Tuesday, August 28, 2007

அணுசக்தி ஒப்பந்தத்தைத் தூக்கியெறிவோம்! ஆகஸ்டு 29, 2007 - தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !

சென்னையில்
மாலை 5 மணி
மெமோரியல் ஹால்
G.H எதிரில்

அனைவரும் வருக !

அடிமையாக மாட்டோம்,அடியாளாக மாட்டோம் !

மறுகாலனியாக்கம் என்ற படுகுழிக்குள் இந்தியாவைத் தள்ளிய காட் ஒப்பந்தமும் இப்படித்தான் நம் மீது திணிக்கப்பட்டது, 1994-இல் அமைச்சரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெரியாமல் ஒரு அதிகாரிகள் குழுதான் அதிலும் கையெழுத்திட்டது. பிறகு நாடாளுமன்றம் அதற்குத் தலையாட்டியது. அந்த மறுகாலனியாக்கம்தான் இன்று நாள் தோறும் மக்களை மரணக்குழியில் தள்ளி வருகிறது.

மறுகாலனியாதிக்க அடிமைத்தத்தின் கோரமான உச்சக் கட்டம்தான் இந்த அனுசக்தி ஒப்பந்தமும் இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தமும்! மறுகாலனியாதிக்கக் கொள்கை பொதுத்துறைகளைப் பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரைவார்த்திருக்கிறது. விளைநிலங்களைப் பிடுங்கி பன்னாட்டு முதலாளிகளுக்குப் பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறது. விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளியிருக்கிறது. இப்போது அது நம்முடைய மானத்தையும், பெயரளவு இறையாண்மையையும் கூடத் காவு கேட்கிறது. ஆக்கிரமிப்பு வெறி பிடித்த அமெரிக்க வல்லரசுக்கு நம்மையும் நம் நாட்டையும் அடியாளாக மாறச் சொல்கிறது. இதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? இந்த அவமானத்தைச் சகித்துச் கொள்ளப் போகிறோமா?

நாட்டுபற்றும் தன்மான உணர்ச்சியும் கொண்ட ஒவ்வொரு வரும் சிந்திக்க வேண்டும். இந்தத் துரோக ஒப்பந்தத்தை முறியடிக்கக் களத்தில் இறங்க வேண்டும்.
  • அணுசக்தி ஒப்பந்தத்தைத் தூக்கியெறிவோம்!
  • அமெரிக்க - இந்திய இராணுவ ஒப்பந்தத்தை கிழித்தெறிவோம்!
  • அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பின் ஆசியத்தளமாக இந்தியாவை மாற்றியமைப்போம்!

Related:


அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!
..
அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் ! அடிமை அடியாள் அணுசக்தி !!

123 ஒப்பந்தமும் போலி கம்யூனிஸ்டுகளின் நீலிக் கண்ணீரும் !

1 comment:

பாவெல் said...

தோழர் கட்டபொம்மன்

எதுக்கு இந்த 'சந்திப்பு'
கோமாளிக்கு 'தோழர்'
என்ற மதிப்புக்குறிய
வார்த்தைகளையெல்லாம்
பயன் படுத்துகிறீர்கள்?

சந்திப்பு ஒரு கூலிக்கு
மாரடிக்கும் "அப்பாவி"
அவருக்கு டாடாஸ்டுகளின்
நிலைபாடுகளை கூட சரியாக
விளக்கி பேசத் தெரியாது,
கேட்டு தான் சொல்வார்.
CPM கட்சியில் உள்ள உண்மையான
தொன்டனுடைய உணர்வை,
அந்த தலமையின் துரோகத்தனத்தை
அறியாத 'தோழர்களின்' உணர்வை நாம்
சந்திப்பிடம் எதிர்பார்க்க கூடாது.
ஏனெனில் சந்திப்பு CPM என்கிற தனியார்
நிறுவனத்தில் "தொழிலாளி"யாக பணிபுரிகிறார்.

எனவே அவருக்கு தெரிந்த
"அமெரிக்க ஏஜென்ட், காடு,துப்பாக்கி, நக்சலைட்"
போன்ற வார்த்தகளை மீண்டும் மீண்டும்
சொல்லிக்கொண்டே இருப்பார் அப்ப தானே அவருக்கு
"கூலி" கிடைக்கும்.

எனவே நான் சொல்ல வருவது என்ன என்றால்,
அண்ணன் சந்திப்புக்கு நாம் புரிய வைப்பதற்கு
ஒன்றுமே இல்லை என்பது தான் !

ஏம்பா சந்திப்பு
நீம் பாட்டுக்கு ஏன் தத்துவம், நடைமுறைன்னெல்லாம்
பேசிக்கிட்டிருக்க,
இதெல்லாம் உனக்கே
ரொம்ப ஓவரா தெரியல ?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது