Wednesday, March 28, 2007

இவர்களா பகத்சிங்கின் வாரிசுகள் ?வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி, தூக்கு கயிற்றை முத்தமிட்டார் தோழர் பகத்சிங்.

அந்த மாவீரனின் பாதையில் அணி திரண்டு போராட இன்றைய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கும் வேளையில், அவரைக்காட்டி பிழைப்பு நடத்தும் பிழைப்புவாத சிபிஎம் கும்பல் பகத்சிங்கை கேவலப் படுத்தியுள்ளது. அவரின் தியாகத்திற்கு பங்கம் விளைவித்த நிகழ்ச்சி சென்னை கே.கே.நகரில் நடந்துள்ளது.

பகத்சிங்கின் படத்தைப் போட்டு இளைஞர்களைத் திரட்டிக் கட்டப்பஞ்சாயத்து, நீர்மோர் பந்தல், கபடிபோட்டி நடத்தும் இந்திய சனநாயக வாலிபர்சங்கம் (DYFI), பகத்சிங்கின் 76 வது நினைவுநாளை, 100வது நினைவுநாள் என ஊர் முழுக்க சுவரொட்டி ஒட்டியுள்ளனர். தன் இளைஞர் அணிக்கு பகத்சிங்கின் தியாகமோ, போராட்ட அரசியலோ, புரட்சிகர கருத்துகளோ கூட வேண்டாம், நினைவு நாள் கூட சரியாகத் தெரிவிக்க இயலாத நிலையில்தான் CPM உள்ளது.

மேலும் கொடியேற்றி ஏழைகளுக்கு சேலை வழங்கும் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு தரம் தாழ்ந்து போயுள்ளனர்.
இது ஏதோ தற்செயலான சம்பவமல்ல. பிழைப்புவாத கும்பலாக குறுகி போன சிபிஎம் மின் தலைமை எப்படி மார்க்ஸையும், லெனினையும் பூசையறை படமாக்கி அணிகளையும், ஆதரவாளர்களையும், தன் பிழைப்புவாத புதைகுழியில் மூழ்கடித்துள்ளதோ அப்படியே அதன் இளைஞர் அமைப்பும் உள்ளது.

தன் நாட்டு மக்களின் ஏழ்மையை சோஷலிசப் புரட்சி நடத்தி களைய நினைத்த வீரனை இவ்வாறு தரங்கெட்ட குப்பை அரசியலுக்கு (சேலை வழங்குதல் !...அன்னதானம் போடலையோ ?) முன்னிறுத்தும் இந்தக் கூறுகெட்ட குப்பைப் பதர்களை அம்பலப்படுத்தி அப்புறப்படுத்தாமல் இந்நாட்டு மக்களுக்கு விடிவில்லை.

4 comments:

said...

முதலில் இந்த வலைதள வட்டாரத்திற்க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன், புரட்சிகர சக்திகள் ஒவ்வொரு தளத்திலும் ஆலமரமாய் தழைத்து அருகு போல் வேர் விடுவதை நினைத்தால் பூரிப்பாக இருக்கிறது, சரி பதிவிற்கு வருவோம் இங்கயும் ஒரு சி.பி.எம் காரரு சந்திப்புங்கற பேர்ல நாங்கதான உண்மையான கம்யூனிஸ்டுனு சொல்லிகிட்டு திரிஞ்சாரு. நாம அவர பார்த்து போலி கம்யூனிஸ்டுனு சொன்ன அவருக்கு முன்னால டாலரும் பூணூலும் வந்து நம்மகிட்ட மல்லுக்கு நிக்கும். அந்த அளவுக்கு அவரு இணையத்துல புரட்சிகரமா செயல்பட்டாரு.. அந்த நேரத்த பார்த்து ஒரு பார்பனீய பாசிஸ்டு "மார்க்சியமும் அறிவியலும்"னு மார்க்சியத்த திரிச்சி அவதூறு பண்ணி ஒரு பதிவு போட்டான். போய் பதில் சொல்லுங்க உண்மையான கம்யூனிஸ்டு திரு. சந்திப்பு அவர்களேனு லெனின்னு ஒரு தோழர் சொன்னார் ஆனா அந்த சந்திப்பு அதோட எஸ்கேப் ஆனவர்தான் இப்ப சுயமுன்னேற்றம் பற்றி பதிவு போட்டுகிட்டு இருக்குறாரு.. இப்ப நீங்க வேற வந்துட்டீங்களா, பாவம் அவர் பாடு!!!

தோழமையுடன்
ஸ்டாலின்

Anonymous said...

சந்திப்புக்கு
-----------
ஏன் சார் உங்களுக்கு கொஞ்சம் கூட
வெட்கமாக இல்லயா ?

ஏன் ?

என்று கேட்கிறீர்களா !

அந்த அரை டவுசர் நீல்ஸ் கட்டுரைக்கு பதில்
கூறுங்கள் என்று லெனின் என்கிற தோழர் உங்களிடம்
கேட்டாரே உங்களுக்கு நினைவு இல்லையா ?

ஆனால் நீங்கள் அவருடைய கேள்விக்கும் பதில் கூறவில்லை,
அரை டவுசரின் கட்டுரைக்கும் பதில் கூறவில்லை.
ஏன் ?
எங்காவது காட்டுக்குள் போய் பதுங்கிக்கொண்டீர்களா ?

சரி பரவாயில்லை வெளியே வாருங்கள்

நெஞ்சில் துனிவுள்ள வீரர்கள்,
தோழர் லெனினுடைய மாணவர்கள்,
கம்யூனிஸ்டுகள் பதில் கூறியிருக்கிறார்கள்
பாருங்கள்.

சரி,சரி வெட்கப்படாமல் வந்து கொஞ்சம்
எட்டிப்பாருங்கள், அப்படியே
உங்களுடைய கருத்துக்களையும் கூறுங்கள்

Anonymous said...

ச்சீ,ச்சீ வெட்கக்கேடு

கூலிக்கு மாரடிக்கும் சந்திப்பு !

வெட்கக்கேடு, வெட்கக்கேடு


பாவெல்

Anonymous said...

இன்னா தலிவா யாரு இன்னா கேட்டாலும் ஒரே
மாரி சொல்லிகினே கீர அரசு பால்ராஜ் கேட்ட
கேள்விக்கு பதிலே சொல்லாம எஸ்கேப்பு ஆயிட்ட.

அப்பால
நான் தான் உண்மையான
கம்னிஸ்டு,கம்னிஸ்டுனு வாயி வலிக்க
நீயே கத்திகினுருக்க,
அங்க இன்னாடானா
ஒரு r s s அரை டவுசரு கம்யூனிச்டுகளயும்,
மர்க்சையும் திட்டிக்கினுருக்கான்,
வேலைக்காகாதுன்ரான்,
ஒன்னான்ட இத்த
அன்னிக்கே லெனின் தோழரும் சொல்லிக்கினாரு
ஆனாலும் நீ இத்த கண்டுக்கவே இல்லியே
இன்னா தலிவா மேட்டரு.
ஒன் வாய கொஜ்சம் தொரயேன்
யெல்லாரும் காத்திகினுருக்காங்க

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது