிங் லாகூர் சிறையிலிருந்தும், பி.கே.தத் மியான்வாலி சிறையிலிருந்தும் ஜூலை13ம் தேதியன்று உண்ணா விரதத்தை துவங்கினார்கள். கைது செய்யப்பட்ட பிற புரட்சியாளர்களும், பகத்சிங், தத்துடன் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். அவர்களுக்கு வலுக்கட்டாயமாக உணவு புகட்ட முயன்ற முயற்சிகளைக் கடுமையாக எதிர்த்தனர். 63 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு ஜதின்தாஸ் செப்டம்பர் 13ஆம் தேதியன்று உயிர் நீத்தார். அவரது உடல் லாகூர் சிறையிலிருந்து கல்கத்தா எடுத்துச் செல்லப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் 6 லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.


சாண்டர்ஸ் கொலை வழக்கு இரண்டாம் லாகூர் சதி வழக்காக ஜீலை 10 முதல் துவங்கியது. பகத்சிங் இவ்வழக்கிலும் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். பகத்சிங்கும் தோழர்களும் வழக்கு மேடையின் நியாய வேடத்தைக் கேள்விக்குள்ளாக் கினர். லெனின் தினம் மற்றும் காக்கோரி தினம் நீதிமன்றத்திலேயே தோழர்களால் கொண்டாடப்பட்டது. பகத்சிங், மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு தங்களது வாழ்த்துத் தந்தியை அனுப்ப நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.


ஒரு கட்டத்தில் இவ்வழக்கு விசாரணை, மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்குவதற்குப் பதிலாக புரட்சியாளர்களுக்குச் செல்வாக்கு உண்டாக்குவதை உணர்ந்த ஆங்கிலேய அரசு, 1930 மே 1 ஆம் தேதியன்று லாகூர் சதி வழக்கு சட்டவரைவின் மூலமாக வழக்கை விசேட நீதிமன்றத்திற்கு மாற்றியது. அதனடிப்படையில், அனைத்து நீதித்துறை விதிமுறைகளும் காற்றில் பறக்க விடப்பட்டு, ""குற்றம் சாட்டப்பட்டோர் இல்லாமலேயே விசாரணை நடைபெறலாம்'' என அறிவித்தது. பிறகு "தடங்கலின்றி' நடைபெற்ற விசாரணை நாடகம் அக்டோபர் 7ஆம் தேதியன்று பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்குத் தூக்கு தண்டனை விதித்தது.


1929 வரை பெயரளவு டொமினியன் அந்தஸ்தையே கோரி வந்த காங்கிரசுக் கட்சி, 1930ல் "பூரண சுதந்திர' கோரிக்கைக்கு மாறியதும், சட்ட மறுப்பு இயக்கத்தைத் துவக்கியதும், பகத்சிங் ஏற்படுத்திய புரட்சி அலை காங்கிரசைப் புரட்டி எடுத்ததன் விளைவேயாகும். இதனை 29.1.1931ல் "குடி அரசு' இதழில் பெரியார் குறிப்பிடுகின்றார்.


""..காந்தியவர்களே, இக்கிளர்ச்சி (சட்ட மறுப்பு இயக்கம்) ஆரம்பிப்பதற்கு முக்கியக் காரணம் பகத்சிங் போன்றவர்கள் செய்யும் காரியங்களைத் தடுப்பதற்கும், ஒழிப்பதற்குமே என்ற கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லியிருக்கின்றார்.''


சட்ட மறுப்பு இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில், வழக்கம் போல் சமரசப் பேச்சுவார்த்தைக்காக காந்தி மன்றாடினார். அதன் விளைவாக காந்தி இர்வின் பேச்சுவார்த்தை ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில், பகத்சிங்கையும், இதர தோழர்களையும் விடுதலை செய்யக் கோரும், குறைந்தபட்சம் அவர்கள் தண்டனையையேனும் குறைப்பதற்கான ஷரத்தைச் சேர்க்க வலியுறுத்தி நாடு முழுவதும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு உடன்பட மறுத்த காந்தி தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் அவர் என்ன செய்தார் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


இங்கிலாந்து அரசுக்கு அன்றாடம் பேச்சுவார்த்தை விவரங்களை தெரிவிக்க கடமைப்பட்டிருந்த இர்வின், பேச்சுவார்த்தைக் குறிப்புகளை ஆவணப்படுத்தியுள்ளார்: ""முடிவில், அவர் (காந்தி) ....

பகத்சிங் வழக்கு குறித்து குறிப்பிட்டார். அவர் (மரண) தண்டனையை நீக்கக் கோரவில்லை. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் தண்டனையைத் தள்ளி வைக்கக் கேட்டுக் கொண்டார்.''


(கோப்பு எண்: 545/19312, உள்துறை அமைச்சகம், தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள அரசியல் பிரிவு)


""அவர் (காந்தி) வெளியேறும் பொழுது, மார்ச்24ல் பகத்சிங் தூக்கிலிடப்பட இருப்பதாக பத்திரிக்கை களில் செய்தி படித்ததாகவும், துரதிர்ஷ்டவசமாக காங்கிரசின் புதிய தலைவர் கராச்சியில் வந்திறங்கும் நாளும் அதுவே எனக் குறிப்பிட்டு, அதனால், கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகும் எனவும் கூறினார். நான் இவ்வழக்கை மிகக் கவனத்தோடு பரிசீலித்திருப்பதாகவும், தண்டனையை குறைப்பதற்கான எனது மனசாட்சியை திருப்திப்படுத்தும் எந்த முகாந்திரத்தையும் காணவில்லையென்பதையும் தெரிவித்தேன்... அவர் இந்த வாதத்தின் வலிமையை அங்கீகத்தது போல் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.''


(மேற்குறிப்பிட்ட கோப்பு, பிப்ரவரி 19 தேதியிட்டது 1970 ஆகஸ்டு 15 மெயின்ஸ்ட்ரீம் இதழில் டி.பி.தாஸ் எழுதிய கட்டுரையிலிருந்து)


இதனிடையே, 1930 மே 28ஆம் தேதியன்று பகத்சிங்கைத் தப்புவிப்பதற் கான திட்டத்தின் அடிப்படையில், வெடிகுண்டைச் சோதித்த பொழுது ஏற்பட்ட விபத்தில் பகவதி சரண் வோரா வீரமரணம் அடைந்தார். பகத்சிங் சிறையிலிருந்த போது, காந்தியை அம்பலப்படுத்தியும், இளைஞர்களை உற்சாகமாக அணிதிரட்டியும் வந்த வோரா ஒரு விபத்தில் பலியானது துயரார்ந்ததே. மேலும், இ.சோ.கு.கவின் படைத்தலைவராக விளங்கிய ஆசாத் இறுதி வரை தமது பெயருக்கேற்றாற் போல் போலீசின் பிடிக்குள் அகப்படாமலிருந்து, 1931 பிப்ரவரி 27ல் போலீசாருடன் தன்னந்தனியாக நின்று வீரத்தோடு சண்டையிட்டு அலகாபாத் நகரிலிருந்த அன்றைய ஆல்ஃபிரெட் பூங்காவில் வீரமரணமடைந்தார்.


இந்தியச் சிறை வரலாற்றிலேயே முதல் முறையாக மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி காலை நேரத்திற்குப் பதிலாக, மார்ச்23,1931 அன்று இரவோடிரவாக மாலை 7.33 மணியளவில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு முதலானோர் தூக்கிலிடப்பட்டனர். சிறையிலிருந்த நேரடி சாட்சியங்களின்படி, பகத்சிங்கை தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல போலீசார் வந்த பொழுது அவர் லெனின் எழுதிய ஒரு நூலைப் படித்துக் கொண்டிருந்தார். "சிறிது நேரம் காத்திருங்கள், ஒரு புரட்சியாளன் இன்öàரு புரட்சியாளனிடம் பேசிக் கொண்டிருக்கிறான்' என்றார். அவர் குரலில் இருந்த ஏதோ ஒன்றினால் தடுக்கப்பட்ட அதிகாரிகளும் காத்திருந்தனர். சில நிமிடங்கள் கழித்து புத்தகத்தை உயர வீசிய அவர், "வாருங்கள், போகலாம்' எனக் கிளம்பினார். பின்னர், அவர், சுகதேவ், ராஜகுரு மூவரும், புரட்சிகரப் பாடல் வரிகளைப் பாடியவாறு தூக்குமேடைக்குச் சென்றனர். அங்கிருந்த மாஜிஸ்திரேட்டை நோக்கி, "இந்தியப் புரட்சியாளர்கள் எவ்வாறு மரணத்தை நோக்கி வீரநடை போட்டார்களென்பதைக் காணும் வாய்ப்பு பெற்ற நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள்' எனக் கூறினார். அவர்களது பிணங்களை மக்களிடம் அளிப்பது கூட பேரபாயமாக உணர்ந்த அரசு, அவசர அவசரமாக அவர்களது உடல்களை சட்லெஜ் நதிக்கரையோரம் எரித்துப் போட்டது.


ஆங்கிலேயர்களும், காந்தியும் ஓரணியில் நின்று பகத்சிங்கைப் பல வகைகளில் இருட்டடிப்பு செய்ய முயன்ற போதும், உண்மையான தேசபக்தர்களும், மக்களும் அதனை ஏற்க மறுத்து, பகத்சிங்கை ஆதரித்தார்கள். பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூவரும் 1931 கராச்சி காங்கிரஸ் மாநாடு துவங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக தூக்கிலிடப்பட்டவுடன் நாடே கொந்தளித்தது.


கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்த காந்திக்கு இளைஞர்கள் வழியெங்கும் கறுப்புக் கொடி காட்டினர். காங்கிரசின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டிற்கு மாறாக, வங்காள காங்கிரஸ் கமிட்டி புரட்சியாளர்களை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியது. ""அந்த நேரத்தில் பகத்சிங்கின் பெயர் இந்தியா முழுவதும் பரவலாக தெரிந்திருந்ததுடன், காந்தியின் அளவிற்குச் செல்வாக்குடனும் இருந்தது என்று கூறுவது மிகையாகாது.'' எனக் குறிப்பிடுகிறார் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை எழுதிய பட்டாபி சீத்தாராமையா.


"புரட்சி என்றாலே பகத்சிங் என்று தான் பொருள்' என்றார் சுபாஷ் சந்திர போஸ். உண்மைதான், நமது நாட்டின் அரசியல், வரலாற்றுப் பொருளில், பகத்சிங்தான் புரட்சியின் அடையாளம். இரண்டு நூற்றாண்டுக்காலமாக விடுதலை வீரர்கள் வென்றெடுக்க முயன்ற விடுதலையை, எதிரிகளிடம் யாசித்துப் பெற வேண்டிய பிச்சையாக மாற்றினார் காந்தி. அந்த விடுதலை வீரர்களின் மரபில் வந்த பகத்சிங்கோ, கம்யூனிசக் கருத்துக்கள் அளித்த ஒளியில் காந்தியக் காரிருளைக் கிழித்து புரட்சியை மீண்டும் நிகழ்ச்சிநிரலுக்குக் கொண்டுவந்தார்.


மைசூர், நெல்லை, வேலூர், மீரட், வங்காளம் என்று ஒவ்வொரு முறையும் எதிரிகள் புதைத்து நிமிர்ந்த மறுகணமே, இன்öàரு பகுதியில் வெடித்துக் கிளம்பிய விடுதலை வேட்கையைப் போல, சட்லெஜ் நதிக்கரையில் புதைக்கப்பட்ட அந்தப் புரட்சி, 1946ல் தெலிங்கானா விவசாயிகள் எழுச்சியாய் ஆந்திரத்தில் எழுந்து, மூன்றாவது சிப்பாய் எழுச்சியாய், மும்பையில் வெடித்தது. ""இதனை உடனே நசுக்கவில்லை என்றால் மேடையில் புதிய பாத்திரங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்'' என்று 1857இல் பெஞ்சமின் டிஸ்ரேலி விடுத்த எச்சரிக்கை ஆங்கிலேயப் பேரரசின் காதில் ஒலித்திருக்க வேண்டும்.


ஆனால் அவ்வாறு நசுக்கினால் எழக்கூடிய கம்யூனிசப் பேரலை ஏகாதிபத்தியவாதிகளின் கண்ணில் தெரிந்தது. காந்தி எனும் கைப்பாவையின் அவதாரம் கலைந்து கொண்டிருப்பதும் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது. துரோகிகளின் கைக்கு அதிகாரத்தை மாற்றிக் கொடுப்பதுதான் பேரரசைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எஞ்சி இருக்கும் ஒரே வழி என்பது எதிரிகளுக்குப் புரிந்ததால் அதிகார மாற்றம் நிகழ்ந்தது.


தியாகத்தின் மரபுகள் அனைத்தையும் பூசையறைப் படங்கள் ஆக்கிவிட்டு துரோகம் அதிகாரத்தில் அமர்ந்துவிட்ட போதிலும் விடுதலைப் போராட்டத்தின் வீரமரபு, 1967 நக்சல்பாரி எழுச்சியாய் வங்கத்தில் பிறப்பெடுத்தது. திப்பு முதல் பகத்சிங் வரையிலான விடுதலை மரபனைத்தையும் உட்செரித்துக் கொண்டு மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான போரில் களத்தில் நிற்கிறது.


இதோ, துணைப்படைத் திட்டத்தை அறிவிக்கிறார் ஜார்ஜ் வெல்லெஸ்லி புஷ். வாரிசிலிக் கொள்கையின் அடிப்படையில் பொதுத்துறைகளைக் கொடுத்துவிடச் சொல்கிறார் டல்ஹவுஸி சிதம்பரம். ""மகனே குறைந்தபட்சத் திட்டத்துக்கு மேல் எதையும் ஒத்துக் கொள்ளாதே'' என்று மரணப் படுக்கையில் முனகுகிறார் எச்சூரி நவாப். ""மகா பிரபுவே, ஆங்கிலேயக் கம்பெனியை நம்பியவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். எதிர்த்தவர்கள் யாரும் வாழ்ந்ததில்லை'' என்று ஆக்ஸ்ஃபோர்டில் உரையாற்றுகிறார் தொண்டைமான் சிங்.


கனவில் எழும்பும் தொடர்பற்ற காட்சிப் படிமங்கள் போல், முந்நூறு ஆண்டு வரலாற்றின் துரோகிகளும், எதிரிகளும் ஒரே நேரத்தில் பேசுகிறார்கள். கனவுப் பிம்பங்களின் அடையாளக் குழப்பம் ஏதுமின்றி, தெளிவாகத் தெரிகிறது அந்த முகம். மீசை அரும்பாத அந்த இளைஞனின் முகம். இந்தப் பேரிரைச்சலைக் கிழித்துக் கொண்டு தீர்மானமானமாக ஒலிக்கிறது அந்தக் குரல்: ""இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை..
.''
· பால்ராஜ்


Wednesday, September 26, 2007

பசுத் தோல் போர்த்திய பன்றிகள்.

ஆர்.எஸ்.எஸ் பற்றி "பசுத் தோல் போர்த்திய பன்றிகள்" என்ற தலைப்பில் தோழர் ராஜாவனஜ் அவர்களின் தளத்தில் முன்பு வந்த இந்த பதிவு தற்போது சூழ்நிலையில் அவசியம் கருதி மீண்டும் மறுபதிப்பாக வெளியிடுவது சிறப்பாக இருக்கும் என்பதால்....
....
மற்றவர்கள் பயந்து விலகி ஓடிப் போகும் படியான காரியங்களில் வலுக்கட்டாயமாக தலையை நுழைத்துக் கொள்வது என்பது விடலைப் பருவ குணங்களில் ஒன்று. நான் மட்டும் என்ன விதிவிலக்கா? என் பதினேழாம் வயதில் நானும் அப்படித்தான் இருந்தேன். வித்யாசமான அனுபவங்களும் சாகசக் கதைகளும் கனவுகளை நிரப்பிக் கொண்டிருந்த காலம் அது. அந்த சமயத்தில் எப்படியாவது ஏதாவது ஒரு சாகசத்தில் நானும் பங்கு பெற வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். அதே சமயத்தில் தான் 1998ல் கோவை குண்டு வெடிப்பு நடந்தது. அது ஏன் நடந்தது, ஏன் சில முஸ்லிம்கள் அப்படி ஒரு காரியத்தில் ஈடுபட்டார்கள், சமுதாய அமைதியின்மைக்கு அரசியல் காரணங்கள் என்ன என்றெல்லாம் யோசிக்கும் பக்குவத்தில் அப்போது நான் இல்லை. எனக்கு அரைகுறையாக புரிந்ததெல்லாம் முஸ்லிம்கள் குண்டு வைத்து பலரை கொன்று விட்டனர் என்பது தான்.
..
இது நடந்து அடுத்து ஒரு வாரத்தில் நான் RSSல் இனைந்தேன். அங்கே எப்படி பொறுப்புகளில் உயர்ந்தேன் என்றெல்லாம் முன்பொரு பதிவில் சொல்லியிருகிறேன். இன்னொரு முறை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. RSSல் இருந்து நான் விலகிய சமையத்தில் அதற்கு அரசியல் காரணங்கள் இல்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட சலிப்பும் வெறுமையும் தான் காரணம். பின்னர் எனக்கு ஏற்பட்ட இடதுசாரி அரசியல் அறிமுகம்(நன்றி:- புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், மற்றும் தோழர் G.K.ராமசாமி (CPI-Tamil Nadu water board தொழிற்சங்கம்)), வேறு சில பரிமானங்களை சுட்டிக் காட்டியது. என் அனுபத்தில் நான் படித்த பாடங்களும் புரிந்து கொண்ட உண்மைகளும் மிக மிக முக்கியமான ஒன்று. எங்காவது என்னைப் போல இன்னுமொரு விடலைச் சிறுவன் என்னைப் போலவே முட்டாளாவதை இப்பதிவு தடுக்குமானால்- அதுவே இப்பதிவின் வெற்றி.
.
இனி.........
.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (RSS)
...
சொன்னதும் சொல்லாததும்
...
சொன்னது : RSS ஒரு தேசபக்தி இயக்கம்
சொல்லாதது : தேசபக்தி என்பது பாசிஸ்டுகளின் முகமூடி. மக்கள் எப்போதும் பயத்திலும் யாரோ ஒரு எதிரி தங்களைத தாக்குவதற்கு தயாராய் இருக்கிறான் என்ற நினைப்பிலும் ஆழ்ந்திருப்பது பாசிஸ்டுகளின் அரசியல் ஆசை நிறைவேற மிக அவசியமான ஒன்று. உண்மையான தேசப்பற்று சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களின் உயர்வையும் பற்றி கவலைப் படும், அதே நேரம் போலி தேசவெறி பிரச்சினைகளை பார்க்க விடாமல் கண்களை மறைக்கும். வலதுசாரி தேசபக்தி உண்மை நிலையை மறைத்து பொய்யான புள்ளி விபரங்களையும் தேசம் முன்னேறுவதாய் பொய்ப் பிரச்சாரம் செய்வதையுமே நம்பி இருப்பது. ஹிட்லர் ஜெர்மனியின் உயர் பதவிக்கு உயர்ந்தது இவ்வாறே. வலது தேசபக்தி=தேசியவெறி.பொதுவாக ஒரே மொழி ஒரே கலாச்சாரம் ஒரே மதம் ஒரே நாடு என்று uniformityஐ உயர்த்திப் பிடிப்பது தான் பல்வேறு பெயர்களில் உள்ள சங்கபரிவாரங்களின் மறைமுக செயல் திட்டம். வெளியில் சொல்லிக் கொள்ளாவிட்டாலும் இது நாஜிக்களின் பாசிஸ்டுகளின் செயல் முறையே. தேசிய வெறியூட்டப் பட்ட மக்களும் அதிகாரிகளும் எப்படி செயல் பட்டார்கள் என்பதை இரண்டாம் உலகப் போரின் போது நமக்கு ஹிட்லரின் ஜெர்மனி உணர்த்தியது.
.
சொன்னது : RSS ஒரு ஜனநாயக அமைப்பு.
.
சொல்லாதது : இந்த பொய்யை உடைக்க RSSன் அதிகார அடுக்குகளை புரிந்து கொள்வது அவசியம். சங்கத்தில் இரு வித பொறுப்பாளர்கள் உண்டு க்ரகஸ்த கார்யகர்தர்கள், பிரச்சாரக்குகள். இதில் பிரச்சாரக்குகள் திருமண வாழ்க்கையில் இல்லாமல் முழு நேரமாக சங்கப் பணி செய்பவர்கள், கிரகஸ்தர்கள் இல்வாழ்வில் உள்ளவர்கள். கீழ் நிலையில் கட் நாயக்( ஷாக்கா ஒருங்கினைப்பாளர்) முக்யசிக்ஷக் ( ஷாக்கா நடத்துபவர்) மண்டல் கார்யகர்த்தர்கள் ( ஷாக்கா பஞ்சாயத்து அளவிலானது), மண்டல் (மூன்றுக்கு மேற்பட்ட பஞ்சாயதுகள் உள்ளடக்கியது), கண்ட ( மூன்றுக்கு மேற்பட்ட மண்டல்கள்) தாலுக்கா கார்யகர்த்தர்கள்( மூன்றுக்கு மேற்பட்ட கண்ட) ஜில்லா கார்யகர்த்தர்கள் ( மூன்றுக்கு மேற்பட்ட தாலுக்கா) விபாக் கார்யகர்த்தர்கள்( மூன்றுக்கு மேற்பட்ட ஜில்லாக்கள்) பிராந்த கார்யகர்த்தர்கள் ( ஒரு மாநிலம் ) ஷேத்திரிய கார்யகர்த்தர்கள் ( மூன்றுக்கு மேற்பட்ட மாநிலங்கள்) உட்ச கட்டமாக அகில பாரத பொறுப்பாளர்கள். சரி இதில் எப்படி பொறுப்பாளர்கள் நியமிக்கப் படுகிறார்கள்?. வருடத்துக்கு ஒரு முறை கார்ய காரணி மண்டல்( செயல் வீரர்கள் கூட்டம்) கூடி அந்தந்த பகுதிக்கான பொறுப்பாளர்களை ‘அறிவிப்பார்கள்’. ஸ்வயம்சேவக்குகள்(தொண்டர்கள்) மத்தியில் வாக்கெடுப்போ மற்றும் அது போன்று ஜனநாயக முறையோ கிடையாது. இந்த வைபவத்தில் வீட்டோ அதிகாரம் கொண்டவர் பிரச்சாரக்குகள் மட்டுமே. அகில பாரத கார்ய காரணி மண்டலிலும் பொறுப்பாளர்கள் நியமிப்பது இப்படித்தான். உதாரணம் தற்போதய தலைவர் சுதர்சன்.
.
சொன்னது : RSS பார்ப்பனர் அமைபு அல்ல. வெகுஜன இயக்கம்.
.
சொல்லாதது : மேலே உள்ள அதிகார அதிகார அடுக்குகளை கூர்ந்து கவனியுங்கள், இதில் தாலுக்கா அளவில் சில பார்ப்பனர் அல்லாத பிரச்சாரக்குகள் உண்டு. மேலும் ஜில்லா அளவில் வெகு சில பார்ப்பனர்கள் உண்டு அதன் மேலே உள்ள விபாக் அளவில் பார்ப்பனர் அல்லாத பிரச்சாரக்குகள் அபூர்வம். மாநில அளவிலோ அகில பாரத அளவிலோ பார்ப்பனர்கள் பிரச்சாரக்குகளாகவோ சர்கார்யவாகவோ இருப்பதே இல்லை. சரி கீழ் நிலையில் உள்ள பிரச்சாரக்குகள் பிற்காலத்தில் என்னவாகிறார்கள்? அவர்கள் அனேகம் பேர் சங்கத்தில் இருந்து விலகி விடுகிறார்கள்( offcourse தங்கள் இளமைக் காலம் அனைத்தையும் தொலைத்து வீணாக்கிய பின்). இதில் அகில பாரத தலைவரை(சர்சங்க சாலக்) தவிர்த்து மற்ற தலைவர்கள் எல்லோரும் அந்தந்த பகுதியில் பிரபலமாக உள்ள பிரமுகர்களே தலைவர்களாக இருப்பர். இவர்களுக்கு சுத்தமாக எந்த ஒரு அதிகாரமும் கிடையாது நம் மாநில கவர்னர்களைப் போல. ஆக, எந்த ஒரு முடிவும் உயர் மட்ட அளவில் பார்ப்பன சர்கார்யவாகாலும் சர்சங்கசாலக்காலும் எடுக்கப் பட்டு கீழ் மட்ட அளவில் பார்ப்பனர் அல்லாதோரைக் கொண்டு செயல் படுத்தப் படும்.
.
சொன்னது : RSS இயற்கைப் பேரழிவு காலங்களில் மக்கள் பணியாற்றி உள்ளது.
.
சொல்லாதது : இது இன்னொரு முகமூடி. இதனால் யாராவது பயன் அடைந்திருந்தால் அவர்கள் கிருஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும். இதை சமுதாயப் பணி என்று சொல்வதை விட ஏட்டிக்கு போட்டி பணி என்றால் மிகப் பொருத்தமாக இருக்கும்.ஜில்லா அளவிலான கார்ய காரணி மண்டல்கள் பலவற்றில் நான் பங்கேற்று உள்ளேன் அதில் அவர்கள் வாசிக்கும் அறிக்கையின் ஒரு பகுதி சேவா காரியங்களால் ஏற்படுத்தப் பட்டுள்ள ஷாக்காக்களின் என்னிக்கை பற்றியது. ஆக, RSSன் சேவாகாரியங்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்ட, சுயநலம் சார்ந்த காரியங்களே.
.
சொன்னது : இந்துத்துவம் இந்தியாவிற்கு இயல்பான ஒரு வாழ்வு முறை தத்துவம்.
.
சொல்லாதது : இந்துத்துவம் இயல்பானதல்ல செயற்கையாக தினிக்கப் படும் தத்துவம். இந்தியா என்பது பல தேசிய இனங்கள் இனைந்த கதம்பம். பல் வேறு மொழி, கலாச்சாரங்களும், வாழ்க்கை முறையும் கொண்டது. எந்த ஒரு சாம்ராச்சியமும் பல்வேறு பட்ட கலாச்சாரங்கள் தம்முள் செழிப்போடு இருப்பதை விரும்புவதில்லை. சாம்ராச்சியங்களின் சவுகரியத்துக்காக ஆதி சங்கரன் இங்கே இருந்த பல்வேறு வழிபாட்டு, மத முறைமைகளை அழித்து விட்டு சனாதன தர்மம் என்ற பெயரில் ஒரே நூலில் இனைக்க முற்பட்ட அதே காரியத்தைத் தான் இப்போது இந்துத்துவம் என்ற பெயரில் செய்து முடிக்க RSS முற்படுகிறது. சமீபத்திய உதாரணம்- நம் மீது இந்தியை திணிக்க முயன்றது.
.
சொன்னது : RSS ஒழுக்கத்தை கடுமையாக வலியுறுத்தும் இயக்கம்.
.
சொல்லாதது : பிரச்சாரக்குகளின் காம லீலைகள். உளவியல் ரீதியாக, தினிக்கப் படும் எந்த காரியமும் செயலும் வலுவான எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும். காதலும் காமமும் இயற்கையான உந்துதல்கள் (basic instict) முறையான பருவத்தில் சரியான துனையை தேர்ந்தெடுத்து இல்வாழ்வில் இனைந்து அறிவுள்ள சந்ததிகளை சமுதாயத்துக்கு தருவதே இயல்பான வாழ்வு முறை. மதங்களின் கண்டுபிடிப்பான சன்னியாசம் என்பது காம கேடி ஜெயேந்திரன் போன்ற அயோக்கியர்களையே உருவாக்கும்.
.
சொன்னது : RSS மதஅடிப்படை இயக்கம் அல்ல கலாச்சார சமுதாய இயக்கம்.
.
சொல்லாதது : இது முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி. RSS ஆன்மீகத் தேடலை வலியுறுத்தாதது என்னவோ உண்மை தான் ஆனால் மதம் என்னும் நிறுவனத்தை வலுவாக காப்பாற்றுவது அதன் existaceக்கு மிக அவசியம். ஏனென்றால் தனிப்பட்ட, உண்மையான ஆன்மீக தேடலின் உயர் நிலை கடவுள் மறுப்பு அது தேடுபவனுக்குள் பல கேள்விகள் எழுப்பும். கேள்விகள் தான் மதத்தின் மிகப் பெரிய எதிரி. ஆனால் ஆன்மீகம் நிறுவனமயம் ஆகும் போது மதம் ஆகிறது. மதம் என்னும் நிறுவனம் தன்னுடைய existenceஐ உறுதி செய்ய, தனக்கு எப்போதும் பிற நிறுவங்களால் (மதங்களால்) ஆபத்து என்று பிரச்சாரம் செய்து அதன் அடியார்களை(மக்களை) எப்போதும் ஒரு வித பயத்திலும் பதற்றத்திலும் வைத்திருக்கும். பயத்திலும் பதற்றத்திலும் ஆழ்ந்த மக்களே மதத்தை காப்பாற்ற வன்முறை போன்ற காரியங்களில் ஈடுபட முடியும்.இந்த இடத்தில் RSS வலியுறுத்தும் மதம் சார்ந்த இந்துத்துவ கலாச்சாரத்தை கவனியுங்கள். அவர்கள் வேலை மிக சுலபம். இந்துக்களுக்கும் அவர்கள் கலாச்சாரத்துக்கும் முஸ்லிம்களாலும் கிருஸ்தவர்களாலும் ஆபத்து என்னும் சிறிய பிரச்சாரம் கூட சுலபமாக மிகப் பெரிய கூட்டத்தை சேர்க்க உதவும்.
.
சொன்னது : RSS உள்நாட்டு சுதேசி பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் இயக்கம்.
.
சொல்லாதது : இல்லை. இல்லவே இல்லை. RSSன் சுதேசி இயக்கத்தின் தலைவரான குருமூர்த்தி ஒரு ஹைடெக் தரகர். corporate களுக்கும் அரச குடும்பங்களின் சொத்து தகராறுகளிலும் கட்டை பஞ்சாயத்துகள் செய்வது தான் அவரின் முக்கிய பணி. இடையிடையே சுதேசி பிலிம் காட்டுவது பொழுது போக்கு. கம்யூனிஸ்டுகளின் சுதேசி முழக்கத்தை நீர்த்து போகச் செய்வதும், மக்களை போலி-சுதேசம் பேசி குழப்புவதும் தான் SJMன் மறைமுக செயல் திட்டம்.
*****************************************************************************************************நன்பர்களே,
ஆக்டோபஸின் கரங்கள் வலுவாக நாடு முழுதும் பற்றியுள்ளது. உழைக்கும் வர்கமும், ஒடுக்கப் பட்டோரும், திராவிடர்கள் போன்ற மற்றைய தேசிய இனக் குழுக்களும் அபாயகரமானதொரு வலைப் பின்னலில் சிக்குண்டு கிடக்கிறார்கள். ஏகாதிபத்திய எதிர்ப்பும் தேசிய இனங்களின் சுயமரியாதை எழுச்சியும் இரு வேறு பாதைகளில் செல்வது இனியும் பலனளிக்காது என்றே எனக்கு தோன்றுகிறது. உங்கள் கருத்தையும், மேலே உள்ளவற்றில் ஏதாவது விடுபட்டிருந்தால் அதையும் சுட்டிக் காட்டுங்களேன்.
நன்றி

Tuesday, September 25, 2007

அத்வானிக்கு அஞ்சு பைசா, ராம கோபாலனுக்கு '0' பைசா!!

Related Articles:

திமுக-பாஜக வழங்கும் 'ராமன் கட்டிய பாலம்' அரட்டை அரங்கம்
'தமிழகத்தின் மீது சித்தாந்த போர்' ஒரு பாசிஸ்டின் சவால் - போரிட தயாராகுங்கள் தமிழர்களே!!
ஆயுதக் கிடங்கான ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை இழுத்து மூட முற்றுகைப் போராட்டத்தை துவங்குவோம் !
காவி டவுசர் கிழிஞ்சி போச்சி டும் டும் டும் டும்
தமிழகமும் சோதனைச்சாலை தான்!
புரோகிதன் மகன் ராமனும், புரோக்கர் கருணாநிதியும்!

ஆயுதக் கிடங்கான ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை இழுத்து மூட முற்றுகைப் போராட்டத்தை துவங்குவோம் !

Monday, September 24, 2007

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனா

சாதி வெறியர்களின் குலதெய்வத்துக்கு வக்காலத்து வாங்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சீரழிவு
மரங்களை எளிதில் வெட்டி வீழ்த்த உதவும் கருவியான கோடரியின் காம்பும் மரத்தால்தான் ஆனது என்பது எத்தனை பெரிய சோகம்! தனது சொந்த இனத்தையே எதிரியிடம் காட்டிக் கொடுக்கும் நபர்களையும் கோடரிக்காம்பு என்றுதான் அழைக்கிறார்கள். அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம், நமக்குக் கோடரிக் காம்பைத்தான் நினைவுக்குக் கொண்டு வருகிறது.

""மதுரை மீனாட்சி கோவில் நுழைவுக்கு உறுதுணையாய் நின்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு, தேவர் ஜெயந்தி விழாவை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்'' என்பதுதான் சிறுத்தைகளின் தீர்மானம்.

ஆதிக்க சாதிக்கு அடங்க மறுக்கச் சொன்ன இயக்கம், திடீரென ஆதிக்க சாதியின் குல தெய்வத்துக்கு மணியாட்டத் தொடங்கியிருப்பது அனைவரது புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது.

முதலில், தாழ்த்தப்பட்டோர் மீனாட்சி கோவிலுக்குள் நுழைந்த வரலாறையும் அதில் தேவர் ஆற்றிய பங்கையும் பார்ப்போம்.

காங்கிரசுக் கட்சியின் ராஜாஜி ஆதரவு கோஷ்டியைச் சேர்ந்த மதுரை வைத்தியநாதய்யர், 1939ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் நாள், தும்பைப்பட்டி கக்கன் (பின்னாளில் காமராஜின் அரசில் உள்துறை அமைச்சராக இருந்தவர்) உள்ளிட்ட தாழ்த்தப்பட்டோர்கள் 5 பேரையும், விருதுநகர் சண்முக நாடாரையும் அழைத்துக்கொண்டு, அதுவரை தாழ்த்தப்பட்டோர்களுக்கும், நாடார் உள்ளிட்ட சாதியினருக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்த மதுரை மீனாட்சி கோவிலுக்குள் நுழைந்தார். இக்கோவில் நுழைவுக்கு அன்றைய கோவில் அறங்காவல் அதிகாரியான ஆர்.எஸ்.நாயுடு உறுதுணையாக இருந்தார்.

1939இலோ, அதற்கு முன்னரோ மீனாட்சி கோவிலுக்குள் நுழையும் உரிமை கோரி தாழ்த்தப்பட்ட மக்களிடையே ஏதேனும் போராட்டம் நடத்தப்பட்டதா, அக்கோவில் நுழைவில் பெருந்திரளாக தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கெடுத்தனரா என்றால் இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், 1920களிலும் கோவில் நுழைவு உரிமை கோரி நாடார்களாலும், சுயமரியாதை இயக்கத்தாலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், அந்தக் கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் அமைப்பாகத் திரண்டு அப்போது போராடியதில்லை.

1932ஆம் ஆண்டில் சென்னையில் ஜெ.சிவசண்முகம் (பிள்ளை) தலைமையில் கூடிய தாழ்த்தப்பட்டோர் மாநாடு கூட ""கோவில் நுழைவு அவ்வளவு அவசியம் இல்லை என்று கருதி'' தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. (""பண்பாட்டு அசைவுகள்'', தொ.பரமசிவன், காலச்சுவடு பதிப்பகம், பக்.188).
1934ஆம் ஆண்டில் டாக்டர் சுப்பராயனின் தலைமையிலான சென்னை மாகாண அரசு கொண்டுவர இருந்த கோவில்நுழைவு மசோதாவை ஆதரிக்கச் சொல்லி காந்தி கேட்டுக்கொண்டபோது , டாக்டர் அம்பேத்கர் அதனை ஆதரிக்க மறுத்துள்ளார். ""கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் தாழ்த்தப்பட்டோர் முன்னேறும்போது ஆலய நுழைவு தானாகவே நிகழும்'' என்று காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பட்டிருந்தார். (""சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரர்'', தமிழவேள், பண்பாட்டு ஆய்வகம், பக். 89)

ஆக, தாழ்த்தப்பட்ட மக்களே இக்கோரிக்கையை முன்வைத்துப் போராடாத நிலையில், இதற்காகப் பேரளவில் திரளாத நிலையில், மதுரை மீனாட்சி கோவில் நுழைவை காங்கிரசு கட்சியினர் நடத்த வேண்டிய அவசியம் என்ன?
அன்றைக்கு காங்கிரசுக்குள் இருந்த சத்தியமூர்த்திராஜாஜி கோஷ்டிப்பூசலில், சத்தியமூர்த்தி கோஷ்டிக்கு இணையாகத் தமக்கு ஆதரவாளர்களை திரட்டவும், கட்டாய இந்தியைத் திணித்து பொதுமக்களிடம் சம்பாதித்திருந்த வெறுப்பைத் தணிக்கவும் ராஜாஜி கோஷ்டி கண்டுபிடித்த தந்திரமே கோவில் நுழைவு.

கோவில் நுழைவில் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு என்ன?

ராஜாஜி கோஷ்டியால் கோவில் நுழைவு நடக்க இருப்பதை அறிந்திருந்த மீனாட்சி கோவில் பட்டர்கள், ராஜாஜியின் எதிரணியைச் சேர்ந்த முத்துராமலிங்கத் தேவரை அணுகி, கோவில் நுழைவை அடியாட்கள் வைத்து அடித்து, தடுத்து நிறுத்த வேண்டினார்கள். தேவரால் அதற்கு உதவ முடியவில்லை. காரணம், கோவில் நுழைவு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான், அவரின் தூண்டுதலால் மதுரை பின்னலாடைத் தொழிற்சாலை, சிந்தாமணி திரையரங்கம் ஆகியவற்றில் சாதி ரீதியான வன்முறை நடைபெற்றிருந்ததால், அவர் எந்நேரமும் கைதாகக் கூடிய சூழ்நிலையில் இருந்தார். எனவே, தேவரால் பட்டர்கள் வேண்டுகோளின்படி அடியாட்களை அனுப்பி வைக்க முடியவில்லை. (மேற்கூறிய நூல், பக். 4748 மற்றும் ""முதுகுளத்தூர் கலவரம்'', தினகரன், யாழ்மை வெளியீடு, பக். 106).

தேவரின் எதிர்ப்பில்லாமல் கோவில் நுழைவு நடந்தது. இதுதான் முத்துராமலிங்கத் தேவரின் கோவில் நுழைவு பங்களிப்பு!
தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவைப் பெறாத, தேவரின் "பங்களிப்பு' ஏதும் இல்லாத கோவில் நுழைவு நாடகத்தைத் திரித்து சிறுத்தைகள் தீர்மானமாய்ப் போடுவது ஏன்?

முத்துராமலிங்கத் தேவர் எங்காவது தாழ்த்தப்பட்டோர் விடுதலைக்காகப் போராடியிருக்கிறாரா?

தனது மாற்றாந்தாயின் விளைநிலங்களில் விளைச்சலைக் கொள்ளையடிக்கவும், அதைத் தடுக்க முயன்ற தாசில்தாரின் காலை வெட்டவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சோலைக்குடும்பன் போன்ற அடியாட்களை தயார் செய்து அடிமைகளாக வைத்திருந்தவர்தான், தேவர். (""சமூக உரிமைப் போராளி....'', பக். 9598 மற்றும் ""முதுகுளத்தூர் கலவரம்'', பக். 102)

தேர்தல் பிரச்சாரத்தில் ""ஓட்டு இல்லையானால் வேட்டு'' என மிரட்டியே தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளைக் கைப்பற்றிய தேவர், தான் பதவியில் இருந்தவரைக்கும் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சிக்குப் பெரும் தடையாகவே இருந்திருக்கிறார். (""முதுகுளத்தூர் கலவரம்'', பக். 54; ""சமூக உரிமைப் போராளி...'', பக். 205). சாலை வசதிகள் வந்து விட்டால், தேவர்களைக் கைது செய்ய காவல் துறை எளிதில் ஊருக்குள் வந்து விடும் என்றும் பயமுறுத்தி, அடிப்படை வசதிகளை வரவிடாமல் தடுத்து வந்தவர்தான் அவர். (""சமூக உரிமைப் போராளி....'', பக். 205 மற்றும் ஆர்.சிதம்பரபாரதியின் சட்டமன்ற உரை, 30.10.1957; ""சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு'', ஜீவபாரதி, சுவாமிமலை பதிப்பகம், பக். 163).
முதுகுளத்தூரில் தனக்கு வாக்களிக்காத ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கொலை வெறியைத் தூண்டி விட்டு தேவேந்திரர்கள் 17 பேரின் உயிரைக் குடித்த சாதிவெறித் தலைவரின் பிறந்த நாளுக்கு அரசு விடுமுறை கேட்பதுதான் ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் கடமையா?

தேவேந்திரர்கள் உழைத்து சேகரித்து வைத்திருந்த உணவு தானியங்களை எரியும் வைக்கோல் படப்புகளுடன் சேர்த்து எரித்தும், பெண்களைப் பலாத்காரம் செய்தும், தாழ்த்தப்பட்டோரின் குடிநீர் கிணறுகளில் மலத்தையும், மண்ணெண்ணெய்யையும் ஊற்றி கோரத்தாண்டவம் ஆடிய சாதிவெறிக் கும்பலை உசுப்பேற்றிவிட்ட மனிதரை ஆதரிப்பதென்பது, தாழ்த்தப்பட்டோர் விடுதலையின் செயல் திட்டமா?

முதுகுளத்தூர் கலவரத்தைக் கட்டுப்படுத்த நடந்த சமாதானக் கூட்டத்தில், தாழ்த்தப்பட்டோரின் தலைவரான இம்மானுவேல் சேகரன் கையெழுத்திட்ட சமாதான ஒப்பந்தத்தில் சமமாகக் கையெழுத்திட மறுத்தும், ""என்னை எதிர்த்துப் பேசுமளவுக்கு ஒரு பள்ளப்பயலை வளர்த்து விட்டிருக்கிறீர்கள். நீங்களும் மறவர்களா?'' எனக் கேட்டு தன் அடியாட்களைக் கொம்பு சீவி விட்டும், இம்மானுவேலின் படுகொலைக்குக் காரணமாய் இருந்தவர்தானே தேவர்? (""சட்டப் பேரவையில்...'' பக். 1718 மற்றும் உள்துறை அமைச்சர் எம்.பக்தவச்சலம் சட்டசபையில் தாக்கல் செய்த அறிக்கை 26.10.1957; ""சமூக உரிமைப் போராளி...'', பக். 139)

தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த சுவாமி சகஜானந்தா எனும் தலைவர் பலமுறை காங்கிரசு சார்பில் சட்டசபையில் உறுப்பனராக இருந்துள்ளார். சிதம்பரம் பகுதியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காகக் கல்வி நிலையம் நிறுவியவர் இவர். இவரின் தொண்டைப் பாராட்டிப் பல கட்டுரைகள் எழுதினார், விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ.வான ரவிக்குமார். திருமாவளவனும் சகஜானந்தரின் பள்ளி விழாக்களில் கலந்து கொள்பவர்.
முதுகுளத்தூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது, சட்டசபையில் சுவாமி சகஜானந்தா ""ஒருவன் கொலை செய்தால் அவனைத் தூக்கிலிடுவது வழக்கம்.

ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் செய்துள்ள பெரும் பிழைக்கு அவரை எந்தத் தூக்கில் போடுவது?... சர்க்கார் கொஞ்சம்கூடப் பார்க்காமல் அவரைத் தூக்கிலிட வேண்டும்'' எனப் பேசியுள்ளார். (""சட்டப் பேரவையில்...'', பக். 225)
விடுதலைச் சிறுத்தைகள் கொண்டாடும் சகஜானந்தாவோ, தேவருக்குத் தூக்குத் தண்டனை தரச்சொல்லியிருக்கிறார். ஆனால் சிறுத்தைகளோ, தேவர் ஜெயந்திக்கு விடுமுறை கேட்கின்றனர். இதற்கு பெயர் விடுதலை அரசியலா? சந்தர்ப்பவாதமா?

தாழ்த்தப்பட்டோர் மீது தீண்டாமையைக் கடைபிடித்து வரும் ஜெயேந்திரனுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் ""தடா'' பெரியசாமி போன்ற கோடரிக்காம்புகளுக்கும், தாழ்த்தப்பட்டோர்கள் மீது தன் வாழ்நாள் முழுக்க வன்கொடுமையை ஏவிய தேவர் மீது பாசம் பொழியும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?

யார் யாரை எல்லாம் செருப்பால் அடிப்போம் என்று சொன்னார்களோ, அவர்களுடன் எல்லாம் கூட்டு சேர்ந்து அம்பேத்கரை பலி கொடுத்து உ.பி.யில் ஆட்சியைப் பிடித்திருப்பது பகுஜன் சமாஜ் கட்சி என்றால், சாதி வெறியை வளர்த்து வந்த தேவருக்கு வெண்சாமரம் வீசக் கிளம்பியிருக்கிறது, "அடங்க மறுப்போம்' என்று சொல்லி இயக்கம் வளர்த்த சிறுத்தைகள் கட்சி.
இனி, மேலவளவு முருகேசனைக் கொன்றவர்களுக்குப் பொது மன்னிப்பு கோரி கையெழுத்து இயக்கம் நடத்தவும், திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டோரை மலம் திண்ண வைத்த சாதி வெறியினரைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்தவும் கூடத் தயாராவார்கள்.

ஏற்கெனவே இராமதாசுடன் "தமிழ்ப் பாதுகாப்பு' கூட்டணி அமைத்து வன்னியர்களின் சாதிப்பகையில் இருந்து தாழ்த்தப்பட்டோரைக் "காப்பாற்றி' விட்டார்கள். இப்போது தேவர்களின் சாதிப்பகையில் இருந்து தாழ்த்தப்பட்டோரைக் "காப்பாற்ற' போர்த்தந்திரம் வகுக்கிறார்கள் போலும். நல்ல முன்னேற்றம்தான்!
..
· இரணியன்

Friday, September 21, 2007

அண்ணன் வர்றாரு வள்ளல் வர்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க !!

அண்ணன் வர்றாரு வள்ளல் வர்றாரு எல்லாம் ஒதுங்கி நில்லுங்க
ஏலே எல்லாம் ஒதுங்கி நில்லுங்க - ஏ
மக்கள் தொண்டர் வர்றாரு குண்டர் வர்றாரு
தண்டல் எடுத்து வையுங்க
எதுக்கும் துண்டை எடுத்து குடுங்க
பப்பள பளபள பட்டு சலவ சட்டை
ஆகா பட்டு சலவ சட்டை
தொண்டையில் உத்திராட்ச கொட்ட
ஒரு உத்திராட்ச கொட்ட
அவன் நெத்தியில் குங்குமம் சந்தனம்
மல்ட்டிகலர் பட்டை
மயங்கி போகாதிங்க கிட்ட
தளபதி பாட்ஷா நாயகனெல்லாம்
அண்ணே வரலாறுதான்
ஹிரோ அண்ணனோட நிழல்தான்
அதில் டூயட் கனவு பாதி சீன தூக்கினா
பாதி கத நெசந்தான்
அத பாக்குறோம் தினம் தினம் தான்
கள்ளுமுள்ளுகூட பொதருகுள்ள ஓடிக்கிட்டிருந்தாரு
சரக்கு ஓட்டிக்கிட்டிருந்தாரு
அண்ணன் ஓட்டிக்கிட்டிருந்தாரு சரக்கு ஓட்டிக்கிட்டிருந்தாரு
அப்படி ஜில்லா ஊருகுள்ள கடைய தொறந்தாரு
பட்ட கரையில் நொழஞ்சாரு
கல்யாண காதுகுத்து கோயில் திருவிழா எதுவும் நடக்காது
அண்ணன் இல்லன்னா எதுவும் நடக்காது
ஒரு அடிதடி கலாட்டா வெட்டுகுத்து கலவரம் தொடங்காது
அண்ணன் இல்லாமா பொணமே விழுவாது
தரக்கடை, பழக்கடை தட்டுவண்டி சங்கம் அண்ணந்தான் தலைவரு
நம்ம அண்ணந்தான் தலைவரு
தண்டலுக்கும் அண்ணன் தான் டெண்டரு
சாதி சங்கத்தில் தலைவரு
ஆக்கப்பட்ட அனைத்துக்கும் தலைவரு
அட அப்புறந்தாண்டா அண்ணன் புதுசா காரு எறக்குனாரு
வெள்ளை கண்டஸா எறக்குனாரு
காரில் போகையில் கண்ணாடி வழியே
குடிசையே பாத்தாருஅண்ணன் குடிசைய பாத்தாரு
மனக்கணகொன்னு போட்டாரு
பிளாட்டு மனக்கணக் கொன்னு போட்டாரு
ஏ மலையப் பாத்தாரு கிரானையிட்டு விலைய நினைச்சாரு
காவேரி மணலப்பாத்தாரு கரையோர மரத்தையும் பாத்தாரு
அட இது தெரியலையே இத்தனை நாளுன்னு
முடிவொன்னு எடுத்தாரு, வேட்பு மனுவ கொடுத்தாரு
போட்டிக்கி நின்ன கட்சிகாரன்கிட்ட துண்டு வீசினாரு
எலும்பு துண்டு வீசினாரு, ரெண்டு குண்டும் வீசினாரு
அட அப்புறந்தாண்டா கட்சியில் அண்ணன் தளபதி ஆனாரு
ஊரல பாதிய தின்னாரு
சரக்கு ஓட்டுன காலத்தில்
அண்ணன் சாதாரண கேடி
இப்ப இருக்குது பல கோடி
கலக்டரு வாரார் வூடு தேடி
தண்ணி போட நிதிபதி ஜோடி
போலிசு அணைச்சி போட்ட பீடி
இந்த தீடீர் பணக்காரன் அரசியல் ரெளடி வாரான் நம்ம தேடி
தேர்தல் தேதி வருகுது கூடி
தேர்தல் தேதி வருகுது கூடி
....
பாடல்: அண்ணன் வர்றாரு, மகஇக வெளியீடு

நெருங்குதடா இருள் நெருங்குதடா ! நெருங்குவதோ காவி இருளடா !!

Get this widget Share Track details

பாடல்: காவி இருள், மகஇக வெளியீடு

பாடல் ஒலிப் பேழைகள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

இரா. சீனிவாசன்,

No 18, முல்லை நகர் வணிக வளாகம்,

இரண்டாவது நிழற்சாலை,

அசோக் நகர்,

சென்னை - 83

தொலைபேசி: 23718706

Related:

சூறையாடலுக்குச் சேது சமுத்திரத் திட்டம்!அரசியல் வாவணிக்கு இராமன் பாலம்!

கண்ணை மறைக்கும் காவிக் குடுமி - இந்துவும், இந்து தேசியமும்!

ஏழையின் உயிரைப் பறித்த கல்விக் கடன்

தனது மகன் சுரேஷின் பொறியியல் படிப்பிற்கான கட்டணத்தைக் கட்ட முடியாமல் போனதால், பெரம்பலூர் மாவட்டம் வளவெட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் கடந்த மாதம் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டு விட்டார். தனது மகனின் படிப்புச் செலவிற்காக ஏற்கெனவே ஒரு இலட்ச ரூபாய் வரையில் வெளியே கடன் வாங்கிவிட்ட பன்னீர் செல்வம், இந்த ஆண்டிற்கான கட்டணத்தைக் கட்டுவதற்கு அரசு வங்கிகள் தரும் கல்விக் கடனை நம்பியிருந்தார். கார் வாங்கவும், ஆடம்பரப் பொருட்கள் வாங்கவும் ஆளைத் தேடிப் பிடித்து கடன் தரும் வங்கிகள், சிறு காய்கறி வியாபாரியான பன்னீர் செல்வத்தை அலைக்கழித்து, அவமானப்படுத்தி வெறும் கையாகத் திருப்பி அனுப்பி விட்டன.

ஓட்டுக் கட்சிகள், இது அதிகாரிகளின் தவறு எனக் குற்றம் சுமத்துகின்றன. வங்கி அதிகாரிகளோ, கடன் விதிமுறைகளைக் காட்டி நழுவிக் கொள்கிறார்கள். இந்த மழுப்பல்களையெல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், காசில்லாதவன் உயர்கல்வி பெற முடியாது என்ற உண்மை நமது முகத்தில் அறைகிறது. உயர்கல்வி வழங்க வேண்டிய பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்ட அரசு, அதை மூடி மறைப்பதற்காகக் கல்விக் கடன் என்ற கவர்ச்சி வியாபாரத்தை நடத்துகிறது.

பன்னீர் செல்வத்தின் தற்கொலை, இயலாமையினால் நிகழ்ந்துவிட்ட துயரச் சம்பவம் அல்ல. அது, கல்விக் கொள்ளைக்கு எதிரான ஏழை மக்களின் கலகக் குரல்.

கல்விக் கடன் கேட்டு வங்கி அதிகாரிகள் முன் கைகட்டி நிற்பதைவிட, கல்வி தனியார்மயமாக்கப்பட்டதை எதிர்த்துப் போராடுவதுதான் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி. போராடினால் படிப்பு பாழாகிவிடும் எனச் சிலர் மாணவர்களை அச்சுறுத்தலாம். ஆனால், கல்வி தனியார்மயமாவதை எதிர்த்து முழுவீச்சோடு போராடாமல் இருப்பதால்தான், கல்வி எட்டாக் கனியாக மாறி வருகிறது என்பதை வாழ்க்கை அனுபவம் உங்களுக்கு உணர்த்தவில்லையா?

Tuesday, September 18, 2007

'வளர்ச்சி"யின் சீனா அவலத்தில் தொழிலாளர்கள்

உடலெங்கும் காயங்கள்; சீழ்பிடித்து புரையோடிவிட்ட தீப்புண்கள், அழுக்கடைந்து கிழிந்து தொங்கும் ஆடைகள், துயரத்தை நெஞ்சிலே தாங்கி உருக்குலைந்து நிற்கும் தொழிலாளர்கள்... சீனாவின் செங்கற்சூளைகள்நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து அண்மையில் மீட்கப்பட்டுள்ள இக்கொத்தடிமைகளைக் கண்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. ஒருவரல்ல, இருவரல்ல; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கொத்தடிமைக் கொடூரத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுள் பாதிக்கும் மேற்பட்டோர் சிறுவர்கள்; மற்றவர்கள் கிராமப்புற விவசாயிகள்.

ஒரு நாளைக்கு 16 முதல் 18 மணிநேர ஓய்வில்லாத வேலை; சோர்ந்து உட்கார்ந்தால் கங்காணிகளின் சவுக்கடி; வேலை செய்ய மறுத்தால் சம்மட்டி அடி அல்லது பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் சூடு போடப்படும். அங்கிருந்து யாரும் தப்பச் செல்ல முடியாதபடி வேட்டை நாய்களும் துப்பாக்கி ஏந்திய கங்காணிகளும் காவலுக்கு நிற்பர். வெற்றுக் கால்களுடன் பாதுகாப்புச் சாதனங்கள் ஏதுமின்றி வேலை செய்யும் இக்கொத்தடிமைகளுக்கு ஏற்பட்ட விபத்துகள் ஏராளம். ஆனாலும் எந்த மருத்துவ சிகிச்சையும் கிடையாது. படுகாயமடைந்தோ, நோய்வாய்ப்பட்டோ ஒரு தொழிலாளி மரணமடைந்தால், அவர் அங்கேயே புதைக்கப்படுவார். சீனாவின் ஷான்சி, ஹோனான் மாநிலங்களிலுள்ள செங்கற் சூளைகளிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் அளித்த சாட்சியங்களைக் கண்டு அந்நாட்டு மக்கள் விக்கித்து நிற்கிறார்கள்.

சீனாவின் போலி கம்யூனிச ஆட்சியாளர்கள், சோசலிச விவசாயக் கூட்டுப் பண்ணைகளைத் தகர்த்து தனியாருக்கு நிலத்தைச் சொந்தமாக்கி, முதலாளித்துவத்தை நிலைநாட்டியதைத் தொடர்ந்து, இலட்சக்கணக்கான விவசாயிகள் வேலையிழந்து வாழ்விழந்து நிற்கின்றனர். நகரங்களுக்கு நாடோடிகளாக ஓடி, அங்கும் பிழைக்க வழியின்றி செங்கற் சூளைகளில் கொத்தடிமைகளாகி உழல்கின்றனர்.

இக்கொத்தடிமைத் தொழிலில் கொழுத்த ஆதாயம் கிடைப்பதால், சமூக விரோத கும்பல்களால் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டு செங்கற் சூளைகளில் கொத்தடிமைகளாக்கப்பட்டுள்ளனர். தமது அன்புக் குழந்தைகளைக் காணவில்லை என்று துடிக்கும் பலநூறு பெற்றோர்களின் கண்ணீர் கதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு பத்திரிகைகளும் மனித உரிமை அமைப்புகளும் குற்றம் சாட்டிய பிறகு, அதிகார வர்க்கமும் போலீசும் வேறுவழியின்றி நடவடிக்கைகளை மேற்கொண்டபோதுதான், இக்கொத்தடிமைக் கூடாரங்கள் பற்றிய உண்மைகள் வெளிவந்துள்ளன.

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாடெங்கும் இத்தகைய கொத்தடிமைக் கூடாரங்கள் அதிகார வர்க்கம்போலீசின் ஆதரவோடு நடந்து வந்துள்ளன என்றும், உள்ளூர் போலி கம்யூனிஸ்டு தலைவர்களின் பினாமிகளே இவற்றை நடத்தி வந்துள்ளனர் என்றும் பத்திரிகைகள் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தி வருகின்றன. பெய்ஜிங்கிலுள்ள சீன மக்கள் பல்கலைக் கழக சமூகவியலாளரான சௌ ஷியோ ஜெங், ""சீனாவில் ஏறத்தாழ 2 கோடி பேர் கொத்தடிமைகளாக உள்ளனர்; அமைப்பு ரீதியில் திரண்டுள்ள புதுப்பணக்கார குற்றக் கும்பல்களே நாட்டை வழிநடத்துகின்றன'' என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார். சீனாவின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள், நாட்டில் கொத்தடிமைக் கொடூரங்கள் நீடிப்பதை வேறுவழியின்றி ஒப்புக்கொண்டு, இவற்றுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஆனால், இது வெறும் காகித அறிவிப்பாகவே முடிந்து போய்விட்டது. கொத்தடிமைக் கூடாரங்கனை நடத்தி வந்த புதுப்பணக்கார குற்றக் கும்பல்களில் ஒரு சிலரைப் போலீசார் கைது செய்த போதிலும், அவர்கள் அனைவரும் விரைவிலேயே விடுதலையாகி விட்டனர். அவர்கள் மீது பெயரளவுக்குக்கூட வழக்குகள் போடப்படவில்லை. காரணம், இக்குற்றக் கும்பல்களின் கூட்டாளிகளான போலி கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தில் இருப்பதுதான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, சீன போலி கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் அங்கம் வகித்த முக்கிய புள்ளியான லீ பெங்கும் அவரது குடும்பமும் வீட்டுமனை ஊழல் மற்றும் நிதி மோசடிகளில் கோடி கோடியாய் சுருட்டிய விவகாரம் நாடெங்கும் நாறியது. அந்த விவகாரம் அடங்குவதற்குள் சியாமென் துறைமுக நகரைச் சேர்ந்த அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஊழல்கடத்தல் மோசடிகளில் சிக்கினார். அதைத் தொடர்ந்து பல போலி கம்யூனிஸ்டு அமைச்சர்களும் அதிகாரிகளும் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட விவகாரம் சந்தி சிரித்தது. சீன போலி கம்யூனிஸ்டு அரசாங்கம் ஊழல் அதிகாரிகள் சிலரைக் கைது செய்து சிறையிலடைத்ததோடு, சிலருக்குத் தூக்குத் தண்டனை விதித்து, இத்தகைய ஊழல்மோசடிகளை ஒடுக்க முயற்சித்தது.ஆனால், அதற்குப் பின்னரும் ஷாங்காய் நகர போலி கம்யூனிஸ்டுத் தலைவர் சென் லியாங் யூ, காண்டன் நகர செயலாளர், வூஹான் மாநிலச் செயலர் எனப் பலரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட விவகாரம் அம்பலமானது. இப்போது, குற்றக் கும்பல்களோடு கூட்டுச் சேர்ந்து போலி கம்யூனிஸ்டு பிரமுகர்கள் கொத்தடிமைக் கூடாரங்களை நடத்தி வந்த விவகாரம் வெளிவந்துள்ளது.

செங்கற் சூளைகள், சுரங்கங்கள் மட்டுமல்ல; நகரங்களில் கட்டுமானத் தொழில், ஆயத்த ஆடை தயாரிப் புக் கூடங்கள், ஏற்றுமதிக்கான விளையாட்டு பொம்மை தயாரிப்பு, நெசவு மற் றும் காலணி தயாரிப்பு நிலையங்களிலும் அறிவிக்கப்படாத கொத்தடிமைத்தனம் கொடிகட்டிப் பறக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்று கூறி, சீன ஆட்சியாளர்கள் இத்தகைய தொழிற்கூடங்களில் தொழிலாளர்கள் சங்கமாகத் திரளவும் தடை விதித்துள்ளனர். இதைச் சாதகமாக்கிக் கொண்டு சீனா வின் முதலாளிகள், தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொண்டு சம்ப ளம் கூட கொடுக்காமல் ஏய்க்கின்றனர்.

பெய்ஜிங் நகரில் ஓராண்டு காலமாக சம்பளம் தராமல் ஏய்த்த அன்னிய கட்டுமான நிறுவன முதலாளிகளின் பங்களாக்களை முற்றுகையிட்டு, தடுப்பரண்களை எழுப்பி 2003ஆம் ஆண்டில் சீனத் தொழிலாளிகள் போராடினர். ஷென்சென் நகரில் சம்பளம் தராமல் ஏய்த்த முதலாளிகளின் கார்களை சாலைப் பணியாளர்கள் அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதே போல தெற்கே ஃபூஷன் நகரில் ஜவுளி ஆலைத் தொழிலாளர்களும், வட கிழக்கே டா குயிங் எண்ணெய் துரப்பணத் தொழிலாளர்களும், ஜியாங்ஷி மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும் சம்பள பாக்கிக்காகவும் பென்ஷன் தொகை முடக்கப்பட்டதை எதிர்த்தும் போராடினர்.

முறையாக சம்பளப் பாக்கியைக் கொடுக்காவிடில் உரிமத்தை ரத்து செய்து விடுவோம் என்று சீன ஆட்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்த போதிலும் எந்த முதலாளியும் அதைப் பொருட்படுத்துவதில்லை. முதலாளிகளின் சட்டைப் பையிலுள்ள சீன அரசாங்கம் அதற்கு மேல் ஒன்றும் செய்யவும் முடியவில்லை. தீவிரமாகிவிட்ட வேலையின்மையைச் சாதகமாக்கிக் கொண்டு தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கி முதலாளிகள் சுரண்டுவதும், சம்பளம் கூடத் தராமல் ஏய்ப்பதும் நாடெங்கும் தீவிரமாகிவிட்டது. சீனாவின் நகர்ப்புற வேலையின்மை 7%க்கும் மேலாக அதிகரித்துக் கொண்டே போகிறது. இது 9%க்கு எட்டிவிட்டால் சமூகக் கொந்தளிப்புகள் தீவிரமாகிவிடும் என்று சீனாவின் முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளே எச்சரிக்கின்றனர்.

இருப்பினும், சீனாவின் யதார்த்த நிலைமைகளை மூடிமறைத்துவிட்டு, சீனா பிரம்மாண்டமான வளர்ச்சியை எட்டிவிட்டதாகவும், வல்லரசாகப் பரிணமித்து வருவதாகவும் ஏகாதிபத்தியவாதிகள் உச்சி முகர்ந்து பாராட்டுகின்றனர். உலக வர்த்தகக் கழகத்தில் உறுப்பு நாடாகச் சேர்ந்து, அன்னிய மூலதனத்தைத் தாராளமாக அனுமதித்து, பொருளாதார வளர்ச்சியில் புதிய சாதனை படைத்துள்ளதாக ஏற்றிப் போற்றுகின்றனர். வரைமுறையற்ற சுரண்டல்சூறையாடலுக்கு கதவை அகலத் திறந்து விட்டுள்ள ""சீனாவைப் பார்த்து நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள்'' என்று இங்குள்ள போலி கம்யூனிசத் துரோகிகளுக்கு உபதேசிக்கின்றனர். சீன போலி கம்யூனிச ஆட்சியாளர்களின் ஏகாதிபத்திய தனியார் முதலாளித்துவ சேவையை, சோசலிசத்தை நோக்கிய வளர்ச்சியாகச் சித்தரித்து இங்குள்ள இடதுவலது போலி கம்யூனிஸ்டுகள் துதிபாடுகின்றனர்.

ஆனால், சோசலிசம் பூத்துக் குலுங்கிய சீனாவோ, இன்று கொத்தடிமைத்தனத்திலும் கொடூர சுரண்டலிலும் சிக்கிக் குமுறிக் கொண்டிருக்கிறது. சீன மக்களோ, புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியின் தலை மையை எதிர்நோக்கி மீண்டும் ஒரு சோசலிசப் புரட்சிக்காகக் காத்திருக்கிறார்கள்.
· குமார்

Saturday, September 15, 2007

பாலஸ்தீனப் பிளவும் அமெரிக்கச் சதியும்

பாலஸ்தீன மக்கள் நடத்திவரும் சுயநிர்ணய உரிமைப் போர், மேலும் ஒரு பின்னடைவுக்கு உள்ளாகியிருக்கிறது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (பி.எல்.ஓ.) ஓர் அங்கமான ஃபதா இயக்கத்திற்கும், முசுலீம் அடிப்படைவாத அமைப்பான ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே கடந்த ஓராண்டு காலமாக நடந்து வந்த பதவி அதிகாரச் சண்டை, உள்நாட்டுப் போராக மாறக் கூடிய சூழல் உருவாகி இருப்பதுதான் இப்பின்னடைவுக்கான காரணம்.

பத்தாண்டுகளுக்கு முன்பாக, ஆஸ்லோ ஒப்பந்தம் என்ற பெயரில் ஓர் "அமைதி' ஒப்பந்தத்தை, அமெரிக்க ஏகாதிபத்தியம் பாலஸ்தீன மக்கள் மீது திணித்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், தற்பொழுது பாலஸ்தீன பகுதிகளாக ஏற்றுக் கொள்ளப்படும் மேற்குக் கரையையும், காசா முனையையும் நிர்வகிப்பதற்காக, பாலஸ்தீன ஆணையம் என்ற பெயரில் ஓர் அதிகார நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டது.

சுதந்திர பாலஸ்தீன அரசு உருவாகப் போவதன் தொடக்கப்புள்ளி என வருணிக்கப்பட்ட இந்த பாலஸ்தீன ஆணையம், நடைமுறையில், அமெரிக்கஇசுரேல் ஆக்கிரமிப்பாளர்களின் ஏஜெண்டாகத்தான் செயல்பட்டு வருகிறது. ஒரு முனிசிபாலிடிக்கு இருக்க வேண்டிய சுய அதிகாரம் கூட இல்லாத இந்த பாலஸ்தீன ஆணையத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்காக ஃபதாவிற்கும், ஹமாஸுக்கும் இடையே நடந்துவரும் இந்த நாய்ச் சண்டையின் காரணமாக, இன்று பாலஸ்தீனப் பிராந்தியம் இரண்டாகப் பிளவுபட்டுப் போய்விட்டது.

மேற்குக் கரையை ஃபதா இயக்கமும், காசாமுனையை ஹமாஸ் இயக்கமும் தங்களுக்குள் பாகப்பிரிவினை செய்து கொண்டதன் மூலம், ஒரு உள்நாட்டுப் போரைச் சந்திக்க வேண்டிய அபாயத்தில் பாலஸ்தீன மக்களைத் தள்ளிவிட்டுள்ளன. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி நடைமுறைக்கு வந்த பிறகுதான், பாலஸ்தீனத்தில் அமெரிக்க இசுரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக இரண்டாவது இண்டிஃபதா (சுதந்திரப் போர்) நடந்தது. அதனால், இந்தப் பிளவை, ஏகாதிபத்தியவாதிகள் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்கின்றனர்.

2005ஆம் ஆண்டு இறுதியில், பாலஸ்தீன ஆணையத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற்ற பொழுதே, இந்தப் பிளவிற்கான விதை தூவப்பட்டது. அத்தேர்தலில் அமெரிக்க இசுரேல் கூட்டணி ஃபதா இயக்கத்தையும், அதன் தலைவரான முகம்மது அப்பாஸையும் ஆதரித்தது. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, அத்தேர்தலில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்றது. பாலஸ்தீன ஆணையத்தின் அதிபராக முகம்மது அப்பாஸும், ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த இஸ்மாயில் ஹனியா பிரதமராகவும் இருக்கும் எதிரும், புதிருமான நிலையை 2005 தேர்தல் உருவாக்கியது. பாலஸ்தீன ஆணையத்தின் பெரும்பான்மை ஹமாஸிடம் இருந்தபொழுதும், அதிகார வர்க்கப் பதவிகளில் ஃபதா இயக்கத்தினர் நிரம்பியிருந்தனர்.

""ஹமாஸின் தேர்தல் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது'' என அறிவித்த அமெரிக்கா, தனது தலையாட்டி பொம்மையான அதிபர் முகம்மது அப்பாஸ் மூலம், ஹமாஸ் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட முயன்றது. மேலும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு, பாலஸ்தீனத்துக்குத் தர வேண்டிய நிதி உதவிகளைத் தராமல் முடக்கி வைத்தது. அமெரிக்காவைத் தொடர்ந்து இசுரேலும், பாலஸ்தீன ஆணையத்தின் சார்பாக வசூலித்த வரிப் பணத்தைத் தராமல் முடக்கியது.

இப்பொருளாதார நெருக்கடியின் காரணமாக, ""பாலஸ்தீன மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் கூட கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏறத்தாழ 1,60,000 அரசு ஊழியர்களுக்குப் பல மாதங்களுக்குச் சம்பளம் தர முடியாமல் போனது. மேற்குக் கரையிலும், காசா முனையிலும் 12 இலட்சம் பாலஸ்தீன மக்கள் பட்டினிச் சாவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டனர்'' என ஐ.நா. மன்றமே ஒப்புக் கொள்ளும் அளவிற்கு, பாலஸ்தீனத்தில் அன்றாட வாழ்க்கை மோசமடைந்தது. இன்னொருபுறமோ, இப்பொருளாதார நெருக்கடி முற்ற, முற்ற ஃபதாவிற்கும் ஹமாஸுக்கும் இடையேயான மோதலும் அதிகரித்தது.

ஹமாஸோடு நேரடியாக மோதி, அவ்வமைப்பை நிர்மூலமாக்கும் திட்டத்தோடு ஃபதா இயக்கத்தைச் சேர்ந்த 500 பேருக்கு ஆயுதப் பயிற்சியும், உதவியும் அளித்து, எகிப்தின் வழியாக காசா முனைக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது; அதிபர் அப்பாஸின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சிறப்பு அதிரடிப் படைக்கும் அமெரிக்காவால் 160 கோடி ரூபாய் அளவிற்கு ஆயுத உதவிகள் வழங்கப்பட்டு, இந்தச் சகோதரச் சண்டை கொம்பு சீவிவிடப்பட்டது.
இசுரேலோ, தனது இராணுவச் சிப்பாய் ஒருவரை ஹமாஸ் இயக்கம் கடத்தி விட்டது எனக் குற்றஞ்சுமத்தி, ஹமாஸ் அமைப்பின் தலைமையிடம் இருக்கும் காசா முனைப் பகுதி மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஹமாஸ் இயக்கத்தின் தலைவரும் பாலஸ்தீன ஆணையத்தின் பிரதமருமான இஸ்மாயில் ஹனியா உள்ளிட்டு, ஹமாஸ் இயக்கத்தின் அமைச்சர்களையும், ஆணைய உறுப்பினர்களையும் குறிவைத்துத் தாக்கிக் கொல்லப் போவதாக அறிவித்ததோடு, அவர்களின் மீது ""ராக்கெட்'' தாக்குதல்களையும் நடத்தியது.

இப்பொருளாதார நெருக்கடியும், இராணுவ முற்றுகையும் பாலஸ்தீனத்தில் ஏற்படுத்திய விளைவுகளால், தங்கள் நாடுகளும் பாதிக்கப்படுமோ எனப் பயந்து போன சௌதி அரேபியா உள்ளிட்ட சில அரபு நாடுகள் ஃபதாவிற்கும், ஹமாஸிற்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த, ""மெக்கா ஒப்பந்தத்தை'' உருவாக்கின. இதன்படி, சில முக்கிய அமைச்சர் பதவிகளை, ஹமாஸ் இயக்கம் ஃபதாவிற்கு விட்டுக் கொடுப்பது என்றும், அதற்கு ஈடாக, ஹமாஸின் ஆயுதப் படையைப் பாலஸ்தீன ஆணையத்தின் படையோடு இணைத்துக் கொள்வது என்றும் இதன் அடிப்படையில் தேசிய ஐக்கிய அரசை அமைப்பது என்றும் முடிவானது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா விரும்பாததால், அதிபர் முகம்மது அப்பாஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த மறுத்துவிட்டார். மேலும், பாலஸ்தீன ஆணையத்திற்குப் புதிதாகத் தேர்தல் நடத்தப் போவதாகவும் அறிவித்தார். இதனால், பதவிஅதிகாரத்துக்காக நடந்த இந்தச் சண்டை முற்றி, மேற்குக் கரையை ஃபதா இயக்கமும், காசா முனையை ஹமாஸ் இயக்கமும் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டுவிட்டன.

ஃபதாவிற்கும், ஹமாஸுக்கும் இடையே மோதல் நடந்து வந்தபொழுது, ""இந்த வன்முறையை நாங்கள் வரவேற்கிறோம்'' என வெளிப்படையாக அறிவித்த அமெரிக்கா, இப்பொழுது, ""நாம் இரண்டுவிதமான பாலஸ்தீனத்தை எதிர்கொள்கிறோம்; ஃபதாவின் மேற்குக் கரைக்கு தேவையான உதவிகளைச் செய்வது; ஹமாஸின் காசா முனையைக் கசக்கிப் பிழிவது'' என்ற திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாகக் கொக்கரிக்கிறது.

""அமைதி'' ""சமாதானம்'' என்ற பெயரில் தனது அமெரிக்க அடிவருடித்தனத்தை மூடி மறைத்துவந்த ஃபதா இயக்கம், இப்பொழுது அம்மணமாக நிற்கிறது. இந்தப் பிளவுக்குப் பிறகு, அதிபர் அப்பாஸ், ஹமாஸ் அரசைக் கலைத்துவிட்டதோடு, அமெரிக்காவின் விருப்பப்படி உலக வங்கியின் முன்னாள் ஊழியரான சலாம் ஃபய்யத்தை பாலஸ்தீன ஆணையத்தின் பிரதமராகவும்; அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வால் பயிற்சி அளிக்கப்பட்ட முகம்மது தஹ்லானைப் பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமித்திருக்கிறார்.

""இது, காசா முனையின் இரண்டாவது விடுதலை'' என ஹமாஸ் தனது வெற்றியைப் பீற்றிக் கொண்டாலும், இந்த இரண்டாவது விடுதலையைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவிற்கு அதனிடம் அரசியல் திட்டமோ, சமூக ஆதரவோ கிடையாது. தனது வெளியுலகத் தொடர்புக்கு மட்டுமல்ல, தண்ணீர், மின்சாரம், எரிசக்தி, வேலை வாய்ப்பு, வர்த்தகம், மருத்துவ வசதிகள் போன்ற அனைத்து அத்தியாவசியத் தேவைகளுக்கும் இசுரேலின் தயவை நாடியே காசாமுனை இருக்கிறது.

ஏறத்தாழ 14 இலட்சம் பாலஸ்தீனர்கள் தஞ்சம் அடைந்திருக்கும் காசா முனை மிகப் பெரிய அகதிகள் முகமாகத்தான் இருந்து வருகிறது. அங்கு வசிப்போரில் 80 சதவீதத்திற்கும் மேலான மக்கள் வேலை வாய்ப்பு அற்றவர்களாக, வறுமையோடு உழன்று வருகின்றனர். இவர்களை மேலும், மேலும் கசக்கிப் பிழிவதன் மூலம் ஹமாஸை அடக்கிவிட முடியும் என்பதுதான் ஏகாதிபத்தியவாதிகளின் திட்டம்.

மேலும், ஈராக் ஆக்கிரமிப்புக்குப் பிறகு மேற்காசிய நாடுகளைத் தனது மேலாதிக்க நோக்கங்களுக்கு ஏற்ப மறுவார்ப்பு செய்யும் திட்டத்தோடு அமெரிக்கா இயங்கி வருகிறது. இப்பொழுது, அதிகாரப் போட்டியால் பாலஸ்தீனத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு, அமெரிக்காவைப் பொறுத்தவரை, பழம் நழுவி பாலில் விழுந்த கதையைப் போன்றதாகும். ஈராக்கை, சன்னி, ஷியா, குர்து என மூன்று பகுதிகளாகக் கூறு போடும் அமெரிக்காவின் சதி, அங்கு முழுமையாக வெற்றி பெறாவிட்டாலும், பாலஸ்தீனத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்க இசுரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகத் தாக்குதல்களை ஹமாஸ் இயக்கம் நடத்தி வந்தாலும், அதனின் நடைமுறை நோக்கம், தனது ஆயுதப் படைகளை, பாலஸ்தீன ஆணையத்தின் படைகளோடு இணைத்து ""அதிகாரத்தைப்'' பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்பது தவிர வேறில்லை. இதனால்தான், ஆஸ்லோ ஒப்பந்தத்தைப் புறக்கணிப்பதாக கூறிவந்த ஹமாஸ், பின்னர் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாலஸ்தீன ஆணையம், பொதுத் தேர்தல் ஆகியவற்றில் பங்கு பெறும் சமரச நிலையை மேற்கொண்டது.

மேலும், ஏகாதிபத்திய அடிவருடித்தனம், ஊழல், கோஷ்டி சண்டையால் ஃபதா இயக்கம் சீரழிந்து போய்விட்டதால்தான், ஹமாஸ் இயக்கத்திற்கு பாலஸ்தீன மக்கள் வாக்களித்தார்களேயன்றி, அதனுடைய மத அடிப்படைவாத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ஹமாஸுக்கு வெற்றியை அளிக்கவில்லை. எனவே, காசா முனையில் ஹமாஸ் அடைந்திருக்கும் ""வெற்றியை'' நீண்ட நாட்களுக்குத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. ஃபதா இயக்கத்தோடு சமரசம் செய்து கொள்வது; இல்லையென்றால், அமெரிக்க இசுரேல் கூட்டணியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பின்வாங்கிச் செல்வது என்பதுதான் இந்த ""வெற்றி''யின் எதிர்கால முடிவாக இருக்கும்.
· செல்வம்

Wednesday, September 12, 2007

அமெரிக்க அணு ஆயுத போர்க்கப்பல் ""நிமிட்ஸ்''ஐ விரட்டியடிப்போம்!

நாடு மீண்டும் காலனியாக்கப்படும் நிலையில், அமெரிக்க உலக மேலாதிக்கப் போர்த் தேரில் இந்தியாவைப் பிணைக்கும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக, அமெரிக்க அணு ஆயுதப் போர்க்கப்பலான நிமிட்ஸ், கடந்த ஜூலை முதல் வாரத்தில் சென்னைத் துறைமுகத்துக்கு வந்ததை எதிர்த்தும், இக்கப்பலை இந்திய கடற்பகுதியில் உலாவ அனுமதிக்கும் துரோக ஆட்சியாளர்களை எதிர்த்தும் ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

ஏற்கெனவே அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்க அடிமைச் சாசனத்தில் கையெழுத்திட்டுள்ள இந்திய அரசு, இப்போது ""கூட்டுச் சேரா இயக்கத்திலிருந்து விலகி அமெரிக்காவுடன் நெருங்கி வரவேண்டும்'' என்று அமெரிக்க அரசுச் செயலர் கண்டலீசா ரைஸ் விடுத்த எச்சரிக்கைக்கு விசுவாசமாகப் பணிந்து இப்போர்க்கப்பலை அனுமதித்துள்ளது. அண்மை ஆண்டுகளில் இதேபோல் 5 அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்கு வந்து இந்தியக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகள் நடத்தியுள்ளன.

இந்த உண்மைகளுடன், அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடி வரும் ஈராக் மக்களைக் கொன்றொழித்த இப்போர்க் கப்பலை அனுமதிப்பதென்பது நாட்டுக்கே அவமானம் என்று விளக்கி, கடந்த ஜூலை 2ஆம் நாளன்று சென்னை மெமோரியல் ஹால் அருகே காலை 10 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமையேற்ற தோழர் சுப.தங்கராசு அறை கூவினார்.

ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை நெஞ்சிலேந்தி விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், திரளாக வந்த உழைக்கும் மக்களிடம் சிறப்பானதொரு வரவேற்பைப் பெற்றது.பு.ஜ. செய்தியாளர்கள்

Monday, September 10, 2007

கட்டபொம்மனைப் பாடாத பாரதி!

பாரதியின் பார்ப்பனக் கண்ணோட்டம் பற்றி நாம் விமரிசிக்கும் போதெல்லாம், ""பாரதியை அவரது வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் புரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்வது வறட்டுவாதம், பார்ப்பன துவேஷம்'' என்றும் கூறி விமரிசிப்போர் மீதே முத்திரை குத்துவார்கள் பாரதி ஆய்வாளர்கள்.

சரி. வரலாற்றுப் பின்புலத்தில் வைத்தே பரிசீலிப்போம். பாரதி, சத்ரபதி சிவாஜியைப் பாடியிருக் கிறார். கோகலே, தாதாபாய் நவ்ரோஜி, திலகர், லாலா லஜபதி ராய் போன்ற வட இந்தியத் தலைவர்களைப் பற்றிப் பாடியிருக்கிறார். இத்தாலி, பெல்ஜியம், ரசியாவைப் பற்றியெல்லாம் பாடியிருக்கிறார். காக்கை, குயில், கிளி, மரம் மட்டை அனைத்தையும் பாடியிருக்கிறார்.

ஆனால் அவருடைய பக்கத்து ஊரான பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்த கட்டபொம்மனைப் பற்றி ஒரு வரி கூடப் பாடியதில்லை. சிவகங்கைச் சீமையின் சின்ன மருதுவைப் பற்றியும் பாடியதில்லை. பாரதியைப் போன்ற இலக்கிய அறிவோ, உலக ஞானமோ இல்லாத அந்தப் பகுதி மக்கள் கட்டபொம்மனைப் பற்றியும் மருதுவைப் பற்றியும் ஏராளமான கதைப்பாடல்களையும் நாடகங் களையும் உருவாக்கி நிகழ்த்தியும் வந்திருக்கிறார்கள். ஆனால் பாரதி மட்டும் எழுதாதது ஏன்?

ஒரு வேளை இதையும் நாம் பாரதியின் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும் போலும்! ""எட்டப்பனின் ஊரான எட்டயபுரத்தில் பிறந்து, எட்டப்பனின் வாரிசான "மன்னனுக்கு'த் தோழனாக இருந்து அவனை அண்டிப் பிழைத்த ஒரு கவிஞன் கட்டபொம் மனைப் பற்றி எப்படி எழுத முடியும்?'' என்று கூட மேற்படி ஆய்வாளர்கள் நம்மிடம் கேள்வி எழுப்பக்கூடும்.

""நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி'', ""அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்'' ... அடேயப்பா! ஈட்டி போல் பாயும் சொற்கள்! பக்கத்து ஊரில் தூக்கில் தொங்கிய விடுதலை வீரனைப் பற்றி எழுத முடியாத தன்னுடைய "நேர்மைத் திறத்தைப் பற்றி' பாரதி ஏதாவது சொல்லியிருக் கிறாரா? அல்லது நெல்லை மாவட்டத் தைச் சேர்ந்த பாரதி பஜனை மண்டலி யினர் தம்முடைய ஆய்வுகளில் இதைப்பற்றி ஏதாவது எழுதியிருக் கிறார்களா?

வே.மாணிக்கம் எழுதிய "தானாபதிப் பிள்ளை வரலாறு' என்ற நூலுக்கான முன்னுரையில் கீழ்க்கண்ட வாறு குறிப்படுகிறார் ஆய்வாளர், ஆ.இரா.வேங்கடாசலபதி:

""கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டயபுரத்தைச் சேர்ந்த பாரதி, கட்டபொம்மனைப் பற்றியோ, பாஞ்சாலங்குறிச்சி பற்றியோ தம் எழுத்துக்களில் எங்கும் சுட்டாதது குறிப்பிடத்தகுந்தது. புதுச்சேரியி லிருந்து மீண்டு, மிகுந்த நலிவுற்று, பொருள் ஆதரவு வேண்டி எட்டயபுரம் மன்னருக்கு 1919இல் ஓலைத்தூக்கும் சீட்டுக் கவியும் எழுதி ஏமாற்றமுற்ற நிலையில், ஸ்வாமி தீட்சிதர் என்பவர் எட்டயபுரம் ஜமீன் பற்றி எழுதிய "வம்சமணி தீபிகை' (1878) நூலைச் செம்மைப்படுத்தித் தர பாரதி முன் வந்தார். எட்டயபுரம் மன்னர் இந்த வேண்டுகோளையும் ஏற்றுக் கொள் ளாத நிலையில், கட்டபொம்மனைப் பற்றி எதிர்மறையாக எழுதும் தீயூழைப் பாரதி தவிர்க்க முடிந்ததே என்று நாம் ஆறுதல் அடையலாம்.''

அதாவது, எட்டயபுரம் மன்னர் மட்டும் காசு கொடுத்திருந்தால் கட்டபொம்மனை அவதூறு செய்து எழுதவும் பாரதி தயங்கியிருக்க மாட்டார் என்கிறார் வேங்கடாசலபதி. அத்தகைய தீயூழிலிருந்து பாரதியைக் காப்பாற்றிய அந்த எட்டப்பன் பரம்பரைக்கே பெரிதும் நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள் பாரதி பக்தர்கள்! ·

அபு கிரைப் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் இரத்தச் சாட்சி !

Sunday, September 9, 2007

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்: நீர்க்குமிழி பெருத்தால்..

""எந்தவிதத் தொழிலாளர் சட்டங்களுக்கும் உட்படாத, அரசின் வரிகள் எதுவும் பாதிக்காத, ஒரு தனி சாம்ராஜ்யமாக இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைவது வருங்காலத்திற்கு நல்லதுதானா என்பதே விவாதத்துக்குரிய விஷயமாகத் தெரிகிறது.'' (தினமணி, 26.6.07)

""சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் ஈர்க்கப்படும் தொழில் நிறுவனங்களுள், பெரும்பாலானவை மிகப் பெரும் முதலீட்டில் தொடங்கப்படுகின்றன. எந்தவிதமான தொழில்நுட்பப் பயிற்சியும் பெறாத தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு, இது ஒன்றுதான் தக்க வழியா என்பது தெளிவாகத் தெரியவில்லை.'' (தி ஹிந்து, 24.5.07, பக்: 23)

மேலே காணப்படும் இரண்டு கருத்துக்களும், சிறப்புப் பொருளாதார மண்டலத்தை எதிர்ப்பவர்களால் கூறப்பட்டவையல்ல. முன்னது, ""தினமணி'' நாளிதழின் தலையங்கக் கருத்து. பின்னது, இந்தியாவின் வர்த்தகக் கொள்கை மீளாய்வு தொடர்பாக நடந்த கூட்டத்தில், உலக வர்த்தகக் கழகம் முன்வைத்த அறிக்கையில் கூறப்பட்ட விமர்சனம்.

""எந்தவிதமான அதிகார வர்க்கத் தடைகளுமின்றி, அந்நிய மூலதனத்தையும், அதி உயர் தொழில் நுட்பத்தையும் இறக்குமதி செய்வது; ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், அந்நியச் செலாவணி ஈட்டுவதை உயர்த்துவது; வேலை வாய்ப்பைப் பெருக்குவது'' ஆகிய நோக்கங்களுக்காகத்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்குவதாக இந்திய அரசு கூறி வருகிறது. ஆனால், சிறப்புப் பொருளாதார மண்டலங்களால், இந்தப் பலன்கள் கிடைக்கும் என்பதை ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவே ஒத்துக் கொள்ளத் தயங்குகின்றன. ""தினமணி''யின் தலையங்கமும், உலக வர்த்தகக் கழகத்தின் அறிக்கையும் இந்தத் தயக்கத்தின் வெளிப்பாடுகள்தான்.

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க 2001ஆம் ஆண்டே 2,400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இம்மண்டலத்தில் அமையும் ஆலைகள் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்; இதனால் அப்பகுதியில் சாதிக் கலவரம் நடப்பது தடுக்கப்படும் என்றெல்லாம் அன்று கதையளந்தார்கள். ஆனால், ஆறாண்டுகளுக்குப் பிறகு பார்த்தால், கையகப்படுத்தப்பட்ட நிலத்தைச் சுற்றி வேலை அமைக்கும் பணிதான் நான்குநேரியில் நடந்து கொண்டிருக்கிறது. ""வேலி அமைத்தவுடன், அங்கு குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கும்; அது முடிந்தபிறகுதான் ஆலைகள் வரும்'' என்று இப்பொழுது புதுக்கதை சொல்கிறார்கள்.

நான்குநேரி திட்டம் இப்படி ஆமை வேகத்தில் நகர, ""இந்த ஆண்டிற்குள் தமிழகத்தில் 9 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் 7,107 கோடி ரூபாய் மூலதனத்தில் அமையும்; இதன் மூலம் 1,76,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்'' என டாம்பீகமாக அறிவித்தது தி.மு.க. அரசு. ஆனால், இத்திட்டங்களுக்காக இதுவரை வெறும் 772.50 கோடி ரூபாய்தான் மூலதனம் போடப்பட்டிருப்பதாக அழுது புலம்பும் ""ஃபிக்கி'' என்ற தரகு முதலாளிகள் சங்கம், தமிழக அரசு இன்னும் முனைப்பாகச் செயல்பட வேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களால், இந்தியாவின் உற்பத்தி சார்ந்த தொழில் வளர்ச்சிக்கு ஏதாவது பயன் கிட்டுமா என்பதும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க அனுமதி கேட்டு வந்துள்ள விண்ணப்பங்களுள் 63 சதவீத விண்ணப்பங்கள் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்கத்தான் அனுமதி கோரியுள்ளன.

இதுவொருபுறமிருக்க, ஏற்கெனவே நடந்து வரும் தொழில்கள், சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு இடம் பெயர்வதை ""வளர்ச்சி'' என்று சொல்ல முடியாது; சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஏற்றுமதிக்காகத் தயாரிக்கப்படும் பண்டங்கள், உள்நாட்டுச் சந்தைக்குள் நுழைந்தால், இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப் பெரும் இழப்பு ஏற்படும் என முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களே அச்சப்படுகின்றனர்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தாராளமயத்தின் தீவிர பக்தரான நிதியமைச்சர் ப.சிதம்பரம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் அடுத்த ஐந்தாண்டுகளில் மைய அரசுக்கு 1,75,000 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் எனக் கூறி, வர்த்தக அமைச்சர் கமல்நாத்தோடு முட்டி மோதிக் கொண்டிருக்கிறார். உலக வர்த்தகக் கழகம் கூட இந்த வரி இழப்பு பற்றிக் கவலைப்படுகிறது.

தனியார்மயம் தாராளமயத்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைக்கப் போகும் பலன்கள் என ஆளும் கும்பல் ஊதிப் பெருக்குவதெல்லாம், அடுத்த நிமிடமே நீர்க்குமிழி போல உடைந்து வருகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலமும் இந்தத் தோல்வியில் இருந்து தப்பப் போவதில்லை.

Wednesday, September 5, 2007

பிள்ளைகள் படிப்புக்கு வாங்கிய கடனைஅடைக்க முடியாத தந்தை தற்கொலை !!


செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2007

சென்னை:மகன் மற்றும் மகள் ஆகியோரின் படிப்புக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாத வேதனையில் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (45). குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை பார்த்து வந்தார்.
..
இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், சீனிவாசன், சரவணன் என்ற மகன்களும், பாரதி என்ற மகளும் உள்ளனர்.பிள்ளைகள் நன்றாகப் படிக்கக் கூடியவர்கள் என்பதால் அவர்களை தனது சக்தியையும் மீறி கடன் வாங்கிப் படிக்க வைத்தார் பழனிவேல்.
..
இப்படி வாங்கிய கடன் மலை போல உயர்ந்தது. இதனால் கடனை அடைக்க முடியாமல் திணறினார் பழனிவேலு. கடன் கொடுத்தவர்கள் அவரை நெருக்க ஆரம்பித்னர்.
..
இதனால் மன வேதனை அடைந்து அதை மறக்க குடிப் பழக்கத்தை நாடினார்.இதனால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போய், வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
..
இந்த நிலையில் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார் பழனிவேலு.பதறிப் போன இரு மகன்களும் தந்தையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
..
இரவில் தூங்கப் ேபாகும் முன் விஷத்தை குடித்துள்ளார் பழனிவேலு.
Related:

Monday, September 3, 2007

"இறந்தவன் நல்லவனல்ல; கொன்றவன் கெட்டவனுமல்ல" நீதி கேட்கிறாள் ஒரு தாய்!

நீதிமன்றங்கள் என்பவை உண்மையில் அநீதிமன்றங்கள்தான் என்று நாம் அரசியல் ரீதியில் பலவாறாக அமபலப்படுத்தி எழுதியிருக்கிறோம். சொந்த வாழ்க்கை அனுபவத்திலிருந்து இந்த உண்மையினை முகத்திலெறியும் ஒரு கடிதத்தை இங்கே வெளியிட்டுள்ளோம்.

இந்தக் கடிதத்தை எழுதியிருப்பவர் ஒரு தாய். இவரது மகன்கள் கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். கொலையுண்டவ்னோ அண்ணன்.

தனது இரண்டு மகன்களும் செய்தது குற்றமல்ல,நியாயமான கொலைதான். அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்திற்கு அந்தத் தாய் அனுப்ப விழையும் முறையீடும், வாசகர்களிடம் நீதி கேட்டு அவர் எழுதிய கடிதமும் வெளியிடப்பட்டுள்ளன.

ஊர் பெயர் விவரங்களையெல்லாம் உள்ளது உள்ளபடியே அவர் எழுதியிருந்த போதிலும் அவற்றை மாற்றியுள்ளோம்;

கிழே க்ளிக் செய்து படிக்கவும்...
.
..
..
..
..
நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அது சட்டப்படி குற்றாமாச்சே" - என்ற வசனத்தை வழக்கறிஞர்கள் வாயிலிருந்தும், போலீசார் வாயிலிருந்தும் நாம் எவ்வளவு முறை கேட்டிருப்போம், நியாயத்துக்குப் புறம்பான ஒரு சட்டம்; அந்தச் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் நீதி; நீதியால் தண்டிக்கப்படும் நியாயம்!

யாருக்கு நீதி வழங்குகிறது இந்தத் தண்டனை யாருக்கு நிவாரணம் வழங்குகிறது இந்தத் தீர்ப்பு எந்த ஒழுங்கை நிலைநாட்டுவதர்காக அந்த இரண்டு பேரும் சிறை வைக்கப்பட்டிருகிறார்கள் இவை நீத்மன்றம் விடை தரமுடியும் கேள்விகள். நீதிவழங்கு நெறியின் முகத்தில் காறி உமிழும் கேள்விகள்.

நீதிமன்றத்தில் பேச தாய்க்கும் உரிமை இல்லை; தாய் மொழிக்கும் உரிமை இல்லை. புரியாத மொழியில் (ஆங்கிலத்தில்) விசாரனை; புரிகின்ற மொழியில் (கை விலங்கு) தண்டனை ! நீதிமன்றத்தில் "தமிழ் வேண்டும்" என்பதும் "நீதி வேண்டும்" என்பதும் இரு வேறு கோரிக்கைகளல்ல என்பதை இதைவிடத் தெளிவாக, இதைவிட மனதைத் தொடும் விதத்தில் வேறேப்படிச் சொல்ல முடியும்.

இந்த சட்டம் மக்கள் விரோதமானது என்பது மட்டுமல்ல, நீதிமன்ற அமைப்பின் வடிவமும் மக்கள் விரோதமானது. எனவேதான் சொல்கிறோம் இதற்குத் தீர்வு மக்கள் நீதிமன்றம்தான்.

"நீதி" எனும் சொல்லை மட்டும் கேள்விக்குள்ளாக்கவில்லை இந்தக் கடிதம். எது குற்றம் என்ற கேள்வியையும் எழுப்புகிறது. ஒரு குடும்பத்தை நாசமாக்கிய சமூக விரோதியைக் கொல்வதில் என்ன தவறு என்ற கேள்வியை எழுப்புகிறது. குடும்பத்துக்குப் பொருந்தும் இந்த நியாயம் சமூகத்திற்கும் பொருந்தும் என்பதை விளக்கத் தேவையில்லை.
நன்றி புதிய கலாச்சாரம் மார்ச் 2000

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது