Tuesday, August 14, 2007

60 ஆண்டு கால போலிச் சுதந்திரத்தின் யோக்கியதை !!

1947இல் நாம் பெற்றது சுதந்திரமல்ல; அது போலி சுதந்திரம். வெள்ளைக்காரன் இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படவில்லை; தனது விசுவாசிகளான காங்கிரசிடமும் முஸ்லிம் லீகிடமும் அதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுத்தான். அந்தப் போலி சுதந்திரத்துக்கு வயது 60.

இன்று வாயளவில் சுதந்திரம் என்று பீற்றிக் கொள்வதற்குக் கூட வழியில்லாமல், வெளிப்படையாகவே நம் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன, ஏகாதிபத்திய வல்லரசுகள். தற்போது நம்மீது திணிக்கப்படும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையின் உண்மையான பொருள் மறுகாலனியாதிக்கம் என்பதுதான்.

கடந்த காலத்தின் காலனியாதிக்கக் கொடுமைகளைப் பூதக் கண்ணாடியால் பெருக்கிக் காட்டியதைப் போல இன்று நம் கண்முன்னே காட்சி தருகிறது மறுகாலனியாதிக்கம்.
..
83 கோடி மக்களுக்கு தினசரி வருமானம் ரூபாய் 20
..
இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்:அடிமைக்கு எதற்கு அணு ஆயுதம்?
..
இந்திய – அமெரிக்க ஆணுசக்தி ஒப்பந்தம்:அமெரிக்க அடிவருடிகளின் அரிதாரம் கலைந்தது
..
அமெரிக்க விசுவாசமே அடிமையின் சுவாசம்!
..
எங்க நாடு ஆகுது வல்லரசு அமெரிக்கா போலே...
..
கல்வி கொடுக்க வக்கில்ல என்னடா கவுர்ன்மென்ட்டு !!
..
நாடாளுமன்றம் விற்பனைக்கு! மலிவு எம்;பி.க்கள் தயார்! இந்திய நாடாளுமன்றம் ஊழலின் ஊற்றுக்கண்
..
சில்லறை வணிகம் : மறுகாலனியாதிக்கத்தின் அடுத்த பலிகடா
..
விவசாயிகளைக் காவு கொள்ளும் தாராளமயக் கொள்கை
..
பருத்தி விவசாயிகள் - பரிசோதனைச்சாலை எலிகளா?
..
வருகிறது சிறப்புப் பொருளாதார மண்டலம் (SENs) இறுகுகிறது மறுகாலனிய சுருக்கு!
..
கருணாநிதி – அன்புமணி – புத்ததேவ் 'கோக்"கின் புதிய அடியாட்கள்
..
விஜயகாந்தின் அரசியல்கவர்ச்சி பாதிகாவி பாதி கருப்புப் பணம் மீதி
..
பங்குச் சந்தை வீழ்ச்சி தேசியத் துயரமா?
..
சென்னை மாநகர போலீசு ஆங்கிலேய காலனியாதிக்கம் தந்த அவமானச் சின்னம்
..
போலி சுதந்திரத்தைத் திரை கிழிப்போம்!
மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!

1 comment:

மாசிலா said...

சுதந்திரமாம் சுதந்திரம். எவனுக்குயா சுதந்திரம்?

கொள்ளை அடிக்கிறவனுக்கு மட்டும்தான் சுதந்திரம்.

மத்தது எல்லாம் ச்சும்மா உல்டா!

ஏழைங்க பசிக்கு சாவுறாங்க. விவசாயிங்க தற்கொலை. தலித்துங்க மேல் இன்னும் கொலைவெறி அட்டூழியம்.

அந்நிய முதலைக்கு முந்தானை விரிப்பு.

அமெரிக்காவின் கைகூலி.

மதத்தின் பிடியின் ஆட்சி.

அநியாயம் செய்யும் பாதுகாப்புத்துறை.

கந்துவட்டி மாஃபியா கும்பல்களின் அநியாயம்.

ஏழைகள் ஏழைகளாகவெ இருக்காங்க. பணக்காரன் மேலும் மேலும் பணக்காரனா ஆகினே போரான்.

ஊடகத்திற்கு அடிமைப்பட்ட சமுதாயம்.

கலாச்சார பண்பாட்டு அழிவுகள்.

சாதி பிரச்சினைகள்.


இதுதான் அறுபது வருட சுதந்திரத்தின் அழகா.

இதற்குத்தான், சுதந்திர போராட்டத்தில் எண்ணற்ற மனிதர்கள் தங்களது உயிர்களை மாய்த்தார்களா?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது