இலவச சேலை தூக்குக் கயிரென்றால் இந்திய ஜனநாயகம்தான் தூக்குமரம் !
இந்தச் சோகத்தின் முத்திரை
எந்தத் சின்னத்தின் மீது பதியும்?
இந்தக் கண்ணீரின் வெம்மை
எந்தக் கவிஞனின் இதயத்தைத் தீண்டும் ?
இந்த கண்ணகியின் கோபம்
எந்த மாநகரைத் தீக்கிரையாக்கும்?
தாமரை ஒரு சின்னம்
வாஜ்பாய் ஒரு கவிஞன்
லக்னோ ஒரு மாநகரம்
ஒன்று மட்டுமா?
இந்தச் சிறுமி ஒருத்தி மட்டுமா?
கண்ணீரும் கதறலும்வற்றிப் போன இந்தத் தேசம்
வாக்குசீட்டில் மிதந்தா கரையேறிவிடும்?
மொழியும் உணர்ச்சியும் மக்கிப் போன
இந்த மண்ணை
உயிர்ப்பிக்கவல்ல ஒரு மருந்து , ஒரே மருந்து -
வெடிமருந்து !
இலவச சேலை தூக்குக் கயிரென்றால்
இந்திய ஜனநாயகம்தான்
தூக்குமரம்.
2004 ஆம் ஆண்டு தேர்தலின் போது லக்னோ தொகுதியில் வாஜ்பாய் சார்பில் இலவச சேலை வழங்கும் பொழுது 20க்கும் மேற்பட்ட மக்கள் நெரிசலில் கொல்லப்பட்டனர்.
அதையொட்டி புதிய ஜனநாயகம் பத்திரிக்கையில் வந்த தலையங்கம்
1 comment:
மிகவும் சோகமான நிகழ்ச்சி.
வாஜ்பாயி எல்லாம் ஒரு தலைவனா?
இந்து மதவாதிகளுக்கு கூஜா தூக்கற நாதாரி.
சும்மா இருந்த மக்களுக்கு இலவச சேலை தர்ரேன்னு உசுப்பேத்திவிட்டு இருபது பேர கொலை செய்திருக்குற கொலகாரப் பாவி.
Post a Comment