Thursday, June 14, 2007

கஞ்சிக்கு மக்கள் மிதிபடும் நாட்டில் இவனுக்கு என்னடா பால்குடம்?


இது கேடிப்பய ரஜினியின் பாபா வந்த போது அவனையும் அவனின் பக்த கேடிகளையும் நேருக்கு நேர் சந்தித்த புரட்சிகர சக்திகளின் முழக்கங்களில் ஒன்று.
.
பாபா வெளியிடப்பட்ட ஆகஸ்டு 15 (2002) தமிழகத்தின் சூழல் என்னவென்பதை தெரியாத சிலருக்காக நினைவுபடுத்திக் கொள்வோம். அன்று நெசவாளர்களுகுக் கஞ்சித் தொட்டி வைத்த தி.மு.க.வினர், முட்டை பிரியாணி போட்ட அ.தி.மு.கவினர்; ஆங்காங்கே போராடிக் கொண்டிருக்கும் நெசவாளர்கள்.
.
காவேரியில் தண்ணீர் விடாமல் கர்நாடகம் அடாவடி செய்து கொண்டிருந்தது.தஞ்சை பஞ்சபூமியாகி விவசாயிகள் எலிக்கறி தின்னும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். தமிழக மெங்கும் ஆசிரியர் போராட்டம் , வழக்குரைஞர் போராட்டம்.

இந்த சூழலில் தமிழகப் பத்திரிக்கைகளில் பாபா தான் அட்டைப்படக் கட்டுரை அல்லது முக்கிய செய்தி. இதைவிடப் பெரிய பூச்செண்டை பாபாவைத் தவிர யாரும் ஜெயலலிதாவுக்கு வழங்கியிருக்க முடியாது. அந்த அளவிற்கு இருட்டடிப்பு செய்யப்பட்டன மக்கள் பிரச்சினைகள்.

பாபா வெளியீட்டிற்கு இரண்டு நாட்கள் முன் ராமதாஸ் ரஜினியைப் பற்றித் தெரிவித்த விமர்சனம் பத்திரிகைகளில் பெற்ற முக்கியத்துவத்தைக் காட்டிலும், ராமதாசுக்கு ரஜினி ரசிகர்கள் தமிழகமெங்கும் கொடும்பாவி கொளுத் திய செய்திதான் முக்கியத்துவம் பெற்றது. ரசிகர்கள் "கொத்தளிப்பு - ஆவேசம்" என்றும் ரஜினி மட்டும் தடுத்து நிறுத்தாமலிருந்தால் ரசிகர்கள் தமிழ்நாட்டையே கொளுத்தி விடுவார்கள் என்பது போலவும் ஒரு பயங்கரத் தோற்றத்தையும் உருவாக்கின பத்திரிக்கைகள்.

இதற்கிடையே ஆகஸ்டு 14 ம் தேதியன்று போலிச் சுதந்திரத்தை அம்பலப்படுத்தி ஆர்ப்பாட்டமொன்றை நடத்திருந்த திருச்சி நகர ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு தோழர்கள். ஆகஸ்டு 15ம் தேதியன்று வெளிவந்த பாபாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டங்க்ளை நடத்தினர்.

இதற்காக பாபாவை அம்பலப்படுத்தி 3500 சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டன. இவற்றை 14 ம் தேதி இரவு ஒட்டுவதைக் காட்டிலும் காலையில் ஒட்டுவதன் மூலம்தான் பக்த கேடிகளை ' நேருக்கு நேர் சந்திக்கும்" வாய்ப்பு கிடைக்கும் என்பதாலும், ரஜினி ரசிகர்கள் எனும் "மாபெரும் சக்தி" பற்றி மக்களிடம் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பிரமையை உடைக்க முடியும் என்பதாலும் ஆகஸ்டு 15 அன்று காலையில் ஒட்டுவதென முடிவு செய்தனர்.

செஞ்சட்டையணிந்த தோழர்கள் பல குழுக்களாகப் பிரிந்து திருச்சி நகரின் எல்லாப் பேருந்துகளிலும் சுவரொட்டிகளை ஒட்டினர். ரசிகர்கள் நின்று படித்து விட்டு மவுனமாக இடத்தை விட்ட்டு அகன்றனர்.

ஒட்டும்போது வம்புக்கு வந்தாலோ ஒட்டிய பிறகு கிழித்தாலோ என்ன நடக்கும் என்பது சுவரொட்டியிலேயே அச்சிடப்பட்டிருந்தது.படித்துப் புரிந்து கொள்ளத் தவறும் ரசிகர்கள் பார்த்தே புரிந்து கொள்ள ஏதுவாக உரிய தயாரிப்புடன் சென்றனர் தோழர்கள். "ராமதாசுக்கு தமிழகமெங்கும் கொடும்பாவி கொளுத்தினார்கள், கொதிக்கிறார்கள், கொந்தளிக்கிறார்கள்" என்று பத்திரிகைகளால் வருணிக்கப்பட்ட ரசிகர்கள் ஒரு இடத்திலும் மூச்சு விடவில்லை.

தேநீர்க் கடைகள், தெருக்கள் என்று நகரின் உட்பகுதிகளெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுருந்தன. ஓரேயொரு தெருவில் சுவரொட்டியைக் கிழித்த ரசிகர் கூட்டத்தைத் "தக்கபடி கவனித்து" கையில் பசைவாளியையும் சுவரொட்டிகளையும் கொடுத்து அவர்களையே ஒட்டச் செய்தனர் தோழர்கள்.

புதிய கலாச்சாரத்தில் செப் 2002 வந்த "பாபாவும் பக்தகேடிகளும்" கட்டுரையில் இருந்து....இதனுடன்
  • ரசிகர்கள் விடலைகளா ? விபரீதங்களா?
  • பாட்ஷா பாபாவான கதை
என்ற பகுதிகள் உள்ளடங்கிய இதன் முழு கட்டுரையும் கிழே க்ளிக் செய்து படிக்கவும்
*************************************************************************
.
.
.
.
.
**************************************************************************
இதனுடன் தொடர்புடைய கட்டுரை
***************************************

1 comment:

Anonymous said...

These are really Articles... Keep it up...

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது