Monday, August 20, 2007

WTO என்றொரு ஆக்டோபஸ் !

ஓடு! ஓடு!
கடித்துக் குதறிவிடும்
ஓடு !
உயிர் பிழைக்கும் ஆசையில்லையா?
ஓடு ! ஓடு ! ஓடிவிடு !

நீ நினைப்பதுபோல்
அது சைவமில்லை
'இவர்களை' நம்பி நிற்காதே! ஓடு !
.
'வெள்ளைப் புறா'
சமாதான சின்னமில்லை
அதன் கூட்டுக்குள்
எப்போதும் சதைத்துணுக்குகள்
ஓடு ! ஓடு ! ஓடிவிடு !
.
புற்றுகளிலிருந்து
எறும்பு பிடித்துண்ணும்
குரங்குகளைக் கண்டதுண்டா?
கையில் ஒரு குச்சி
அதுதானிந்த அரசு
ஓடு ! ஓடு !
.
உன் தலைமயிருக்கு
அவனிடம் இருக்கிறது
காப்புரிமை.
மொட்டையடிக்க முயற்சி செய்யாதே!
கத்தியும்
அவனிடமே இருக்கிறது.
ஓடு ! ஓடு ! ஓடிவிடு !
.
இனியெல்லாம் தனியார்மயம்தான்
வலதுகை ஒருவருக்கு
இடதுகை ஒருவருக்கு
விரல்கள் பத்தும்
வேறொருவருக்கு
சரி!
நகங்களுக்கு ஆயுள் காப்பீடு எடுத்துவிட்டாயா?
நகங்களில் அழுக்கெடுக்க
'புதிதாய்' அறிமுகமாகியிருக்கிறது.
ஐ.எஸ்.ஐ ம் முத்திரையுடன்
விலை வெறும்
ஐம்பதே ரூபாய்தான்!
வாங்கிவிட்டாயா?
.
ஏய்? இதென்ன?
காதுகளை அறுத்துப் போட்டுவிட்டு
ஓடுகிறாய்!
ஓடு ! ஓடு !
.
எங்கேதான் போகமுடியும்?
பூமியின் விளிம்புக்கு?
பிரபஞ்சத்தின் எல்லைக்கு?
ஓடு ! ஓடு !
.
எல்லா வழிகளும்
அடைத்து விட்டன.
தவிர்க்க முடியாதினி!
.
மூடிய அறைக்குள்
மாட்டிய பூனை
என்ன செய்யும்?
..
அதுகூடவா
நம்மால் முடியாது?
சொல்! தொழிலாலர் வர்க்கமே!

.
-தீபன்

புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2000

1 comment:

நட்டகுழியார் said...

>உன் தலைமயிருக்கு
>அவனிடம் இருக்கிறது காப்புரிமை.
>மொட்டையடிக்க முயற்சி செய்யாதே!
>கத்தியும்
>அவனிடமே இருக்கிறது.
>ஓடு ! ஓடு ! ஓடிவிடு

மிக நன்று.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது