Showing posts with label .போலிச் சுதந்திரம். Show all posts
Showing posts with label .போலிச் சுதந்திரம். Show all posts
Thursday, August 30, 2007
Wednesday, August 15, 2007
இலவச சேலை தூக்குக் கயிரென்றால் இந்திய ஜனநாயகம்தான் தூக்குமரம் !
இந்தச் சோகத்தின் முத்திரை
எந்தத் சின்னத்தின் மீது பதியும்?
இந்தக் கண்ணீரின் வெம்மை
எந்தக் கவிஞனின் இதயத்தைத் தீண்டும் ?
இந்த கண்ணகியின் கோபம்
எந்த மாநகரைத் தீக்கிரையாக்கும்?
தாமரை ஒரு சின்னம்
வாஜ்பாய் ஒரு கவிஞன்
லக்னோ ஒரு மாநகரம்
ஒன்று மட்டுமா?
இந்தச் சிறுமி ஒருத்தி மட்டுமா?
கண்ணீரும் கதறலும்வற்றிப் போன இந்தத் தேசம்
வாக்குசீட்டில் மிதந்தா கரையேறிவிடும்?
மொழியும் உணர்ச்சியும் மக்கிப் போன
இந்த மண்ணை
உயிர்ப்பிக்கவல்ல ஒரு மருந்து , ஒரே மருந்து -
வெடிமருந்து !
இலவச சேலை தூக்குக் கயிரென்றால்
இந்திய ஜனநாயகம்தான்
தூக்குமரம்.
2004 ஆம் ஆண்டு தேர்தலின் போது லக்னோ தொகுதியில் வாஜ்பாய் சார்பில் இலவச சேலை வழங்கும் பொழுது 20க்கும் மேற்பட்ட மக்கள் நெரிசலில் கொல்லப்பட்டனர்.
அதையொட்டி புதிய ஜனநாயகம் பத்திரிக்கையில் வந்த தலையங்கம்
Posted by
ஸ்பார்டகஸ்
at
11:57 AM
1 comments
Labels: .போலிச் சுதந்திரம், இந்திய ஜனநாயகம்
60 ஆண்டு கால சுதந்திரம் யாருடைய நலன்களுக்காக பயன்பட்டு இருக்கிறது !!
- 36 இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ 7.83 லட்சம் கோடி
- 83 கோடி இந்தியர்களின் தினசரி வருமானம் ரூ 20
இந்த 60 ஆண்டு கால சுதந்திரம் யாருடைய நலனுக்காக பயன்பட்டு இருக்கிறது என்பதை மேற்கண்ட உண்மைகளில் இருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது.
இது போலிச் சுதந்திரம் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் தேவை.
Posted by
ஸ்பார்டகஸ்
at
8:44 AM
2
comments
Labels: .போலிச் சுதந்திரம், இன்றைய இந்தியா
Tuesday, August 14, 2007
60 ஆண்டு கால போலிச் சுதந்திரத்தின் யோக்கியதை !!
1947இல் நாம் பெற்றது சுதந்திரமல்ல; அது போலி சுதந்திரம். வெள்ளைக்காரன் இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படவில்லை; தனது விசுவாசிகளான காங்கிரசிடமும் முஸ்லிம் லீகிடமும் அதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுத்தான். அந்தப் போலி சுதந்திரத்துக்கு வயது 60.
இன்று வாயளவில் சுதந்திரம் என்று பீற்றிக் கொள்வதற்குக் கூட வழியில்லாமல், வெளிப்படையாகவே நம் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன, ஏகாதிபத்திய வல்லரசுகள். தற்போது நம்மீது திணிக்கப்படும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையின் உண்மையான பொருள் மறுகாலனியாதிக்கம் என்பதுதான்.
கடந்த காலத்தின் காலனியாதிக்கக் கொடுமைகளைப் பூதக் கண்ணாடியால் பெருக்கிக் காட்டியதைப் போல இன்று நம் கண்முன்னே காட்சி தருகிறது மறுகாலனியாதிக்கம்.
..
83 கோடி மக்களுக்கு தினசரி வருமானம் ரூபாய் 20
..
இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்:அடிமைக்கு எதற்கு அணு ஆயுதம்?
..
இந்திய – அமெரிக்க ஆணுசக்தி ஒப்பந்தம்:அமெரிக்க அடிவருடிகளின் அரிதாரம் கலைந்தது
..
அமெரிக்க விசுவாசமே அடிமையின் சுவாசம்!
..
எங்க நாடு ஆகுது வல்லரசு அமெரிக்கா போலே...
..
கல்வி கொடுக்க வக்கில்ல என்னடா கவுர்ன்மென்ட்டு !!
..
நாடாளுமன்றம் விற்பனைக்கு! மலிவு எம்;பி.க்கள் தயார்! இந்திய நாடாளுமன்றம் ஊழலின் ஊற்றுக்கண்
..
சில்லறை வணிகம் : மறுகாலனியாதிக்கத்தின் அடுத்த பலிகடா
..
விவசாயிகளைக் காவு கொள்ளும் தாராளமயக் கொள்கை
..
பருத்தி விவசாயிகள் - பரிசோதனைச்சாலை எலிகளா?
..
வருகிறது சிறப்புப் பொருளாதார மண்டலம் (SENs) இறுகுகிறது மறுகாலனிய சுருக்கு!
..
கருணாநிதி – அன்புமணி – புத்ததேவ் 'கோக்"கின் புதிய அடியாட்கள்
..
விஜயகாந்தின் அரசியல்கவர்ச்சி பாதிகாவி பாதி கருப்புப் பணம் மீதி
..
பங்குச் சந்தை வீழ்ச்சி தேசியத் துயரமா?
..
சென்னை மாநகர போலீசு ஆங்கிலேய காலனியாதிக்கம் தந்த அவமானச் சின்னம்

போலி சுதந்திரத்தைத் திரை கிழிப்போம்!
மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!
Posted by
ஸ்பார்டகஸ்
at
12:11 AM
1 comments
Labels: .போலிச் சுதந்திரம், மறுகாலனியாக்கம்
Saturday, August 11, 2007
ஜனநாயம் எனபது லட்சியமா, வழிமுறையா?
"சோறா - சுதந்திரமா" என்ற கேள்விக்கு "சோறு என்று பதிலளிக்கிறது ஏழைகளின் இந்தியா.ஆளும் வர்க்கமோ "சோறு போட முடியாது,'சுதந்திரம்' தான் தருவேன்" என்று முழங்குகிறது.
"சொத்து சேர்ப்பவன் தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றவன்; தனி நபரின் மகிழ்ச்சிதான் உயர்ந்த லட்சியம். இந்தப் போட்டியில் இடறிவிழுந்த திறமையற்ற மனிதர்கள்தான் ஏழைகள். அவர்களுக்காக நாம் இரக்கம் காட்டமுடியாது. திறமையின்மையின் விளைவுதான் ஏழ்மை" என்கிறது முதலாளித்துவம்.
ஆடுகளை தின்பதற்கு ஓநாய்கள் 'இயற்கையாகவே' பெற்றிருக்கும் சுதந்திரத்தைதான் முதலாளித்துவத் தனிநபர் சுதந்திரம் வலியுறுத்துகிறது.
..
முழு கட்டுரை கிழே இணைக்கப்பட்டுள்ளது
************************************************
************************************************
..
..
Posted by
ஸ்பார்டகஸ்
at
9:36 PM
0
comments
Labels: .போலிச் சுதந்திரம், இந்திய ஜனநாயகம்
Subscribe to:
Posts (Atom)