எதுங்கடா சமத்துவம் ?
காக்கி சட்டை மேசட்டை
போட்டுகிட்டு
கார்பரேஷன்ல வேல பாக்குற
சுந்தரேசு அண்ணனுக்கு மட்டுந்தான்
பீ,மூத்திரம் அள்ளுர வேல.
பழையபடியே....
.
பழைய சோறு கொழம்பு
வாங்குறதுக் கோசரம்
ஐயர் போகவா
மேகலை நகர் முத்தம்மா....
அதுவும்
புழக்கடை பக்கமா போனாத்தான்.
ஊருக்குள்ள
பொணம் விழுந்தா
வள்ளுவந் தெரு
வாசகி புருஷனுக்குச் சேதி வந்துடும்
எரிக்கவோ...புதைக்கவோ...
எப்பவுமே.
முதலியாரு
மூணு வயசு மவன கண்டாலும்
இடுப்புக்குத் துண்டு போகனும்
இல்லன்னா செருப்படிதான்
இப்பவும்
ச்சீசீ...
பெரிசா பீத்திக்காத
சமத்துவபுரமுன்னு.
-நீரை.ப.மகேந்திரன்
1 comment:
//இல்லன்னா செருப்படிதான் இப்பவும் ச்சீசீ...பெரிசா பீத்திக்காத சமத்துவபுரமுன்னு.//
இதைச் சிறிய ஹைக்கூ கவிதையாக எங்கோ படித்திருக்கிறேன்.
தெருக்கூட்டவும், சாக்கடையை அள்ளவும் சமத்துவபுரத்திலும் அதே கருப்பன்.
- என்ற பொருளில், வரிகள் முழுவதும் நினைவு இல்லை.
Post a Comment